புதிர் விளையாட்டால் முதுமையிலும் கூர்மதி

புதிர் விளையாட்டால் முதுமையிலும் கூர்மதி

2 mins read
7c33d95a-575c-4539-a9d1-05cbe4d17180
-

எண், எழுத்­துப் புதிர்­க­ளுக்கு விடை­கா­ணும் பழக்­கம் இருந்­தால் முது­மை­யி­லும் மூளை கூர்­மை­யாகச் செயல்­ப­ட­லாம் என்­பது ஆய்­வின்­மூ­லம் தெரி­ய­வந்­துள்­ளது.

குறுக்­கெ­ழுத்து, சுடோக்கு போன்ற புதிர்­க­ளுக்கு விடை­காணும் பழக்­க­மு­டைய 50 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டை­யோர், அத்­த­கைய பழக்­கம் இல்­லா­தோ­ரைக் காட்­டி­லும் அறி­வாற்­றல் சோத­னை­களில் மேம்பட்ட தேர்ச்சி பெற்­றதை ஆய்வு முடி­வு­கள் காட்­டின.

அத்­த­கைய புதிர்­க­ளைப் போடும் பழக்­க­மு­டை­யோர், தங்­க­ளை­விட எட்டு வயது குறைந்­த­வர்­க­ளுக்கு இருப்­பது போன்ற அறி­வுத்­தி­ற­னைக் கொண்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

பிரிட்­ட­னின் எக்­ஸிட்­டர் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள், 50 முதல் 90 வய­துக்­குட்­பட்ட 22,000க்கு மேற்­பட்­டோ­ரி­டம் இணை­யம் வழி­யாக ஆய்வு மேற்­கொண்­டனர். 'புரொ­டெக்ட்' எனப் பெய­ரிடப்­பட்ட அந்த ஆய்­வின்­மூ­லம், அவர்­கள் எத்­தனை முறை எழுத்து, எண் புதிர்­க­ளைப் போடு­கி­றார்­கள் என்று கணக்­கிட்­ட­னர்.

பின்­னர் அவர்­கள் அனை­வ­ரும் கவ­னித்­தல், பகுத்­த­றி­தல், நினை­வாற்­றல் போன்ற அறி­வுத்­தி­றன் சார்ந்த சோத­னை­க­ளுக்கு உட்­படுத்­தப்­பட்­ட­னர். வயது சார்ந்து மூளை­யில் ஏற்­படும் மாற்­றங்­களை அள­வி­டு­வ­தற்­காக அத்­த­கைய அறி­வாற்­றல் சோத­னை­களில் அவர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர். சோதனை முடி­வு­கள் வியப்­ப­ளிக்­கும் வகை­யில் இருந்­தன.

குறுக்­கெ­ழுத்­துப் போடும் பழக்­க­முள்­ள­வர்­க­ளின் மூளைச் செயல்­பாடு, அவர்­க­ளைக் காட்­டி­லும் பத்து வயது குறைந்­த­வர்­க­ளின் மூளைச் செயல்­பாட்­டிற்கு நிக­ராக இருந்­தது தெரியவந்தது.

'புரொ­டெக்ட்' ஆய்­வா­னது 25 ஆண்­டு­கால ஆய்­வாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வோர் ஆண்­டும் அதன் பங்­கேற்­பா­ளர்­க­ளின் மூளைச் செயல்­பாடு மதிப்­பி­டப்­படும். என்­னென்ன வாழ்க்­கை­மு­றைத் தெரிவு­கள், முது­மை­யில் நினை­வாற்­றல் இழப்பை ஏற்­ப­டுத்த கார­ண­மாக இருக்­க­லாம் என்­ப­தைக் கண்­ட­றி­வதே இந்த ஆய்­வின் நோக்­கம்.

ஆய்­வுக் கட்­டுரை 'அனைத்­துலக முதுமை உள­வி­யல் சஞ்­சிகை'யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. புதிர் விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வது முது­மை­யில் மறதி நோய் ஏற்­படும் அபா­யத்­தைக் குறைக்­கும் என்றோ, மூளையை சுறு­சு­றுப்­பாக இயங்­கச் செய்­தி­டும் என்றோ உறுதியா­கக் கூற­வில்லை.

ஆயி­னும், புதிர் விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வோர், வய­தா­னா­லும் தங்­க­ளது மூளை­யின் செயல்­பாட்டைப் பாது­காக்­கும் தன்­மையை இயற்­கை­யா­கவே கொண்­டி­ருக்­க­லாம் என்­பது ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்த முடி­வு­கள், 2011ஆம் ஆண்­டில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் கிடைத்த முடி­வு­களை ஒத்­துள்­ளன.

'புராங்ஸ் ஏஜிங்' என்ற அந்த ஆய்­வி­லும் குறுக்­கெ­ழுத்­துப் போடும் பழக்­க­மி­ருப்­போர், அறி­வுத்­தி­றன் மங்­கு­வ­தைத் தள்­ளிப்­போ­ட­லாம் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.