உணவின்றி உயிர் இல்லை. அதே சமயத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் உறுப்புகளுக்குப் புத்துணர்வைத் தருவதோடு அவற்றின் இயக்கத்தையும் சீராக்குகிறது.
விரதம், வழக்கமாக 12 முதல் 24 மணி நேரம் வரை நீடிக்கிறது. இடையிடையே உண்ணாமல் இருப்பது, நீர் விரதம், பழ விரதம் போன்ற பல்வேறு வகையான விரதங்கள் இருக்கின்றன.
உண்ணாவிரதத்தின்போது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லையென்றால் விரதம் இருந்து பயனில்லை.
ஊட்டச்சத்து குறைபாட்டால் சிலருக்கு மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் சிலர் விரதம் இருப்பதையே கைவிட்டுவிடுகின்றனர்.
"உண்ணாவிரதம் உங்கள் உடலுக்கும் மனநலத்திற்கும் அற்புதங்களைச் செய்கிறது," என்கிறார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டக்ஸா பவ்சார்.
உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, செரிமான உறுப்புகளை பலமடையச் செய் கிறது.
"உடல் பருமனைக் குறைக்கிறது, அதிக கொழுப்பை கரைக்கிறது, கல்லீரல் கோளாறுகளைப் போக்க உதவுகிறது," என்று இன்ஸ்டகிராம் பதிவில் டாக்டர் பவ்சார் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய தனிப்பட்ட உண்ணா விரத அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட அவர், உணர்ச்சி மற்றும் ஆன்மிக வழியில் மன அமைதி கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்.
வெவ்வேறு விதமான விரதங்கள் நபருக்கு நபர் வித்தியாசமாக செயல்படும் என்று அவர் தெரி விக்கிறார்.
உணவு, தண்ணீர் அருந்தாமல் முழுமையாக விரதமிருப்பது ஒரு வகை, தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டும் குடிப்பது, மூலிகைச் சாறுகளை மட்டும் குடிப்பது, தானிய வகை உணவுகளை எடுத்துக் கொள்வது, இனிப்பு மற்றும் உப்பு இல்லாமல் சாப்பிடுவது என விரதம் வேறுபடுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களிலிருந்து விலகி யிருப்பது, எதிர்மறையான எண்ணங் களைத் தவிர்ப்பது, இடைப்பட்ட விரதம் உள்ளிட்ட விரதங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இடைப்பட்ட விரதம், உடல் எடையைக் குறைப்பது மட்டு மல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளையும் நீட்டிக்கச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதில் குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் விரதம் இருக்க வேண்டும்.
அதாவது, பிற்பகல் 12.00 மணி வரை விரதம், பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை சாப்பிடுவது, எட்டு மணிக்கு மேல் மீண்டும் விரதம் இருப்பது.
இந்த வகை விரதம், உடல் எடை மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க பாது காப்பான வழி என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இரவு 8.00 மணிக்குள் உணவு எடுத்துக்கொள்வதால் அஜீரணம் ஏற்படாமல் நல்ல உறக்கத்தை ஏற்படுத்துகிறது.
மூன்று வேளையும் மாவுச்சத்து உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எந்த வகையான விரதமாக இருந்தாலும் உடலுக்குத் தேவை யான சத்துகள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்காகவே ஆயுர்வேதத்தில் சில ஆரோக்கியமான உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தேங்காய்த் தண்ணீர்-இது உடலுக்குப் புத்துணர்வைத் தரும். பழங்கள், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், பால், தயிர், மோர், மரவள்ளிக்கிழங்கால் செய்யப்பட்ட கிச்சடி, கரும்புச் சாறு, பேரீச்சம் பழம் போன்றவை விரதத்தின்போது உடல் வலிமை குன்றாமல் இருக்கச் செய்யும்.
ஆனால் எது தங்களுடைய உடலுக்கு ஏற்ற உணவு என்பதை அறிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
விரதத்தின்போது நொறுக்குத் தீனிகளையும் ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாயில் தள்ளுவது உடல்நலத்திற்கு கேடு விளை விக்கும் என்று டாக்டர் பவ்சார் எச்சரிக்கிறார்.
சிப்ஸ், பொரித்த கோழி, கறி பஃப்ஸ் போன்ற பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பது மிக மிக முக்கியம்.
ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் பல கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக விரதம் இல்லாமலே இருந்து விடலாம் என்கிறார் டாக்டர் பவ்சார்.
(தகவல்: த இண்டியன் எக்ஸ்பிரஸ்)

