ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும், இளம்பிறை இலக்கிய வட்டமும் பல்சுவை நிகழ்வாக பேசும் கலை வளர்ப்போம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.
இந்நிகழ்வில், இம்மாதம் மாணவர்கள் தீக்சிதா நாகராஜன், மீரா ஜெயக்குமார், நவ்ஃபல்துல்கர்னை, முஹம்மது மிக்தாத், அர்ஜூன் ஆனந்த், திரு அப்துல் மாலிக், திருமதி வெண்ணிலா கண்ணன், திரு உமாஷங்கர் ஆகியோர் வேறுபட்ட தலைப்புகளில் பேசினர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற அடித்தளத் தலைவர் திரு. பெ.மூர்த்தி இளையர்களிடம் தமிழ்மொழியை வாழும்மொழியாக்க இந்நிகழ்ச்சி பாடுபடுவதாகப் பாராட்டினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் குமாரி அஷ்வினி 'கனாக் காணும் காலம்' என்ற தலைப்பில் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையில் தனக்குக் கிடைத்த தன்மேடைப் பேச்சு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பங்கேற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
ஸூம் சந்திப்பில் 45 பேர் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலமும் அமெரிக்கா, கனடா, மலேசியா, தமிழகத்தில் இருந்தும் பலரும் இணைந்து சிறப்பித்தனர்.
செய்தி: அ. முஹம்மது பிலால்

