கைகளில் உள்ள அதிகளவு சதையைக் குறைக்க பயிற்சி

கைகளில் உள்ள அதிகளவு சதையைக் குறைக்க பயிற்சி

1 mins read
526e596d-c594-487a-8f24-6dc8ab0d5e06
-

தட்டையான வயிற்றைப் போலவே வலுவான கைகளையும் உடற்கட்டு பிரியர்கள் விரும்புகின்றனர். இந்த பயிற்சிகள் மூலம் நீங்களும் செதுக்கியது போன்ற புஜங்களைப் பெறலாம். எந்தப் பயிற்சியாக இருந்தாலும் பொதுவான 'வார்ம்-அப்' பயிற்சிகளைச் செய்துவிட்டு, கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் கைகளில் அதிகப்படியான சதை கரைவதைக் காணலாம். 'டம்பள்ஸ்' இல்­லா­த­வர்­கள் தண்ணீர் பாட்­டி­லில் தண்­ணீர் நிரப்பியும் செய்து பழகலாம்.

செய்­முறை: முத­லில் விரிப்­பில் முழங்­கால்­க­ளைச் சற்று முன்­னோக்கி மடக்­கி­ய­படி, நேராக நிற்­க­வேண்­டும். வலது கையில் 'டம்பள்ஸ்' பிடித்து, அதனை வலது காதை ஒட்டி கை இருப்­பது போல் வைத்­துக்கொண்டு தலைக்குப் பின்­பு­றம் 'டம்பள்சை' கொண்டுசென்று கீேழ மேலே அைசக்­க­வும். சிலர் உட­லின் முன்­பு­றம் செய்­வார்­கள். அத­னால் அதி­கம் பய­னில்லை. முது­கின் பின்­பு­றம் செய்­வது சிறந்த பல­ன­ளிக்­கும்.

மற்­றொரு பயிற்­சி­யாக ஒரு கையை வயிற்­றுப் பகு­தி­யில் மடித்­து­வைக்­க­வும். 'டம்பள்ஸ்' பிடித்­துள்ள மற்­றொரு கையை மேல் நோக்கி உயர்த்தி இறக்­க­வும். கைகளை உயர்த்­தும்­போது மூச்சை நன்­றாக இழுத்து, கைகளை இறக்­கும்­போது மூச்சை வெளி­யேற்ற வேண்­டும். இதே­போல், இடது கைக்­கும் செய்யவேண்­டும்.

இரு கைகளிலும் 'டம்பள்ஸ்' பிடித்துக்கொண்டு கைகளைப் பறவை போல் முடிந்த அளவில் மேலே தூக்கி கீழே இறக்கலாம். இரு கைக­ளிலும் தலா 15 முறை செய்து, பின்­னர் படிப்­படியாக அதி­க­ரிக்கலாம்.