தேசிய மரபுடைமைக் கழகப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பரிந்துரைகள்

தேசிய மரபுடைமைக் கழகப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பரிந்துரைகள்

4 mins read
ea62fe7b-8ffc-466f-a07e-465364f21c21
தைப்பூசத் திருநாளில் முருகக் கடவுளுக்கு காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -
multi-img1 of 2

யுனெஸ்­கோ­வின் தொட்­டு­உணரமுடி­யாத கலா­சார மர­பு­டை­மைப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றக்கூடிய தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்தின் பரிந்­து­ரை­கள் பற்றி இந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளின் கருத்­து­கள் கேட்­ட­றி­யப்­படும். தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் பரிந்­து­ரைப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள 10 கூறு­கள் இங்கே உள்­ளன

1. குழந்தை பிறப்பு பாரம்­ப­ரி­யம்

 சிங்­கப்­பூ­ரில் உள்ள ஒவ்­வொரு இன சமூ­கத்­திற்­கும் என சொந்த பழக்­க­வ­ழக்­கங்­களும் நடை­மு­றை­களும் உள்­ளன. அவை முக்­கி­ய­மாக, தாய்­மார்­க­ளின் பிர­ச­வத்­திற்கு முன்­னும் பின்­னும் ஆரோக்­கி­ய­மாக இருக்க உத­வு­கின்­றன.

 இங்குள்ள சீன, மலாய், இந்­திய சமூ­கத்தைச் சேர்ந்தோர், பொது­வாக குழந்தை பிறப்­புக்­குப் பிறகு வீட்­டி­லேயே இருக்­கும் பழக்­கத்­தைக் கடைப்­பி­டிக்­கின்­ற­னர். குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த தாய் வீட்டை விட்டு வெளி­யேற அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இது தாய்-சேய்க்கு தொற்­று­நோய்­கள் ஏற்­படும் அபா­யத்தை தடுக்­கிறது.

2. டிகிர் பராத்

 ஏறத்­தாழ 12 முதல் 16 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட மலாய் இைசக் குழு­வி­னர் பாடல்­கள் பாடி, நட­னத்தை ஒருங்­கி­ணைத்து, தாளக் கரு­வி­களை வாசித்து கலை நிகழ்ச்­சி­க­ளைப் படைக்­கின்­ற­னர்.

 திரு­ம­ணம், திரு­வி­ழாக்­கள், போட்டி நிகழ்வுகளி­லும் அடிக்­கடி இசைக்கச்­சே­ரியை நடத்­து­கின்­ற­னர். இது­போல், சிங்­கப்­பூ­ரில் 70 முதல் 90 குழு­வி­னர் உள்­ள­னர்.

3. கெட்­டாய்

 பொழு­து­போக்கு பாடல் நிகழ்­வான கெட்­டாய் அடித்­தள அமைப்­பு­க­ளால் அடிக்­கடி ஏற்­பாடு செய்து நடத்­தப்­ப­டு­கிறது.

'ஹங்ரி கோஸ்ட் ஃபெஸ்டி­வல்' நிகழ்­வு­டன் தொடர்­பு­டைய இந்­தப் 'பாடல் மேடை' நிகழ்வு, கடந்த கால சீன ஓப்பரா இசை நாடகங்கள், பொம்­ம­லாட்ட நிகழ்­வு­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளன.

 நிகழ்ச்சி பொது­வாக ஹாக்­கி­ய­னில் இருக்­கும். ஆனால், கேன்­டோ­னீஸ், மலாய், இந்­தோ­னீ­சி­யப் பாடல்­களுக்­கும் கூட பார்­வை­யா­ளர்­கள் மத்தியில் வர­வேற்புள்ளது.

4. குவே தயா­ரிப்பு

 குவே என்­ற­ழைக்­கப்­படும் சிறிய தின்­பண்­டங்­கள் மலாய், பெர­ானாக்­கன் சமூ­கங்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை. இவை, வீடு­களில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. பெரும்­பா­லான தின்­பண்­டங்­களில் பசைத் தன்­மை­யுள்ள அரிசி, தேங்­காய், கூலா மெலாக்கா என்ற கருப்பட்டி வெல்­லம் ஆகி­யவை கொண்டு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

 சீன சமூ­கத்­தி­ன­ரி­டையே தயாரிக்­கப்­படும் குவேக்­களில் வேர்க்­க­டலை, பாசிப் பருப்பு, சிவப்பு பீன் போன்­ற­வை இருக்கும்.

5. சிங்கே அணி­வ­குப்பு

 கடந்த 1972ஆம் ஆண்டு ஜூன் மாதம் பட்­டாசு தடை­செய்­யப்­பட்ட பின்­னர், அப்­போ­தைய பிர­த­மர் லீ குவான் இயூ­வின் ஆலோ­ச­னை­யைத் தொடர்ந்து, சீனப் புத்­தாண்டு சம­யத்­தில் பண்­டி­கைக்­கால உற்­சா­கத்­தைக் கூட்ட, சிங்­கப்­பூ­ரின் முதல் நவீன சிங்கே அணி­வ­குப்பு 1973ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் நடை­பெற்­றது.

