நிதிச் சுமையில்லா முதுமையைத் தழுவுதல்

நிதிச் சுமையில்லா முதுமையைத் தழுவுதல்

5 mins read
ccbab9d5-8083-41d7-9bd6-f0162172730a
-

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சரா­சரி ஆயுட்­கா­லம் கூடி­யுள்­ளது. 2020ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி உள்­ளூர் ஆட­வர்­க­ளின் சரா­சரி ஆயு­ள்கா­­லம் 81.5 ஆண்­டு­கள் என்­றும் உள்­ளூர் பெண்­க­ளின் சரா­சரி ஆயுள்­கா­லம் 86.1 என்­றும் புள்­ளி­வி­வ­ரத் துறை­தெரி­வித்­துள்­ளது.

அதே வேளை­யில், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வு­களும்

அதி­க­ரித்­துள்­ளன.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­கான

பய­னீட்­டா­ளர் விலைக் குறி­யீடு 2001ஆம் ஆண்­டில் 64.340ஆக இருந்­தது. 2021ஆம் ஆண்­டில் அது 99.579ஆக பதி­வா­கி­யுள்­ளது.

இதன்­படி, 2001ஆம் ஆண்­டில் $10,000ஆக இருந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சிகிச்­சையை 2020ஆம் ஆண்­டில் பெற கிட்­டத்­தட்ட $15,480 செல­வாகி இருக்­கும்.

வயது ஆக ஆக நோய் ஏற்­படும் சாத்­தி­ய­மும் குண­ம­டைய எடுத்­துக்­கொள்­ளப்­படும் கால­கட்­ட­மும் அதி­க­ரிக்­கின்­றன.

எனவே, முதி­ய­வர்­கள் தங்­க­ளுக்­கும் தங்­கள் குடும்­பத்­தா­ருக்­கும்­தே­வை­யான காப்­பு­று­தித் திட்­டங்­

க­ளைப் பெறு­வது மிக­வும் முக்­கி­யம். முது­மை­யில் அவர்­க­ளுக்கு இது மன­நிம்­ம­தியை அளிக்­கும்.

மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டம் போது­மா­னதா?

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டம் கட்­டா­ய­மா­னது. இதை மத்­திய சேம­நி­திக் கழ­கம் நிர்­வ­கிக்­கிறது.

அர­சாங்க மருத்­து­வ­ம­னை­க­ளின் 'பி2' அல்­லது 'சி' பிரிவு அறை­களில் மானி­யம் வழங்­கப்­படும் சிகிச்­சை­க­ளுக்­கான கட்­ட­ணங்­

க­ளைச் செலுத்த மெடி­ஷீல்டு காப்­பு­று­தித் திட்­டம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. அர­சாங்க, தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் 'பி1', 'ஏ' பிரிவு அறை­களில் தங்கி சிகிச்­சைப் பெறு­

வோ­ருக்­கான கட்­ட­ணத்­தின் ஒரு பகு­தி­யைச் செலுத்த மெடி­ஷீல்டு லைஃப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தி­யின் அடிப்­ப­டைத் திட்­டத்தை ஆயுள் முழு­வ­தும் பயன்­ப­டுத்­த­லாம். மத்­திய சேம­நிதி பணத்­தைப் பயன்­

ப­டுத்தி அதற்­கான சந்தா தொகை­யைச் செலுத்­த­லாம்.

ஆனால் இது போது­மா­ன­தாக இருக்­குமா என்ற கேள்வி

எழு­கிறது.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற­வும் 'பி1' அல்­லது 'ஏ' பிரிவு அறை­களில் தங்கி குணம் அடை­ய­வும் விரும்­பு­வோர் தங்­கள் மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்தை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று டிபி­எஸ் வங்­கி­யின் நிதித் திட்ட திறன் பிரி­வின் தலை­வர் திரு­வாட்டி கோர்னா டான் தெரி­வித்­தார்.

அதற்­குத் தேவை­யான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஷீல்டு திட்­டங்­களை அவர்­கள் பெற வேண்­டும் என்­றார் அவர்.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஷீல்டு திட்­டங்­க­ளைத் தனி­யார் காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ள­லாம். 'பி1' அல்­லது 'ஏ' பிரிவு அறை­களில் தங்கி சிகிச்சை பெறு­வோர் மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்­தைப் பயன்­

ப­டுத்தி குறிப்­பிட்ட தொகையை மட்­டுமே செலுத்த முடி­யும்.

