மனப்பதற்றம்: உதவி நாடும் சிங்கப்பூரர்கள்

மனப்­ப­தற்­றத்­துக்­காக சிகிச்­சையை நாடி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கை கடந்த ஆண்டை விட இவ்­வாண்டு 80 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ள­தாக, சிங்­கப்­பூர் மன­நல உள்­ளாய்வு நிலை­யம் தெரி­வித்­தது.

மனப்­ப­தற்­றத்­தால் பலர், தங்­க­ளது வாழ்க்கை முறை­யில் நிகழ்ந்த மாற்­றங்­களை உணர்ந்­த­னர். உறங்­கு­வ­தி­லும் உணவு உண்­ப­தி­லும்­கூட அவர்­கள் இயல்­பு­நி­லை­யில் இருந்து சற்று நழு­வி­யி­ருந்­த­னர்.

எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யி­லும் இயல்­பா­க­வும் முழு­மை­யா­க­வும் கவ­னம் செலுத்­து­வது என்­பது அவர்­க­ளால் இய­லாத ஒன்­றாய் இருப்­பதை அவர்­க­ளால் உணர முடிந்­தது.

"வேலை, குடும்­பம், ஆரோக்­கி­யம், தனது நிதி நிலைமை ஆகி­ய­வற்றை எண்ணி பலர் மனப்­ப­தற்­றத்­திற்கு ஆளாகின்றனர்.

"ஆனால், அவர்­கள் அனை­வ­ரும் மனக்­க­லக்க நோயால் பாதிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தங்­க­ளது அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அவ­திப்­ப­டு­வர்.

"இவர்­க­ளது பதற்ற நிலை­யின் தீவி­ர­மும் கால அள­வும் அதி­க­மாக இருக்­கும்," என்­றார் சிங்­கப்­பூர் மன­நல உள்­ளாய்வு நிலை­யத்­தின் மூத்த உதவி இயக்­கு­னர் வூன் யென் சிங்.

மனப்­ப­தற்­றம்

நாம் அனை­வ­ரும் அவ்­வப்­போது மனப்­ப­தற்­றத்தை உணர்­வோம். இந்­தப் பதற்­றம் மன­வு­ளைச்­ச­லி­னால் நம் உட­லில் ஏற்­படும் இயற்­கை­யான எதிர்­வி­னை­யா­கும்.

மனப்­பதற்­றம், மூச்­சுத்­தி­ண­றல் போன்ற உடல் சார்ந்த அறி­கு­றி­க­ளை­யும், அச்­சம் போன்ற உள­வி­யல் அறி­கு­றி­க­ளை­யும் உள்­ள­டக்­கும்.

"குறைந்த அள­வில் ஏற்­படும் மனப்­ப­தற்­றம் அசௌ­க­ரி­ய­மாக இருந்­தா­லும், சில சூழ்­நி­லை­களில் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­த­வும் கடி­ன­மான சூழ்­நி­லை­க­ளைச் சமா­ளிக்­க­வும் உத­வு­கிறது," என்­றார் மன­நல மருத்­து­வ­ம­னை­யின் ஆலோ­ச­கர் டாக்­டர் லாவ் பூன் ஜியா.

மனப்­ப­தற்­ற­மும் மனக்­க­லக்கமும்

அள­வுக்கு மீறிய மனப்­ப­தற்­றத்­தால் ஒரு­வர் நீண்ட காலம் அவ­திப்­பட்­டால், அவ­ரு­டைய செயல்­ தி­றன் பாதிப்­ப­டை­கிறது. இதை மன­நல மருத்­து­வர்­கள் மனக்­க­லக்க நோய் என்று வகைப்­ப­டுத்­து­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­க­மாக மனப்­ப­தற்­றத்­திற்கு ஆளா­கின்­ற­னரா அல்­லது மனக்­க­லக்கத்திற்கு ஆளா­கின்­ற­னரா என்று கூறு­வது சற்­றுக் கடி­னம்.

இருப்­பி­னும் 2016ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் மன­ந­லக் கழ­கம் மேற்­கொண்ட ஆய்­வில், புள்­ளி­வி­வ­ரங்­க­ளின் தர­வு­க­ளின்­படி பொது­வான மனப் பதற்ற நோய் வாழ்­நாள் பர­வ­லில் குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­துள்­ளது என்­பது தெரியவந்­துள்­ளது.

அதே­வே­ளை­யில், மன­ந­லம் குறித்த கல்­வி­ய­றிவு மக்­க­ளி­டைய அதி­க­ரித்­துள்­ளது. எனவே, இது­போன்ற மனப்­ப­தற்ற அறி­குறி தென்­பட்­ட­தும் மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னையை நாடி வரு­வ­தும் அதி­க­ரித்­துள்­ளது என்­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள்.

"கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொவிட்-19 தொற்று பல­ருக்­கும் வெவ்­வேறு வழி­களில் பாதிப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக ஏற்­கெ­னவே, மன­த­ள­வில் அதா­வது மனப்­ப­தற்­றம், மனக்­க­லக்­கம் ஆகிய நோய்­களை எதிர்­நோக்­கி­ய­வர்­களே அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர்.

"மனப்­ப­தற்­றம் ஏற்­பட பல கார­ணங்­கள் உண்டு. ஒரு­வ­ரின் வாழ்க்கை நிகழ்­வு­கள் அல்­லது சூழ்­நி­லை­கள் அவர்­க­ளது மனப்­பதற்­றத்­தின் அளவை நிர்­ண­யிக்­கும்.

