யூடியூப் மூலம் இந்தியாவுக்கு ரூ.6,800 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
யூடியூப் மூலம் வருமானம் ஈட்டும் படைப்பாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனிப்பட்டவர்கள் மட்டு மின்றி நிறுவனங்களும் படைப்புகளை வெளியிட்டு வருமானத்தை ஈட்டி வருகின்றன. யூடியூப் மூலம் புதிய வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன.
சமையல், தனிப்பட்ட, உணவகங்களின் பெயர்போன சிறந்த உணவு, சொந்த அனுபவம், விளையாட்டு, சண்டை, வருமானம் மற்றும் தொழில் தொடங்கும் வழிகள், சுற்றுலா, சினிமா செய்திகள், கிசுகிசு, கோலிவுட் நடிகைகள், அரசியல் விமர்சனம், ஆரோக்கியம், மூலிகை மருந்து, நகைச்சுவை, அறிவியல் என கணக்கிலடங்கா காெணாளிப் படைப்பாளிகள் பரபரப்புடன் வெளியிட்டு வரு கின்றனர். யூடியூப் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது யூடியூப் படைப்பாளிகள் பலர் யூடியூப் மூலம் நல்ல வருமானம் பெற்று வருகின்றனர். இந்தியப் பொருளியலுக்கும் இது வலுசேர்த்து வருகிறது. யூடியூப் படைப்பாளிகளால் 2020ல் இந்தியாவுக்கு சுமார் 6,800 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது தொடர்பாக ஆக்ஸ்ஃபர்ட் எகானாமிக்ஸ் வெளியிட்ட தகவலில் "யூடியூப் மூலம் இந்தியாவின் பொருளியல், சமூக, கலாசார தாக்கங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2020ல் யூடியூப் படைப்பாளிகள் மூலம் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் யூடியூப் வருமானம் ரூ.6,800 கோடி முக்கிய பங்கு அளித்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு லட்சத்து 83,900 முழு நேர வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. யூடியூப் விளம்பரங்களால் வரும் வருமானம், சந்தா, ஆதரவாளர் விளம்பரம் உள்ளிட்ட வழிகளின் மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் கணக்கிடப்பட்டு உள்ளன. யூடியூப் காணொளிகளை உருவாக்கும் குழுக்களும் படைப் பாளிகளும் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றனர். யூடியூப் மூலம் வருமானம் மட்டு மின்றி படைப்பாளிகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகரித்து பிரபலமடையும் செய்கின்றனர். சில படைப்பாளிகள் நேரலை நிகழ்ச்சி மூலம் பொருட்களை விற்று வருமானத்தை ஈட்டுகின்றனர். இவர்களோடு இவர்கள் இவர்கள் சார்ந்துள்ள பிற தொழில்களும் பலன் அடைந்து வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட கணக்கின்படி இந்தியாவில் 44.8 கோடி யூடியூப் பயனாளர்கள், 53 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்கள், 41 கோடி ஃபேஸ்புக் பயனாளர்கள், 21 கோடி இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் உள்ளனர்.

