பெண்களைக் கொண்டாடும் பெண்கள்

மாதங்கி இளங்­கோ­வன்

சமோசா வியா­பா­ரம் செய்­யும் தாயும் மகளும் தங்­க­ளைப் போலவே வெவ்­வேறு விதங்­களில் சமூ­கத்­திற்­கும் குடும்­பத்­தா­ருக்­கும் சேவை செய்­யும் பெண்­களை, அனைத்­து­லக மக­ளிர் தினத்­தன்று கொண்­டாட விரும்­பி­னார்­கள்.

அனைத்துலக மக­ளிர் தின­மான இம்மாதம் 8ஆம் தேதி, செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பிற்பகல் 4 மணி முதல் மாலை ஆறு மணி­வரை முப்­ப­துக்­கும் மேலான பெண்­க­ளுக்கு இல­வச தேநீர் வழங்கி­ உபசரித்தார்கள்.

குமாரி நஜிரா ரொஸ்­னி­யும் திரு­மதி நூருல் அயி­னி­யும் 'ஹவுஸ் ஆஃப் சமோ­சாஸ்' வியா­பா­ரத்தை சிறிய அள­வில் கடந்த 2015ஆம் ஆண்­டில் வீட்­டில் இருந்தபடி தொடங்­கி­னார்­கள்.

வாடிக்­கை­யா­ளர்கள் பெரு­கவே செயின்ட் ஜார்­ஜஸ் சாலை­யில் கடை திறந்­தார்­கள்.

அதன்பின்னர், தற்­போது மெக்பர்சன் சாலையில் செயல்படும் நவீன 'கஃபே'யைத் தொடங்கினர்.

பல சவால்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தா­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்றி­னால் தங்­க­ளு­டைய வியா­பா­ரம் பெரு­ம­ள­வில் சரிந்­து­போய்விட வில்லை எனச் சொன்­னார் நஜிரா.

கடை­யின் இணை­யப்­பக்­கம், விநி­யோகச் செய­லி­க­ளின் வாயி­லாக மக்­கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான, புது­மை­யான சமோ­சாக்­களை தொட­ர்ந்து வாங்க முடி­வ­தால் நூருல் அயி­னி­யின் வியா­பா­ரம் வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் தொடர்ந்து ஈர்த்து வரு­கிறது.

"எங்­கள் குடும்­பத்­தில் மூன்று பெண்­கள் உள்ளனர். நாங்கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் பக்­க­ப­ல­மாக இருந்து, உத்­வே­கத்­தோடு உழைத்­தோம்.

"இந்­திய நொறுக்­குத் தீனி­களை அனை­வ­ருக்­கும் சுல­ப­மாக கொண்டு சேர்ப்­பது எங்­க­ளது வியா­பா­ரத்­தின் முக்­கிய நோக்­கம்," என்­றார் நஜிரா.

ெபண்களுக்காக நிதி திரட்ட புது முயற்சி

பெண்­க­ளைக் கொண்­டா­டு­வதோடு அவர்­க­ளுக்கு உத­வும் வண்­ணம் நிதி திரட்­ட­வும் 'காக்­ெடய்ல்ஸ் ஃபார் அ காஸ்' எனும் திட்­டத்­தில் ஈடு­பட்­டார் குமாரி ஆர்த்தி சங்­கர்.

ஹாலண்ட் வில்­லே­ஜில் அமைந்­துள்ள 'சிமி­சாங்கா' (Chimichanga) என்ற மெக்­சிக உண­வ­கம் இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­யது.

ஒவ்­வொரு ஆண்­டும் மக­ளிர் தினத்­தில் புகழ்­பெற்ற பெண்­களை வர­வ­ழைத்து 'யுனை­ெடட் வுமன் சிங்­கப்­பூர்' என்ற மக­ளிர் அமைப்­புக்கு நிதி திரட்ட உத­வு­கிறது 'சிமிசாங்கா'.

இவ்­வாண்டு தனிப்­பட்ட தொழில்­களில் சிறந்து விளங்­கும் நான்கு பெண்­க­ளுக்கு நான்கு வித 'காக்­டெய்ல்' பானங்­க­ளைத் தயா­ரிக்­கக் கற்­றுக்­கொ­டுத்­த­னர் சிமி­சாங்­கா­வின் பணி­யா­ளர்­கள்.

இப்­பானங்கள் விற்­பனை மூலம் கிடைக்­கும் நிதி­யில் பாதித் தொகை 'யுனை­ெடட் வுமன் சிங்­கப்­பூர்' அமைப்­புக்கு தரப்­படும்.

"மக்­கள் கழ­கத்­தில் 10 ஆண்டு ­காலம் வேலை செய்­தி­ருந்­தா­லும் என்­னால் தலை­மைத்­து­வப் பத­வியை ஏற்­றுக்­கொள்ள முடி­யுமா என்ற தயக்­கம் முத­லில் இருந்­தது. ஆனால், என்­னைப் போன்ற பெண்­கள் தொழிலி­லும் திற­மை­யி­லும் நம்­பிக்கை வைக்­கா­விட்­டால் மற்­ற­வர்­களும் நம்­மு­டைய திற­மை­களில் ஐயம் கொள்­வர்," என்று கூறி­னார் விலங்­கு­ வ­தைத் தடுப்­புச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ராகப் பணி­பு­ரி­யும் ஆர்த்தி.

"பெண்­கள் ஒரு தலை­மைத்­துவப் பத­வி­யில் இருக்­கும்­போது அவர்­கள் அதி­கா­ரம் நிறைந்­த­வர்­க­ளா­க­வும் மற்ற ஊழி­யர்­க­ளி­டம் பணி­வன்­பாக உரை­யா­ட­மாட்­டார்­கள் என்­றும் பல­ரும் தப்­புக்­க­ணக்­குப் போடு­கி­றார்­கள்.

"அந்­தத் தவ­றான எண்­ணத்தை அகற்றும் வகையில், பெண்­கள் முக்­கிய பத­வி­களில் பணி­யாற்­றும்­போது அவர்­க­ளுக்­குத் தேவை­யான ஊக்­க­ம­ளித்­தால்­தான் அவர்­களும் வாழ்க்­கை­யில் முன்­னேற முடி­யும் என்ற நம்­பிக்கை வரும்," எனக் கூறி­னார் ஆர்த்தி.

"பயப்­ப­டா­மல், வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி அதைச் சிறப்­பாகச் செய்ய முயற்­சி செய்யவேண்­டும்," எனவும் அவர் கூ­றி­னார்.

இம்­மா­தம் முழு­வ­து­மாக 'டிக்கி டு யு லவ் மி' என்ற 'காக்­டெய்ல்' பானத்தை சிமி­சாங்­கா­வில் வாங்­கும்­போது அதில் கிடைக்­கும் பாதி வரு­மா­னம் யுனைட்டெட் மகளிர் அமைப்­புக்­குக் கொடுக்­கப்­படும் என்று 'சிமி­சாங்கா' கூறியுள்ளது.

இந்­திய நொறுக்­குத் தீனி­களை அனை­வ­ருக்­கும் எளிதாகக் கொண்டு சேர்ப்­பதே எங்­க­ளது வியா­பா­ரத்­தின் முக்­கிய நோக்­கம்.

நவீன கஃபே நடத்தி வரும் குமாரி நஜிரா ரொஸ்­னி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!