"இக்­கா­ர­ணங்­கள் அகன்­றால், மனப்­ப­தற்­ற­மும் அக­லும். ஆனால் மனக்­க­லக்க நோய் உள்­ள­வர்­க­ளுக்கு, இக்­கா­ர­ணங்­கள் அக­லு­வ­தால் முன்­னேற்­றம் ஏற்­ப­டாது," என்­றார் கிளி­னி­கல்ஸ் மருத்­து­வ­மனை­யின் மன­நல மருத்­து­வர் டாக்­டர் லிம் பூன் லெங்.

மனக்­க­லக்க நோயால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் அதி­க­மாக கவலை கொள்­வ­தோடு, தூக்­க­மின்மை, பட­ப­டப்பு, எரிச்­சல், சோர்வு, தசை­வலி, தலை­வலி, வயிற்­று­வலி, எதி­லும் கவ­னம் செலுத்த இய­லாமை போன்ற அறி­கு­றி­களில் மூன்­றை­யா­வது அனு­ப­விப்­பார்­கள்.

"தைராய்டு, நீண்ட கால மன உளைச்­சல், மர­பி­யல், குழந்­தைப் பரு­வத்­தில் வன்­கொ­டுமை போன்ற கார­ணங்­கள் ஒரு­வ­ருக்கு மனக்­கலக்க நோயை உரு­வாக்­கும் ஆபத்தை அதி­க­ரிக்­கும்," என்று டாக்­டர் லிம் பூன் லெங் தெரி­வித்­தார்.

"மனக்­க­லக்க நோய்க்கு இரு முக்­கிய சிகிச்சை முறை­கள் உள்­ளன. அவை மருந்து மற்­றும் உள­வி­யல் சிகிச்­சை­யா­கும். உள­வி­யல் சிகிச்சை நமது பதற்ற எண்­ணங்­களை மறு­வ­டி­வ­மைக்க நமக்­குப் பயிற்­சி­ய­ளிக்­கும்.

"மனப்­ப­தற்­றத்­தைக் கையாள்­வ­தற்கு உடற்­ப­யிற்சி, போது­மான அளவு ஓய்வு, பொழு­து­போக்­கு­களில் ஈடு­ப­டு­தல் போன்­ற­வற்றை மேற்­கொள்ள வேண்­டும். மது அருந்­து­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.

"மனக்­க­லக்க நோயா­லும் மனப்­பதற்­றத்­தா­லும் அவ­திப்­ப­டு­வோ­ருக்கு சமூ­கத்­தின் ஆத­ரவு அவ­சி­யம்.

"வேலை­யி­டங்­களும் குடும்­பத்­தா­ரும் இவர்­க­ளுக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்து ஆத­ர­வ­ளிப்­பது இன்­றி­ய­மை­யா­த­தா­கும் என்­றார் டாக்­டர் லிம் பூன் லெங்.

"மனப்­ப­தற்­றம் உள்­ள­வர்­க­ளின் அனு­ப­வத்­தைப் புரிந்­து­கொள்ள இய­லா­விட்­டா­லும், அத­னைப் புறக்­கணிக்­கக் கூடாது. மாறாக, அந்­ந­ப­ருக்கு உதவ முயற்சி செய்ய வேண்­டும்", என்று வூன் யென் சிங் கூறி­னார்.

"ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே மருத்­து­வரை நாடு­வது மனப்­ப­தற்­றத்­துக்­குச் சிகிச்­சை­ய­ளிக்­க­வும், பாதிப்­பைக் குறைக்­க­வும் உத­வும்," என 'டிடி­எபி' மருந்­த­கத்­தின் டாக்­டர் கொ லிட் சிங் வலி­யு­றுத்­தி­னார்.

மன­ந­லம் குறித்து அதிக விழிப்­பு­ணர்வு

பதி­னேழு வய­தில் தனது மனப் ­ப­தற்­றத்­துக்­காக மருத்­து­வரை நாடிய வியானோ ஸ்ப்­ரு­யிட், 25, புறக்­க­ணிக்­கப்­பட்­டார்.

"துணிச்­சலை வர­வ­ழைத்­துக்­கொண்டு உதவி நாடு­வது எளி­தல்ல. மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து உதவி கிட்­டாது என நான் எண்­ண­வில்லை," என்­றார் வியானோ ஸ்ப்­ரு­யிட். நரம்­பி­யல் சார்ந்த பிரச்­சினை கார­ண­மாக இவ­ருக்­கு தன்­னிச்­சை­யாக நடுக்­கங்­கள் ஏற்­படும்.

"பொது சூழ்­நி­லை­களில் கை நடுக்­கங்­கள் அதி­க­ரிப்­ப­தோடு, இவ­ரது நடை ஒருங்­கி­ணைப்­பில்­லா­மல் போகும். ஆத­லால் தனது தேசிய சேவை­யின்­போது, தன்­னைப்­போல் அவ­திப்­படும் மக்­க­ளுக்­காக ஒரு நிகழ்­நி­லைத் தளத்தை உரு­வாக்­கி­னார். நிகழ்­நிலை 'புல்­லட்­டின்' எனப்­படும் இந்த இணை­ய­த்த­ளத்­தில் மக்­கள் தங்­க­ளது மன­ந­லனை நிர்­வ­கிப்­ப­தற்­கான அனு­ப­வங்­க­ளை­யும் வளங்­க­ளை­யும் பகிர்ந்து கொள்­ள­லாம். தற்­போது இந்­தப் புல்­லட்­டின் 'டெலி­கி­ராம்' 'டிஸ்­கார்ட்' போன்ற தளங்­களில் 'ஹடல்­ஹு­மன்ஸ்' என்ற பெய­ரில் உள்­ளது.

கொவிட்19 தொற்­று­நோய்க்­குப் பிறகு, இது­போன்ற பல மன­நலன் சார்ந்த செயல்­க­ளின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!