தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

40 வயதுக்கு மேல் நாளும் ஒரு முட்டை

2 mins read
2adf75eb-8594-44e5-849e-4daa6e86bc3b
-
multi-img1 of 2

மனித உட­லுக்­குத் தேவை­யான நல்ல ஊட்­டச்­சத்­து­கள் முட்­டை­யில் நிறைந்துள்ளன. இருப்பினும், ஒரு குறிப்­பிட்ட வய­திற்­குப் பிற­கும் முட்டை­யைச் சேர்த்­துக்­கொள்ள லாமா எனும் சந்தேகம் இன்­னும் பல­ரி­டமும் இருந்து வரு­கிறது.

"40 வயதுக்கு மேலானோர் வாரத்­துக்கு ஏழு முட்­டை­களைத் தயங்காமல் சாப்­பிடலாம்," என சுகா­தார நிபு­ணர்­க­ள் கூறியுள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

ஒரு பெரிய வேக­வைத்த முட்­டை­யில் 77 கேல­ரி­கள், 0.6 கிராம் மாவுச் சத்து, 5.3 கிராம் கொழுப்பு, 212 மில்­லி­கி­ராம் கொலஸ்ட்ரால், 6.3 கிராம் புர­தச் சத்து, வைட்­ட­மின்கள் ஏ, பி2, பி12, பி5, பாஸ்­ப­ரஸ், செலி­னி­யம் ஆகி­யவை நிறைந்து உள்­ளன.

முட்­டை­களில் அமினோ அமி­லங்­கள் செறிந்­துள்­ள­தால், அவை உட­லில் புர­த அள­வை அதி­க­ரிக்கும் முக்­கிய காரணியாகவும் விளங்கு­கின்றன.

முட்டை தரும் பலன்­கள்

வய­தா­ன­வர்­க­ளின் தளர்ச்சி அடை­யும் தசை­களை முட்­டை­கள் பலப்­ப­டுத்­து­வ­தில் பெரும் பங்­காற்று­கின்­றன. இருப்பினும், வய­தா­ன­வர்­கள் பலரிடமும் பரிந்­து­ரைக்­கப்­பட்ட அளவில் புர­தச்சத்து இல்­லா­மல் உள்­ளதாகவும் கூறப்படுகிறது.

40 வய­துக்கு மேலானோருக்கு முட்டை ஒரு சிறந்த ஊட்­டச்­சத்தா கும். வய­தா­ன­வர்­க­ளின் தளர்ச்சி அடைந்த தசை­களை வலுப்படுத்து வதற்கு ஏதுவாக ஒவ்­வோர் உண­விலும் போது­மான அளவில் புர­தச் சத்து தேவை என்­ப­தற்­கான சான்று­களும் உள்­ளன.

"முட்­டை­கள் விலை குறை­வான, எளி­தில் செரி­மா­ன­மா­கக் ­கூ­டிய உயர்­தர புர­த­மா­கும். இதில், கணி­ச­மான அளவு 'லியூ­சின்', தசைத் தொகுப்­புக்குத் ேதவையான அமினோ அமி­லம், வைட்­ட­மின் டி உள்பட பல முக்­கிய ­சத்துகளும் 'ஒமேகா-3' கொழுப்பு அமி­லங்­களும் உள்­ளன," என ஆய்வு ஒன்றும் குறிப்பிட்டுள்ளது.

அளவாக இருப்பின் ஆபத்தில்லை

கொலஸ்ட்­ரா­ல் பற்றி கவ­லைப்­படும் பல­ரும் முட்­டையை உண­வில் சேர்த்­துக்­கொள்­வ­தில்லை. அள­வாக உட்­கொண்­டால் முட்­டை­யில் உள்ள கொலஸ்ட்­ரால் மனித ஆரோக்­கி­யத்­திற்குத் தீங்கு விளை­விக்­காது என்று ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

எனவே, 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள் உட­லின் ஊட்­டச்­சத்து தேவை­யைப் பூர்த்தி செய்ய, எந்த ஒரு தயக்­க­மும் இன்றி தின­மும் ஒரு முட்­டையைக் கண்­டிப்­பாகச் சாப்­பிடுவது நன்மையே பயக்கும்.

எத்­தனை உண்­ண­லாம்?

சுகா­தார நிபு­ணர்­க­ளின் கூற்­றுப்­படி, 40களில் உள்­ளோர் ஒரு வாரத்­தில் குறைந்­தது ஏழு முட்­டை­களைச் சாப்­பிட வேண்­டும். 'நல்ல கொலஸ்ட்­ரா­லின்' சிறந்த ஆதா­ர­மா­கக் கரு­தப்­படும் முட்­டை­களை வய­தா­ன­வர்­கள் எடுத்­துக்கொள்­ள­லாம். இதை வேக­வைத்து அல்­லது சிறிது எண்­ணெய் விட்டு பொரிதும் சாப்­பி­ட­லாம். படம்: ஊடகம்