'ஒல்லியாக இருப்பதை விடவும் கட்டுடலுடன் இருப்பதே முக்கியம்'

'ஒல்லியாக இருப்பதை விடவும் கட்டுடலுடன் இருப்பதே முக்கியம்'

2 mins read
de334565-3f4a-4749-9369-a27ba2bb16b7
தனது இந்த குத்துச்சண்டைப் பயிற்சி முறை மன உளைச்சலைக் குறைக்கும் மருந்தாக உள்ளதாகவும் ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டுள்ளார். படம்: இன்ஸ்டகிராம்/ராஷ்மிகா மந்தனா -

ஒல்­லி­யாக இருப்­பதைவிட­வும் உடற்­கட்­டு­ட­னும் ஆரோக்­கியமாக­வும் இருப்­பது மிக­வும் முக்­கி­யம் என்று சொல்­கி­றார் நடிகை ராஷ்­மிகா மந்­தனா.

சமூக வலைத்­த­ளங்­களில் ராஷ்­மிகா தனது கட்டுடல் பயிற்சிகள் குறித்த படங்­களைப் பகிர்ந்து உத்வேகம் அளித்து வருகிறார்.

கொரோனா தருணம் உள்பட எந்த ஒரு சமயத்திலும் சலிப்படை யாமல் தொடர்ந்து ஆரோக்­கி­யத்­திற்கு முன்­னு­ரிமை அளித்து வரு கிறார் ராஷ்­மிகா.

வாரத்­திற்கு நான்கு முறை உடற் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

குத்துச்சண்டை, கயிற்றாட்டம், நட­னம், நீச்­சல், ஸ்பின்­னிங், யோகா, ேவக நடை உள்ளிட்ட மேலும் பல பயிற்சி முறைகளையும் தவ­றா­மல் கடைப்­பிடித்து வரு­கி­றார்.

இதயத்திற்கான இந்த நட­வ­டிக்­கை­களைத் தவிர, தசைகளுக்கான எடைப் பயிற்­சி­யை­யும் அவர் மேற்கொண்டு வருவதாக 'இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

உணவு முறை; அழகு ரகசியம்

ராஷ்­மிகா மந்­தனா தனது உட­லுக்­கு ஏற்ற உணவுக் கட்டுப்பாட் டைக் கடைப்­பி­டிப்­ப­தால், நல்ல கட்டுடலுடனும் ஆரோக்­கி­ய­மா­க­வும் இருக்­கி­றார். அண்மையில் சைவ உண­வு முறைக்கு மாறிய இவர், தின­மும் ஒரு லிட்­டர் தண்ணீர் குடிப்பதுடன் தனது பொழுதைத் தொடங்­கு­கி­றார்.

இந்த நீருடன் ஆப்­பிள் சிடார் வினி­கரை சேர்க்­கு­மாறு அவ­ரது உண­வி­யல் நிபு­ணர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னை வறட்சியின்றி வைத்­தி­ருப்­ப­தை­யும் நிறைய தண்­ணீர் குடிப்­ப­தை­யும் எப்­போ­தும் உறு­தி­செய்­து வரும் இவர், மதிய உண­விற்கு தென்­னிந்­திய உணவு வகை­களை நாடுகி­றார். இருப்­பி­னும், அரி­சியைத் தவிர்த்து விடுகிறார். இரவு உண­விற்கு இனிப்பு உருளைக்கி­ழங்கு, இல­வங்­கப்­பட்டை, காய்­கறி சூப் அல்­லது பச்சைப் பழங்­களைச் சாப்­பிட விரும்­பு­கி­றார்.

அழ­கான தோலின் ரக­சி­யம்

ராஷ்­மிகா தனது தோல், முடி அழகைப் பரா­ம­ரிக்­கும் பொருட்டு, ஒவ்­வோர் இர­வும் படுக்­கைக்­குச் செல்லும்முன், 'கிளன்­சிங், டோனிங், மாய்ஸ்­ட­ரை­சிங்' ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய தோல் பரா­மரிப்பு பழக்கவழக்­கத்­தைப் பின்­பற்றுகிறார்.

தினமும் 'சன்ஸ்­கிரீன்' பயன்­படுத்­து­கி­றார். இருப்பினும், முடிந்­த­வரை இயற்­கை­யு­டன் நெருக்­க­மாக இருக்­கவே விரும்புவதாகவும் முடி பரா­ம­ரிப்பு, தோல் பரா­ம­ரிப்­புக்கு இயற்கைப் பொருள்க­ளையே அதிகம் நாடுவதாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.