ரத்த சோகைக்கு முக்கிய காரணம், இரும்புச்சத்துக் குறைபாடு.
அதனால் இரும்புச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் ரத்த சோகையை குறைக்க முடியும்.
தினமும் 10 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் வராமல் தடுக்கவும் வாய்ப்பு உள்ளது. கறிேவப்பிலையை வெறு மனே சாப்பிட முடியாதவர்கள் கறி வேப்பிலை சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள லாம். கறிவேப்பிலை இட்லிப் பொடி செய்து இட்லி, தோசை மற்றும் காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மிளகு ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 4, பெருங்காயம் சிறிது, சிறிதளவு புளி, உப்பு தேவையான அளவு, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் சிறிதளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி.
அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு அடுப்பினை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாகப் பிரட்ட வேண்டும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை இட்லிப் பொடியை கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரைகூட கெடாமல் இருக்கும். இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் உள்ளிட்ட காலை உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.