'எனர்ஜி அப்சர்வர்'

'எனர்ஜி அப்சர்வர்'

3 mins read
743a230e-4863-4afc-83a9-fe503d975e05
உலகம் முழுதும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகப் பயணம் மேற்கொண்டுள்ள இந்த 'எனர்ஜி அப்சர்வர்' என்னும் கப்பல் இப்போது சிங்கப்பூரில் நங்கூரமிட்டுள்ளது. படம்: எனர்ஜி அப்சர்வர் -

மாதங்கி இளங்­கோ­வன்

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மாசு விளை­விக்­கும் ஏரா­ள­மா­ன­வற்­றில் கட­லில் செல்­லும் கப்­பல்­க­ளை­யும் சொல்­ல­லாம்.

கொள்­க­லன்­களை ஏற்­றிச் செல்­லும் சரக்­குக் கப்­பல்­களும் மக்­களை ஏற்­றிச் செல்­லும் பய­ணக் கப்­பல்­களும் சுற்­றுச்­சூ­ழ­லை மாசு படுத்தும் வகையில் பல ஆபத்­தான இர­சா­ய­னங்­களை ஆகா­யத்­தி­லும் நீரி­லும் வெளி­யி­டு­கின்­றன.

நிலத்­தி­லும் நீரி­லும் வாழும் உயி­ரி­னங்­க­ளை­யும் நம் புவி­யை­யும் பாது­காக்க வேண்­டும் என்ற குறிக்­கோ­ளோடு 'எனர்ஜி அப்­சர்­வர்' என்­னும் கப்­பல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

'எனர்ஜி அப்­சர்­வர்' எனப்­படும் புது­மை­யான இந்தக் கப்­பல், கரி­ய­மில உமிழ்வை வெளி­யி­டா­த­வாறு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மாசு விளை­விக்­கா­மல் பய­ணம் செல்­லும் இந்த பிரம்­மாண்­ட­மான கப்­பல் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி மற்­றும் ஹைட்­ர­ஜன் ஆகியவற்றால் இயங்­கு­கிறது.

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் மாலோ துறை­மு­கத்­தி­லி­ருந்து புறப்பட்ட இந்த பிரம்­மாண்ட எனர்ஜி அப்­சர்­வர், 2017ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு­ வரை உல­க­த்தை வலம் வரும்.

ஆசி­யா­வில் அதன் முத­லா­வது பய­ணம் சிங்­கப்­பூ­ரில் தொடங்­கிய பின்­னர், தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா என பல நாடு­க­ளுக்­கும் இக்­கப்­பல் பய­ணம் செல்­லும்.

எரி­வாயு, சூரிய சக்தி, நீர் சக்தி என இயற்­கை­யான மூலப்­பொருள்­க­ளைக் கொண்டே எனர்ஜி அப்­சர்­வர் செயல்­படும் திறன் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

பிரஞ்சு அதி­பர், ஐக்­கிய நாடு­க­ளின் சுற்றுச்சூழல் குறித்த நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சி இலக்­கு­க­ளின் பிரஞ்­சுத் தூதர், யுனெஸ்கோ எனும் ஐக்­கிய நாடு­கள் மன்­றத்­தின் கல்வி, அறி­வி­யல், கலா­சார அமைப்­பின் மர­பு­டைமை, ஐரோப்­பிய ஒன்­றி­யம் என பல்­வேறு முக்­கியமான தனிமனிதர்களும் அமைப்­பு­களும் தங்­கள் ஆத­ரவை இக்­கப்­ப­லுக்கு அளித்­துள்­ள­னர்.

பொறி­யா­ளர்­களும் ஆய்­வா­ளர்­களும் புது தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்கி, புதுப்பிக்கக்கூடிய எரி­சக்­தியைப் பயன்படுத்த, எனர்ஜி அப்­சர்­வர் ஓர் ஆய்­வுக்­கூ­ட­மா­கத் திகழ்­கின்­றது.

ஏரி­வாயு, பேட்­ட­ரி­கள், சூரிய சக்தி, காற்­று சக்தி போன்­றவை கடு­மை­யான கடல் சூழல்­களில் சோதிக்­கப்­ப­டு­கின்­றன.

இவற்­றி­லி­ருந்து தயா­ரிக்­கப்­படும் எரி­சக்­தி­யைக் கொண்­டு­தான் நாற்­ப­தா­யி­ரத்துக்­கும் மேலான கடல் மைல்­களைத் தாண்டி பய­ணித்­துள்­ளது,

எனர்ஜி அப்­சர்­வர். இது­வரை எனர்ஜி அப்­சர்­வர் கப்­ப­லைப் பற்றி 13 ஆவ­ணப்­ப­டங்­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

ஏழாண்டு கடல் சுற்­று­லா­வில், எனர்ஜி அப்­சர்­வ­ரின் நிபு­ணர்­கள் வேளாண்­மை, எரிசக்தி ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த வல்­லு­நர்­க­ளைச் சந்­தித்து சுற்­றுச்­சூ­ழ­லைப் பேணிக்­காக்­கும் வகை­யில் எவ்­வாறு நிலை­யாக வாழ­லாம் என கலந்­து­ரை­யா­டி­னர்.