எஞ்­சிய தொகை­யைச் செலுத்த ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஷீல்டு திட்­டங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம். ஆனால் மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்­துக்­கான சந்தா தொகை­யை­விட ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஷீல்டு திட்­டங்­க­ளுக்­கான சந்தா தொகை அதி­கம். அதற்­கான வரு­டாந்­திர சந்தா தொகையை மெடி­சேவ் மூலம் செலுத்­த­லாம்.

எல்­டர்­ஷீல்டு, கேர்­ஷீல்டு லைஃப்

எல்­டர்­ஷீல்­டும் அதன் மேம்­ப­டுத்­தப்­பட்ட அம்­ச­மு­மான கேர்­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­ட­மும் அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் வழங்­கப்­படும் நீண்­ட­கால உடற்­குறை காப்­பு­று­தித் திட்­டங்­க­ளா­கும்.

கடு­மை­யான உடற்­குறை ஏற்­பட்டு அவ­தி­யு­று­வோ­ருக்கு இந்­தத் திட்­டங்­கள் நிதி ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

தம்­மைத் தாமே சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்­வது, ஆடை­களை அணிந்­து­கொள்­வது, நடப்­பது, சாப்­பி­டு­வது, ஓர் இடத்­தி­லி­ருந்து இன்­னோர் இடத்­துக்­குச் செல்­வது, கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்­து­வது ஆகிய ஆறு நட­வ­டிக்­கை­களில் ஏதே­னும் மூன்­றைச் செய்ய முடி­யா­மல் போகும் பட்­சத்­தில் கடு­மை­யான உடற்­

கு­றை­யுள்­ள­வர்­கள் என எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

உடேற்­கு­றை­யுள்­ளோ­ருக்­குக் கூடு­தல் மாதாந்­திர உத­வித் தொகையை கேர்­ஷீல்டு லைஃப்

வழங்­கு­கிறது.

2020ஆம் ஆண்­டில் $600ஆகத் தொடங்கி படிப்­ப­டி­யாக இத்­தொகை அதி­க­ரிக்­கும். ஆனால் எல்­டர்­ஷீல்டு 300 எல்­டர்­ஷீல்டு 400 ஆகிய திட்­டங்­கள் மாதந்­தோ­றும் முறையே $300, $400 மட்டுமே வழங்­கும்.

எல்­டர்­ஷீல்டு திட்­டத்­தின்­கீழ் 60 மாதங்­க­ளி­லி­ருந்து 72 மாதங்­கள் வரை உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான உத­வித் தொகை வழங்­கப்­படும். ஆனால் கேர்­ஷீல்டு லைஃப் மூலம் ஆயுட்­கா­லம் முழு­வ­தும் உத­வித் தொகை கிடைக்­கும்.

1980ஆம் ஆண்­டில் அல்­லது அதற்­குப் பிறகு பிறந்த அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­களும் 30 வய­தா­ன­தும்

தானா­கவே கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­தில் சேர்க்­கப்­ப­டு­வார்­கள்.

அதற்கு முன்பு பிறந்­த­வர்­

க­ளுக்கு எல்­டர்­ஷீல்டு திட்­டம் பயன்­ப­டுத்­தப்­படும். எல்­டர்­ஷீல்டு திட்­டத்­தில் இருப்­ப­வர்­கள் அதி­லேயே இருக்­க­லாம். அல்­லது கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­துக்கு மாற­லாம். இரண்­டும் வேண்­டாம் என்று கரு­து­ப­வர்­கள் வில­கிக்­கொள்­ள­லாம். 1979ஆம் ஆண்­டி­ல், அதற்கு முன்பு பிறந்த சிங்­கப்­பூ­ரர்­கள் 2023ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 31ஆம் தேதிக்­குள் கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­தில் சேர்ந்­தால் $2,500 வரை­யி­லான சலு­கை­களை அர­சாங்­கம் வழங்­கு­ம்.

