சிங்கப்பூரின் தமிழிசைப் பள்ளி, இவ்வாண்டு விழாவுடன் தமிழிசையியல் பாடநூல்களையும் வெளியீடு கிறது.
இன்று காலை 9.30 மணியளவில் ஈசூன் மகாமாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்குகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமைேயற்கிறார். பாம்பே வி. ஆனந்த், பாபநாசம் சிவனின் பேரன் அசோக் ரமணி, கல்லிடைக்குறிச்சி வி. சிவக்குமார் ஆகியோர் கர்நாடக, தமிழிசையை பொழியவிருக்கின்றனர்.
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழக பண்பாட்டு மையத்தின் அங்கீ காரம் பெற்ற தமிழிசைப் பள்ளி நடத்தும் நூல் வெளியீட்டு விழாவுக்கு தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிகழ்வை யூடியூப் (https://youtu.be/3VDYUs6Onqg) அல்லது சூம் (Meeting ID: 823 7906 3275 Pass code: THHS2022) வழியாகக் காணலாம். விவரங்களுக்கு வனிதா (89277 107) அல்லது செந்திலுடன் (9068 4267) தொடர்பு கொள்ளலாம். படங்கள்: தமிழிசைப்பள்ளி.

