21 தமிழ் அமைப்புகள் இணைந்து கொண்டாடிய உலகத் தாய்மொழி நாள்

21 தமிழ் அமைப்புகள் இணைந்து கொண்டாடிய உலகத் தாய்மொழி நாள்

4 mins read
3d42be08-acb3-4203-9736-eb70b02c3563
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர். படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் -

சிங்­கப்­பூ­ரின் 21 தமிழ் அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து உல­கத் தாய்­மொழி நாளை 21.2.22 அன்று மிகச் சிறப்­பா­கக் கொண்­டா­டின. அதற்கு அனைத்து அமைப்­பு­க­ளை­யும் இணைத்­துச் சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஏற்­பாடு செய்­தது. இணை­யத்­தில் குவி­யம் வழி நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் வர­வேற்­புரை ஆற்­றிய சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­பன், உல­கத்

தாய்­மொழி நாளை ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் யுனெஸ்கோ என்­னும் ஐக்­கிய நாட்­டுக் கல்வி, அறி­வி­யல், பண்­பாட்டு நிறு­வ­னம் அறி­வித்­த­தற்­கான வர­லாற்று நிகழ்­வு­களை விளக்­கி­னார்.

நிகழ்ச்­சிக்­குத் தலை­மை­யேற்ற பேரா­சி­ரி­யர், முனை­வர் சுப. திண்­ணப்­பன், எது தாய்­மொழி என்­பதை விளக்கி, அதனை இன்­னும் விரி­வான முறை­யில் காண வேண்­டும் என்­றும் பண்­பாட்டை கற்­றுத் தரு­வது தாய்­மொழி என்­றும் கூறி­னார்.

சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்ட இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான இரா. தின­க­ரன், ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் 1999ஆம் ஆண்­டு­தான் உல­கத் தாய்­மொழி நாளை அறி­வித்­தது; ஆனால் நமது நாட்­டின் தந்தை திரு. லீ குவான் இயூ தாய்­மொ­ழி­யின் முக்­கி­யத்­து­வத்தை உண­ர்ந்து 1965ஆம் ஆண்­டி­லேயே இரு­மொ­ழிக் கொள்­கை­யைக் கொண்டு வந்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

தமி­ழர் பேரவை சார்­பில் உரை­யாற்­றிய அதன் உத­வித் தலை­வர் திரு. அருண் வாசு­தேவ் கிருஷ்­ணன் தமிழ் மொழி­யைப் பொரு­ளி­யல் மொழி­யாக வலு­வ­டை­யச் செய்ய வேண்­டும் என்று கூறி­னார்.

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத் தலை­வர் திரு. மு. ஹரி­கி­ருஷ்­ணன்­அ­னைத்­துத் தமிழ் அமைப்­பு­களும் ஒற்­று­மை­யு­டன் இந்த நிகழ்­வில் இணைந்­துள்­ளது வர­வேற்­கத்­தக்­கது என்­றும் அடுத்த ஆண்டு இன்­னும் சிறப்­பாக இந்­நா­ளைக் கொண்­டாட வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத் தலை­வர் திரு. தன­பால் குமார், தமிழ் மாண­வர்­க­ளுக்கு உதவ பெற்­றோர் வீட்­டில் அவர்­க­ளு­டன் தமி­ழில் பேச வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

தாய்­மொ­ழியை மறந்­தால் அடை­யா­ளம் தொலைந்­து­வி­டும் என்று எச்­ச­ரித்த சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்­கின் மதி­யு­ரை­ஞ­ரும் முன்­னாள் தலை­வ­ரு­மான திரு. நசீர் கனி பிபி­எம், தாய்­மொ­ழிக்கு அர­சாங்­கம் நிறைய உத­வி­கள் செய்­வ­தைச் சுட்­டி­னார்.

சங்­கம் வைத்து வளர்க்­கப்­பட்­டது தமிழ் மொழி என்று குறிப்­பிட்ட சிங்­கைத் தமிழ்ச் சங்­கத் தலைவி திரு­வாட்டி விஜி ஜெக­தீஷ் பிபி­எம், தமது அமைப்­பில் இளை­யர்­க­ளைத் தலை­மைத்­து­வத்­திற்­குக் கொண்­டு­வர முயன்று வரு­வ­தா­கத் தெரி ­வித்­தார்.

