உடலில் பல்வேறு பகுதிகளிலும் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் 'எடீமா' என்று பெயர். எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களைப் பாதிக்கும். சில சமயங்களில் வீக்கம் தன்னால் காணாமல் போய்விடும். இதுபோல் மறை யாமல் நீண்ட நாள்களாக தொந்தரவு தந்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
கால்களில் வீக்கம் குறைய தினமும் ஒருசில வழிமுறைகளைப் பின்பற்றுவது பயன் தரும்.
காயம் காரணமாக கணுக்கால், பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு 'ஐஸ் பேக்' வைக்கலாம். அல்லது 'கம்ப்ரெஷன் பேண்டேஜ்' அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.
உட்காரும்போது அல்லது படுக்கும்போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படிச் செய்யும்போது கால்கள் மீது எந்தச் சுமையையும் வைக்கக்கூடாது.
வெதுவெதுப்பான நீரில் ஒரு ேதக்கரண்டி கல்லுப்பு கலந்து பாதிக்கப்பட்ட காலை ஊறவைத்தால் வீக்கமும் வலியும் குறையும்.
போதியளவு தண்ணீர் குடிக்கத் தவறினால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படக் காரணமாக அமையும்.
உடலில் உள்ள நச்சுப்பொருள்களையும் மிகுதியான திரவங்களையும் நீக்க எலுமிச்சை சாறு தினமும் அருந்தலாம்.
உடலில் நீர் தேங்குவதற்கு மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்பதால், மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி, அவகாடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகமுள்ளது.
உணவில் உப்புக் குறைவாக சேர்த்துக் கொண்டால் திரவம் தேங்குவதைக் கட்டுப் படுத்தி, வீக்கத்தைக் குறைக்கலாம்.
கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர 'மசாஜ்' உதவும். இது, தேங்கிய திரவத்தை நீக்கி வீக்கத்தைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தம், திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழி இைறச்சி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகமுள்ளது. படம்: ஊடகம்

