இசை-மொழி இணைந்த 'ஒரு மயக்கம்'

இசை-மொழி இணைந்த 'ஒரு மயக்கம்'

2 mins read
67904da3-3d9b-4a52-bb8f-613dd51fc5d1
'அபிஷ்டு கலெக்­டிவ்' உறுப்­பி­னர்­கள் ஷ்ரேயா பாட், லலித் குமார் கணேஷ், சர­வணா ராமா. படம்: கி.ஜனார்த்­த­னன் -

கி.ஜனார்த்­த­னன்

இசை­யி­லும் தமி­ழி­லும் ஆர்­வம் கொண்­டுள்ள நல்ல நண்­பர்­கள் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சந்­தித்­த­போது உரு­வாக்­கிய 'அபிஷ்டு கலெக்­டிவ்' என்ற இசைக்­குழு, 'ஒரு மயக்­கம்' என்ற பாடல் காணொ­ளியை வெளி­யிட்­டுள்­ளது. சொந்­த­மா­கவே பாடல்­க­ளைத் தயா­ரிக்­கும் இந்த மூவர் குழு­வின் பாடல், இது­வரை 2,800 பார்­வை­களை ஈர்த்­துள்­ளது.

மேலோட்­ட­மா­கக் கேட்­டால் இப்­பா­டல் 'பாப்' காதல் பாட்டு என்று வகைப்­ப­டுத்­த­லாம்.

ஆயி­னும், மேற்­கத்­திய மெல்­லி­சை­யு­டன் கலந்த கர்­நா­டக இசைக்­கூ­று­க­ளைக் கொண்ட இந்­தப் பாடல், மன­தில் பதி­யும் விதத்­தில் எளி­மை­யாக உரு­வா­கி­யி­ருப்­ப­தாக இவர்­கள் கூறு­கின்­ற­னர். காதல்­ வ­யப்­பட்ட என் நண்­பர் ஒரு­வர் அதனை வெளிப்­ப­டுத்­தா­மல் இருந்­ததை மையப்­ப­டுத்தி பாடலை எழு­தி­ய­தாக சர­வண ராமா,32, தெரி­வித்­தார்.

சிறு வயது முதல் தப­லா­வைப் பயின்ற லலித் குமார் கணேஷ், 32, ஸ்பெ­யி­னில் பெர்க்­கலி இசைத்­துறை பட்­டக்­கல்வி பயின்­ற­வர். தமது நண்­பர் சர­வணா ராமாவை அவர் சந்­தித்­தப்­போது சொந்­த­மாக பாடலை அமைக்­கும் யோசனை தோன்­றி­யது.

"நாங்­கள் இரு­வ­ரும் பல்­வேறு வகை­யான பாடல்­களை ஒன்­றா­கக் கேட்டு அத­னைப் பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­ப­டு­வோம். தமிழ் வரி­க­ளு­டன் இசை எப்­படி சேர்க்­கப்­ப­டு­கின்­றன என்­பதை ஆராய்­வோம்," என்று அவர் கூறி­னார். குறிப்­பாக, 'இண்டி' வகை இசைக்­குள் தமிழ் வரி­க­ளைப் புகுத்­திய கேபர் வாசு­கி­யின் பாணி முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்­வ­தாக இவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் இவர்­கள், மூன்று வாரத்­திற்­குள் இந்­தப் பாடல்­க­ளைத் தயா­ரித்து முடித்­த­னர். மற்­றொரு பாட­லுக்­கான இசையை உரு­வாக்­கிய நேரத்­தில் 'ஒரு மயக்­கம்' என்ற பாட­லுக்­கான இசை வரிகள் திரு லலித் மன­தில் தோன்­றின. தமது நண்­பர் சர­வணா ராமா, தமிழ்க்­க­வி­தை­களை எழு­தக்­கூ­டி­ய­வர் என்று தெரிந்த திரு லலித், அவரை அணுகி பாடல் எழு­தும்­படி கேட்­டார். பாடல்­க­ளு­டன் படக்­காட்­சி­யைக் கோக்­கும் திற­னை­யும் லசால் கலைப்­பள்­ளி­யில் திரைத்­து­றை­யில் பட்­டம் பெற்ற திரு ராமா, அத­னை­யும் பயன்­ப­டுத்­தி­னார்.

இரு­வ­ருமே தொடக்­கத்­தில் வேறு துறை­களில் இள­நி­லைக் கல்­வி­யைப் பயி­லத் தொடங்கி பின்­னர் கலைத்­து­றைக்கு மாறி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 'என்வரைமண்டல் என்ஜினியரிங்' பயின்ற திரு லலித், அத்­து­றை­யில் சில ஆண்­டு­கள் பயின்ற பிறகு இசைத்­து­றையை தமக்கு வாழ்க்­கைத்­தொ­ழில் ஆக்­கிக்­கொள்ள முடிவு செய்­தார்.

அதே போல திரு ராமா மக்­க­ளின் வழக்­க­மான மனப்­போக்­கிற்கு முர­ணா­கச் செயல்­படும் தங்­க­ளது மனப்­பான்­மையை 'அபிஷ்டு' என்ற பெயர் பிர­தி­ப­லிப்­ப­தாக இந்­தக் குழு­வின் ஒரே பெண் உறுப்­பி­னர் ஷ்ரேயா பாட் தெரி­வித்­தார்.

மற்ற இரண்டு கலை­ஞர்­க­ளின் பணியை சரிபார்த்து அவர் விளம்­ப­ரப்­ப­டுத்­து­கி­றார். "தமிழ்ப் பாடல்­களை நல்ல இசை­யின் மூல­மாக தமிழ் புரி­யா­தோ­ருக்­கும் சேர்க்­க­லாம். நன்­றாக எழு­தப்­பட்ட வரி­க­ளின் இசை, பொருள் புரி­யா­தோ­ரை­யும் ஈர்க்­கும்," என்று இந்தி பேசும் ஷ்ரேயா கூறி­னார்.

முதல் பாடல் அனு­ப­வம் மகிழ்­வூட்­டி­ய­தா­கக் கூறிய இம்­மூ­வர், மேலும் பல பாடல்­களை விரை­வில் தயா­ரிக்­க­வுள்­ள­னர்.