ஃபேஸ்புக்கில் இருக்கும் வசதி இனி வாட்ஸ்அப்பிலும்

குறுஞ்­செய்­திச் செய­லி­யான வாட்ஸ்­அப், பய­னர் அனு­ப­வத்தை மேம்­ப­டுத்த தொடர்ந்து புதுப்­பிப்­புப் பணி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

அவ்­வ­கை­யில், ஃபேஸ்புக்­கில் இருக்­கும் ஓர் அம்­சம் வாட்ஸ்­அப்­பி­லும் கூடிய விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று வாட்ஸ்­அப் குறித்த தக­வல்­களைப் பிரத்­தி­யே­க­மாக வெளி­யி­டும் 'டபிள்­யூ­ஏ­பீட்­டா­இன்ஃபோ' இணை­யத்­த­ளம் வெளியிட்டு உள்ள செய்தியின்மூலம் தெரிய வந்துள்ளது.

அதா­வது, ஃபேஸ்புக்­கில் இருப்­ப­து­போல் 'கவர்', 'புரொ­ஃ­ஃபைல்' என இரண்டு படங்­களை வைத்­துக்­கொள்ள முடி­வது­போல், வாட்ஸ்­அப் கணக்­கிற்­கும் பயன்­ப­டுத்­த­லாம் என்­பதே அந்­தப் புதுத் தக­வல்.

ஆனா­லும், இப்­படி இரண்டு படங்­களை வைத்­துக்­கொள்­ளும் வசதி தொழில்முறைக் கணக்கு (business account) வைத்­தி­ருப்­போ­ருக்கு மட்­டுமே வழங்­கப்­படும் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே படத்­தொ­குப்­பில் உள்ள படத்தை அல்­லது கேமரா மூலம் புதி­தா­கப் பட­மெ­டுத்து 'கவர்' பட­மாக வைத்­துக்­கொள்ள அனு­மதி அளிக்க வாட்ஸ்­அப் திட்­ட­மிட்டு வரு­கிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ்­அப் இரண்­டுமே 'மெட்டா' நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மா­னவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!