மெர்­டேக்கா அல்­லது

முன்­னோ­டித் தலை­மு­றை­யி­னர் கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­தில் சேர்ந்­தால் கூடு­த­லாக $1,500 சலுகை கிடைக்­கும்.

சார்ந்­திருப்போர் பாது­காப்­புத்

திட்­டம்

21 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­களும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­களும் தங்­கள் மத்­திய சேம­நி­திக் கணக்­கில் முதல்­மு­றை­யா­கப் பணம் நிரப்­பும்­போது சார்ந்­திருப்போர் பாது­காப்­புத் திட்­டத்­தில் தானா­கவே சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர். இதில் சேர அவர்­கள் பதிவு செய்­யத் தேவை­யில்லை.

ஆனால் இத்­திட்­டத்­தில் சேர விரும்­பா­த­வர்­கள் இதி­லி­ருந்து

வில­கிக்­கொள்­ள­லாம்.

இந்­தத் திட்­டத்­தில் இணைந்­

தி­ருப்­போ­ருக்கு மர­ணம், உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தும் நோய், முழு­மை­யான-நிரந்தர உடற்­குறை ஆகி­ய­வற்­றில் ஏதே­னும் ஒன்று ஏற்­பட்­டால் நிதி வழங்கீடு வழங்­கப்­படும். இத்­திட்­டத்­தில் இணைந்­தி­ருப்­போ­ருக்கு அல்­லது அவ­ரது குடும்­பத்­தா­ருக்கு உதவ இந்­தத் தொகை வழங்­கப்­

ப­டு­கிறது.

60 வய­துக்­கும் குறைந்­த­வர்­

க­ளுக்கு $70,000 வழங்­கப்­படும். 60 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு $55,000 வழங்­கப்­படும்.

65 வய­தா­ன­தும் அல்­லது சார்ந்திருப்போர் பாது­காப்­புத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் வழங்­கீட்­டைப் பெற்­று­விட்­டாலோ இத்­திட்­டத்தைத் தொடர முடி­யாது.

மத்­திய சேம­நி­தி­யின் சாதா­ரண கணக்கு அல்­லது சிறப்­புக் கணக்­கைப் பயன்­ப­டுத்தி சார்ந்­தி­ருப்­போர் பாது­காப்­புத் திட்­டத்­துக்­கான சந்தா தொகை­யைச் செலுத்­த­லாம்.

சார்ந்­தி­ருப்­போர் பாது­காப்­புத் திட்­டம் மிக­வும் அடிப்­ப­டை­யா­னது என்­றும் சார்ந்­தி­ருப்­ப­வர்­கள் இருந்து, வீட்­டுக் கடன் இன்­னும் அடைக்­கப்­ப­டா­மல் இருந்­தால் அதன் மூலம் கிடைக்­கும் தொகை போது­மா­ன­தாக இருக்­காது என்­றார் திரு­வாட்டி லோர்னா டான்.

தங்­கள் நிதி நிலை­யைக் கருத்­தில் கொண்டு காப்­பு­று­தித் திட்­டத்தை மேம்­ப­டுத்தி கூடு­தல் அனு­கூ­லம் பெறு­வது குறித்து

மிகக் கவ­ன­மாக முடி­வெ­டுக்க வேண்­டும் என்­றார் அவர்.

வீட்­டுப் பாது­காப்­புத் திட்­டம்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக

வீட்­டுக்­கான கடனை மாதந்­தோ­றும் மத்­திய சேம­நி­திக் கணக்கு மூல­மா­கவோ அல்­லது ரொக்க

மாகவோ அடைக்­கும் மத்­திய சேம­நி­திக் கழக உறுப்­பி­னர்க­ளுக்கு இந்த வீட்­டுப் பாது­காப்­புத் திட்­டம் வழங்­கப்­ப­டு­கிறது. கடனை அடைப்­ப­தற்­குள் வீட்டு உரி­மை­யா­ளர் மர­ணம் அடைந்­தாலோ உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் நோய் ஏற்­பட்­டாலோ முழு­மை­யான-நிரந்­தர உடற்­குறை ஏற்­பட்­டாலோ எஞ்­சிய கடனை இந்­தக் காப்­பு­று­தித்

திட்­டம் அடைத்­து­வி­டும்.