வேட்டி. தமிழர்களின் கலாசாரம் மட்டுமல்ல, அடையாளமும்கூட.
தொன்று தொட்டு தமிழர்கள் வேட்டி அணியும் பழக்கத்தை வழக்கத்தில் வைத்து உள்ளனர்.
சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பே வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு கர்ஜிக்கும் சிங்கமாய் முன்னோர்கள் வலம் வந்தனர். தற்போது படிப்படியாக வேட்டி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது.
வேட்டி கட்டினால் அது ஏதோ பெரிய மாற்றமாக வியப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் வேட்டி கட்டி யிருப்பதை மகிழ்ந்து பாராட்டவும் செய்கின்றனர்.
முன்பெல்லாம், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்துதான் ஆண்கள் மணமேடையை அலங்கரித்தனர். இன்றோ மணமகன்கள் கோட்டு சூட்டில் காட்சி அளிக்கின்றனர். மேலை நாடுகள் குளிர்ப்பிரதேசமாக இருப்பதால் அதற்கு ஏற்ற உடையாக கோட்டு சூட்டு உருவானது.
ஆனால் ேவட்டி அப்படியல்ல. எல்லா காலத்துக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் உடலை சூடாகவும் கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
வெளிப்புற வெப்பநிலையைப் பற்றிக் கவலைப்படாமல் அதிக நேரம் வேட்டியை அணியலாம். பெரும்பாலான வேட்டிகள் பருத்தி நூலில் நெய்யப்படு வதால் உடலுக்கும் இதமாக இருக்கும்.
வேட்டியில், முகூர்த்த வேட்டி, தற்காப்புக் கலை வேட்டி, பட்டு வேட்டி, பூஜை வேட்டி, சாதாரண வேட்டி என பல வகை உண்டு.
சில குடும்பங்கள் தங்க ளுடைய பாரம்பரியத்துக்கு ஏற்ப வேட்டியின் கரையைப் பார்த்து அணிகின்றனர்.
ஆன்மிகத்துக்கும் வேட்டியின் நிறம் மாறுபடுகிறது. சிவனை வழிபட கரையில்லா வெள்ளை வேட்டி, விஷ்ணுவைத் தரிசிக்க மஞ்சள் நிற வேட்டி, அம்மனை வேண்ட சிவப்பு நிற வேட்டி, அனுமனை ஜெபிக்க காவி நிற வேட்டி, ஐயப்பனுக்கு கருப்பு நிற வேட்டி என ஆன்மிக நேரங்களில் வேட்டி கட்டப்படுகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பட்டு வேட்டி கட்டப்படுகிறது.
மணமேடையில் இருக்கும் மாப்பிள்ளை கட்டுவதை முகூர்த்த வேட்டி என்பார்கள். அதுவும் பெரும்பாலும் பட்டு வேட்டியாகத்தான் இருக்கும். இது, மாப்பிள்ளைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முந்தைய நிச்சயதார்த்தத்துக்கு என தனியாக வேட்டி உண்டு.
பழைய காலத்தில் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருந்தார்கள். விவசாயமும் உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் மட்டுமே பிரதானமாக இருந்தது. அப்படி வேலை செய்யும்போது சாதாரண வேட்டி அணிவது காற்றோட்டமாகவும் உடலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
வேட்டி கட்டுவதை ஊக்குவிக்க பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் புதுப்புது உத்தியைக் கையாண்டு வருகின்றன.
சில நிறுவனங்கள் பிரபல நடிகர்களை கம்பீரமாகக் காட்டி வேட்டியை விளம்பரம் செய்து வருகின்றன. ராம்ராஜ் காட்டன் வேட்டிகளுக்கு ஜெயராம், உதயம் வேட்டிகளுக்கு மம்முட்டி, 'சிபி' வேட்டிகளுக்கு ரகுமான், எம்.சி.ஆர். வேட்டிகளுக்கு மோகன்லால் மற்றும் சரத்குமார், நேஷனல் வேட்டிகளுக்கு ராதாரவி, ஆலயா வேட்டிகளுக்கு ஸ்ரீகாந்த், பூமர் வேட்டிகளுக்கு கார்த்திக் என நடிகர்கள் வேட்டியுடன் விளம்பரங் களில் காட்சியளிக்கின்றனர்.
வேட்டியைக் கட்டத் தெரியாத இளையர்களுக்கு ஒட்டிக் கொள்ளும் வகையில் 'ஒட்டிக்கோ, கட்டிக்கோ' என்ற பெயரில் ராம்ராஜ் காட்டன் எனும் நிறுவனம் புதிய வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிைடத்துள்ளது.
சட்டை நிறத்திற்கு ஏற்ற வேட்டியின் கரையும் பல்வேறு நிறங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன. இடுப்பு வார் (பெல்ட்) வைக்கப்பட்ட வேட்டி யும் விற்கப்படுகிறது.
கைபேசி, பணம் வைத்துக் கொள்ள பாக்கெட் கொண்ட வேட்டிகள் அண்மையில் பிரபலமடைந்து வருகின்றன.
'இறகின் மென்மை', 'கவர்ச்சியான கரை', 'கைநூற்பு துணி', 'இயற்கை பருத்தி', 'லேசான எடை' எனக் குறிப்பிட்டு ஒரு நிறுவனம் எட்டு முழ வேட்டியை இணையம் வழியாக விற்று வருகிறது.
வேட்டிக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தமிழக ஊடகமான விகடனில் தமது கருத்தைப் பகிர்ந்து கொண்ட பிரபல உளவியல் நிபுணர் அபிலாஷா, "சிறுவர்கள் வேட்டி அணிவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று," என்று தெரிவித்துள்ளார். திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றில் அடிக்கடி வேட்டி அணிந்து வந்து போகும் பிரபலங்களும் அவர் களின் மனதில் நுழைந் திருக்க வாய்ப்பு அதிகம். மொத்தத்தில் இது ஒரு கலாசார மீட்டெடுப்பு என்றுதான் சொல்ல வேண்டும்," என்கிறார் அவர்.
கடந்த 2016ஆம் ஆண்டில் அைனத்துலக வேட்டி தினமாகவும் 'யுனெஸ்கோ' அறிவித்து வேட்டியை அங்கீகரித்துள்ளது.
அன்று முதல் இன்று வரை ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி, வேட்டி தினம் கொண் டாடப்பட்டு வருகிறது.