இவ்­வாறு உல­கில் வாழும் அனை­வ­ருக்­கும் உதவ விரும்­பும் எனர்ஜி அப்­சர்­வ­ரின் முயற்­சி­கள் பாராட்­டக்­கூ­டி­யவை.

இக்­கப்­பலை நிர்­வ­கிக்­கும் குழு­வி­னர் கப்­ப­லின் மூலம் 17 நிலை­யான வளர்ச்சி இலக்­கு­களை அடைய கடலில் பயணம் செய்தவாறு பாடுபட்டு வருகின்றனர்.

கப்­ப­லில் பயணம் செய்யும் ஆய்வாளர் குழுவில் எரி­சக்­தி­த் துறை வல்லுநரான விஞ்­ஞா­னி­யான பிட்­ரிஸ் கொர்­டி­யானொவும் ஒருவர்.

"அதிமான நாட்­கள் நம் வேலையை கப்­ப­லி­லேயே செய்ய வேண்­டிய கட்­டா­யம் உள்­ளது. ஆனா­லும் கப்­ப­லில் இருக்­கும் மற்ற வல்­லு­நர்­க­ளோடு வலு­வான உற­வு­களை வளர்க்க நல்­ல­தொரு வாய்ப்பு கிடைத்­துள்­ள­தால் அவர்­க­ளோ­டு சேர்ந்து பணி­யில் ஈடு­படு­வது இன்­ப­மான அனு­ப­வ­மாக உள்­ளது.

"மேலும், அதே நேரத்­தில் நமது பணி பிற்­கா­லத்­தில் சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க மற்­ற­வர்­க­ளுக்­கும் எழுச்­சி­யூட்­டும் என நினைக்­கும்­போது அதில் பெரு­மி­தம் கொள்­கி­றோம்.

"இனி கப்­பல்­கள் சுற்­றுப்­பு­றத்­திற்­கும் கடல் உயி­ரி­னங்­க­ளுக்­கும் இரசாயன உமிழ்வு ஏற்­ப­டுத்­தா­மல் செயல்­பட நமது முயற்­சி­கள் உல­கிற்கே ஒரு முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்­வ­தில் எனர்ஜி அப்­சர்­வர் பெரு­மை கொள்­கின்­றது," என்று கூறி­னார் பிட்­ரிஸ்.

ஒவ்­வொரு நாட்­டி­லும் நிறுத்­தப்­ப­டும்­போது,

இக்­கப்­ப­லைப் பற்­றி­யக் கண்­காட்சி ஒன்று திறக்­கப்­படும். சுவா­ர­சி­ய­மான உத்­தி­க­ளைப் பயன்­படுத்தி மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு தரும் விதத்­தில் இக்­கண்­காட்சி அமைந்­துள்­ளது.

செவி­க­ளுக்­கும் கண்­க­ளுக்­கும் விருந்­தாக அமை­யும் கண்­காட்­சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்­டத்­தட்ட 300,000 பேர் வந்து பல புது­மை­யான தொழில்­நுட்­பம் பற்றி அறிந்து சென்றனர்.

மின்­னி­யல் கண்­காட்­சி­யாக அமை­யும் இது, எரி­சக்­தி­க­ளின் வர­லாற்­றைப் பற்­றி­யும் சுற்­றுச்­சூழல் குறித்த விழிப்­பு­ணர்­வைப் பற்­றி­யும் தனி­ம­னித நடை­மு­றை­க­ளின் வர­லாற்­றை­யும் ஆரா­யும் வகை­யில் அமைந்­துள்­ளது.

புத்­தாக்­கச் சிந்­த­னை­யோடு உரு­வாக்­கப்­பட்ட எனர்ஜி அப்­சர்­வர் என்­னும் கப்­பல் சிங்­கப்­பூ­ரில் மார்ச் பத்­தாம் தேதி முதல் இரு­ப­தாம் தேதி வரை மரினா ஒன்15 செந்­தோசா கோவ்­வில் நிறுத்தி வைக்­கப்­படும்.

கீழ்க்கண்ட இணை­ய முகவரி வாயி­லாக இக்­கண்­காட்­சிக்கு வரு­கை­ய­ளிக்க முன்­கூட்­டியே பதிவு செய்­ய­லாம். https://sgmarineguide.com/energy-observer/