 இன்­றைய சூழ­லில் பள்­ளி­கள் மற்­றும் சமூக அமைப்­பு­கள் போன்ற பல்­வேறு குழுக்­களின் கலை­ஞர்­களும் சிங்கே அணி­வ­குப்பு நிகழ்­வு­களில் சேர்த்­துக்கொள்­ளப்­படு­கின்­ற­னர்.

6. ஆர்க்­கிட் தோட்டம்

தேசிய ஆர்க்­கிட் தோட்­டம் உல­கின் மிகப்­பெ­ரிய ஆர்க்­கிட் தோட்­டங்­க­ளுள் ஒன்­றாக விளங்­கு­கிறது. இங்கு 1,000க்கும் மேற்­பட்ட ரகங்­க­ளைக் கொண்ட ஆர்க்­கிட் மலர்களும் 2,000 கலப்­பி­னங்­களும் உள்­ளன.

7. பாரம்­ப­ரிய மருத்­துவ முறை

 பல்­லின சமூ­கத்­தில் பல­வி­த­மான பாரம்­ப­ரிய மருத்­துவங்கள் நடை­முறை­யில் உள்­ளன. 2,000 ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய பாரம்­ப­ரிய சீன மருத்­துவ முறை யிலான 'அக்கியூ­பஞ்­சர்' குத்­தூசி தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கி­யது.

 மலாய் மருத்­துவ முறை உடற்­பிடிப்பு சிசிச்சை, ஜாமு போன்ற மூலிகை மருந்­து­க­ளைப் பயன்­ப­டுத்­து­கிறது.

 இந்­திய மருத்­து­வத்­தின் ஒரு பிரி­வான ஆயுர்­வே­தம், ஒரு­வ­ரது உட­லின் சம­நி­லையை மீட்­டெ­டுக்க மூலி­கை­கள், மசா­லாப் பொருள்­கள், உடற்­பி­டிப்பு சிகிச்சை, தியா­னம் உள்­ளிட்ட முறை களைப் பயன்­ப­டுத்­து­கிறது.

8. தைப்­பூ­சம்

 ­தைப்பூ­சத் திரு­விழா வீரம், சக்தி நல்­லொ­ழுக்­கத்தைக் குறிக்­கும் இந்­துக் கட­வு­ளான முரு­கனை நினைந்து வணங் கப்படுகிறது. இந்­தத் திரு­நா­ளின்போது, பால் குடங்களை பக்­தர்­கள் சுமந்து சென்று நேர்த்­திக்கடன் செலுத்­து­கின்­ற­னர். அதே­போல், முரு­க­னுக்கு காவடி­கள் எடுத்தும் நன்­றி தெரி­விக்­கின்­ற­னர்.

9. யூஷெங்

சீனப் புத்­தாண்டு முழு­வ­தும் குடும்­பம், நண்­பர்­க­ளு­டன் லோஹே செய்­யப்­படு­கிறது. பச்சை மீன் மற்­றும் பிற மங்­க­ள­க­ர­மான பொருட்­க­ளைக்­கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட உணவை, உணவு உண்­ணும் குச்­சி­களில் பிடித்து உய­ர­மா­கத் தூக்கி கீழே போடு­வது லோஹே என்று அழைக்­கப்­ப­டு­கிறது. பச்சை மீனை யூஷெங் என்று அழைப்­பார்­கள்.

10. மணி வேலைகள், பூப்­பின்­னல் முறை

 பெர­ானாக்­கன் எம்­ப்­ராய்­டரி என்ற பூப்­பின்­னல் முறை, சீனப் பூப்­பின்­னல் பாரம்­ப­ரிய முறை­யைப் பின்­பற்றி செய்யப்படுகிறது. சிறு சிறு வண்­ணக் கண்­ணா­டி­கள், உலோக விதை­களைக் கொண்டு மணி வேலைப்­பா­டு­களைச் செய்கின்றனர். தனித்­தனி­யாக தைப்­பது அல்­லது அவற்றை ஒன்­றாக நூலில் கட்­டு­வது போன்ற பல்­வேறு முறை­க­ளைப் பயன்­படுத்தி மணி­கள் ஒட்­டப்­ப­டு­கின்­றன.

சிங்கே அணிவகுப்பு இன்றைய சூழலில் பல்வேறு பள்ளிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்த கலைஞர்களை உள்ளடக்கிய ஒரு பல்லின கலாசாரமாக மாறியுள்ளது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆதாரம்: ROOTS.GOV.SG,

செய்தி: நிங் கெங் ஜீன்