ஒல்லியாக இருப்பதைவிடவும் உடற்கட்டுடனும் ஆரோக்கியமாகவும் இருப்பது மிகவும் முக்கியம் என்று சொல்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சமூக வலைத்தளங்களில் ராஷ்மிகா தனது கட்டுடல் பயிற்சிகள் குறித்த படங்களைப் பகிர்ந்து உத்வேகம் அளித்து வருகிறார்.
கொரோனா தருணம் உள்பட எந்த ஒரு சமயத்திலும் சலிப்படை யாமல் தொடர்ந்து ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து வரு கிறார் ராஷ்மிகா.
வாரத்திற்கு நான்கு முறை உடற் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
குத்துச்சண்டை, கயிற்றாட்டம், நடனம், நீச்சல், ஸ்பின்னிங், யோகா, ேவக நடை உள்ளிட்ட மேலும் பல பயிற்சி முறைகளையும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.
இதயத்திற்கான இந்த நடவடிக்கைகளைத் தவிர, தசைகளுக்கான எடைப் பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வருவதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
உணவு முறை; அழகு ரகசியம்
ராஷ்மிகா மந்தனா தனது உடலுக்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாட் டைக் கடைப்பிடிப்பதால், நல்ல கட்டுடலுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். அண்மையில் சைவ உணவு முறைக்கு மாறிய இவர், தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதுடன் தனது பொழுதைத் தொடங்குகிறார்.
இந்த நீருடன் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்க்குமாறு அவரது உணவியல் நிபுணர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை வறட்சியின்றி வைத்திருப்பதையும் நிறைய தண்ணீர் குடிப்பதையும் எப்போதும் உறுதிசெய்து வரும் இவர், மதிய உணவிற்கு தென்னிந்திய உணவு வகைகளை நாடுகிறார். இருப்பினும், அரிசியைத் தவிர்த்து விடுகிறார். இரவு உணவிற்கு இனிப்பு உருளைக்கிழங்கு, இலவங்கப்பட்டை, காய்கறி சூப் அல்லது பச்சைப் பழங்களைச் சாப்பிட விரும்புகிறார்.
அழகான தோலின் ரகசியம்
ராஷ்மிகா தனது தோல், முடி அழகைப் பராமரிக்கும் பொருட்டு, ஒவ்வோர் இரவும் படுக்கைக்குச் செல்லும்முன், 'கிளன்சிங், டோனிங், மாய்ஸ்டரைசிங்' ஆகியவற்றை உள்ளடக்கிய தோல் பராமரிப்பு பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்.
தினமும் 'சன்ஸ்கிரீன்' பயன்படுத்துகிறார். இருப்பினும், முடிந்தவரை இயற்கையுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புவதாகவும் முடி பராமரிப்பு, தோல் பராமரிப்புக்கு இயற்கைப் பொருள்களையே அதிகம் நாடுவதாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.

