கீரைகள் என்றாலே சிலர் அவற்றை சுவைத்துச் சாப்பிடுவர். சிலருக்கு அவற்றை அறவே பிடிக்காது.
கீரை சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க கீரை வகைகள் மிகவும் முக்கியம்.
உடல் வளர்ச்சிக்கு கீரைகள் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துகளைக் கொண் டுள்ளன. இந்திய உணவுகளில் பலவகை கீரைகள் பயன்படுத்தப்படு கின்றன. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டு கீரை, புளிச்ச கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவை அவற்றில் அடங்கும்.
கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறையால் ரத்த சோகை ஏற்படக்கூடும். இது கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரிச்சினையாகும்.
அன்றாட உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த சோகை வருவதை தடுக்கலாம்.
கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் 'சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
வைட்டமின் ஏ குறைபாட்டினால் உலகளவில் பல சிறுவர்களுக்குக் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் 'ஏ' வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். கீரைகளை அதிக நேரம் சமைத்தால் அவற்றில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இல்லாமல் போய்விடும்.
கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்க ளையும் கொண்டுள்ளது.
பெண்கள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100 கிராம் அளவிலான கீரைவகைகளைச் சாப்பிட்டால் நல்லது என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்கள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 40 கிராம் கீரையும் 4லிருந்து ஆறு வயது சிறுவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 50 கிராம் கீரையும் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, நமது உடலுக்கு நன்மையைத் தந்து, பாதுகாக்கும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்.