சிங்­கப்­பூர் தமி­ழர் இயக்­கத்­தின் துணைச் செய­லா­ளர் திரு. வீ. காசி­நா­தன், ஹாங்­காங்­கில் இரண்டு பாகிஸ்­தா­னி­யர்­கள் சந்­தித்­துத் தங்­கள் தாய்­மொ­ழி­யான உருது மொழி­யில் உரை­யா­டி­ய­தால் ஒரு­வ­ரின் தற்­கொலை முடிவே மாறி­ய­தா­கத் தெரி­வித்­தார்.

கவி­மா­லைக் காப்­பா­ளர் திரு. மா. அன்­ப­ழ­கன் பிள்­ளை­க­ளுக்­குத் தமிழ்ப் பெயர் வைக்க வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூ­ரின் தமிழ் அமைப்­பு­க­ளுக்­கென தமிழ் வாழ்த்து உரு­வாக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

உம­றுப் புல­வர் உயர்­நி­லைப் பள்ளி முன்­னாள் மாண­வர் சங்­கத்­தின் தலை­வர் திரு. தி. ஜோதி­நா­தன் தமி­ழா­சி­ரி­யர்­களை உரு­வாக்­கு­வ­தில் தங்­கள் பள்ளி அடித் தள­மாக விளங்­கி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

அழ­கப்பா கல்­வி­நி­லைய முன்­னாள் மாண­வர் குழு­வின் செய­லா­ளர் திரு. முத்­த­ழகு மெய்­யப்­பன், தமிழ் அறி­விப்­பு­களில் பிழை­க­ளைச் சுட்­டிக்­காட்­டித் திருத்­தம் கொண்­டு­வர, தமி­ழர் பேரவை உள்­பட அனைத்து அமைப்­பு­களும் ஈடு­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர்க் கிளை­யின் தலை­வர் முனை­வர் அப்­துல் காதர், யாதும் ஊரே யாவ­ரும் கேளிர் என்­ப­தற்­கும் ஒன்­று­பட்­டால் உண்டு வாழ்வு என்­ப­தற்­கும் இந்த உல­கத் தாய்­மொழி நாள் எடுத்­துக்­காட்­டா­கத் திகழ்­வ­தா­கக் கூறி­னார்.

சிங்­கப்­பூர் பெரி­யார் சமூ­கச் சேவை மன்­றத்­தின் பொரு­ளா­ளர் திரு­வாட்டி தமிழ்ச்­செல்வி பிள்ளை களைத் தமி­ழில் பேச வைக்க பெற்­றோர்­ முயல வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

திரு­வள்­ளு­வர் தமிழ் வளர்ச்­சிக் கழ­கத் தலை­வர் திரு. சி. சிவ­பா­லன், நமது தாய்­மொ­ழியை அடுத்த நிலைக்கு எடுத்­துச் செல்ல வேண்டு மென்று கூறி­னார்.

மக்­கள் கவி­ஞர் மன்­றத்­தின் செய­லவை உறுப்­பி­னர் திரு. உத்­தி­ரா­பதி விழு­மி­யங்­க­ளுக்­கும் விழிப்­பு­ணர்­வுக்­கும் தாய்­மொழி அவ­சி­யம் என்­றார்.

தமி­ழ­வேள் நற்­பணி மன்­றச் செய­லவை உறுப்­பி­னர் செல்வி கலை­வாணி இளங்கோ, புத்­தாக்­கத்­து­டன் தக­வல் தொழில்­நுட்­பத்­தை­யும் பயன்­ப­டுத்தி அடுத்த தலை முறைக்­குத் தமி­ழைக் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

தமிழ் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத் தலை­வர் திரு. பெ. அரு­மைச்­சந்­தி­ரன் தொடர் பட்டி மன்­றங்­க­ளின் மூலம் தாங்­கள் தமிழ் வளர்ச்­சிக்­குப் பாடு­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவைத் தலைவர் திரு. விஜயராஜ், இளையர்களைத் தமிழ் மீது பற்றுகொள்ளச் செய்யவும் பண்புகளையும் நெறிகளையும் அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் தாங்கள் நிகழ்ச்சிகளை அமைப்பதாகக் கூறினார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவி செல்வி மிருதுளா குமார் இளையர்களுக்குத் தமிழ் மொழி மீதும் இலக்கியங்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படும் வகையில் தாங்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதாகத் தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய அண்ணா மலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் சிங்கப்பூர்க் கிளையின் தலைவர் திரு. சவுந்தர்ராஜன், மொழி நமது பண்பாட்டின் விழி என்றும் மொழி யில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை என்றும் கூறினார்.

எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகா நிகழ்ச்சியை நெறிப்படுத்த இறுதியில் துணைச் செயலாளர் திரு. கோ. இளங்கோவன் நன்றி கூறினார்.