விட்டு விலகிய கட்டுப்பாடு; தொட்டுத் தழுவிய வழிபாடு

விட்டு விலகிய கட்டுப்பாடு; தொட்டுத் தழுவிய வழிபாடு

2 mins read
5bc53ce0-affc-45b5-876a-f035c26fdd03
தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றான டன்லப் ஸ்திரீட் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கிட்டத்தட்ட 450 பேர் பங்கேற்றனர். படம்: இர்ஷாத் முஹம்மது -

புனித ரம­லான் மாதம் வரு­வ­தற்கு இன்­னும் 15 நாள்களே உள்ள நிலை­யில் 'நிஸ்ஃபு ‌‌‌ஷாபான்' எனும் பரா­அத் இரவு நேற்று முன்­தி­னம் மாலை சிறப்­பா­கப் பள்­ளி­வா­சல்­களில் கொண்­டா­டப்­பட்­டது.

கொவிட்-19 நோய்ப்­ப­ர­வலை சமா­ளிக்க நடப்­பில் உள்ள கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தில் இரண்டு ஆண்­டு­களில் காணாத கண்­கொள்ளாக் காட்­சி­யாக பள்­ளி­வா­சல்­கள் நிறைந்­தி­ருந்­தன.

மேலும் இடை­வெ­ளி­யின்றி அரு­ க­ரு­கில் நேர்­வ­ரி­சை­யில் தொழுகை மேற்­கொள்ளக்கூடிய வாய்ப்­பை­யும் வழி­பாட்­டா­ளர்­கள் பெற்­ற­னர். நோய்ப் பர­வல் தொடங்­கிய காலத்­தி­லி­ருந்து பள்­ளி­வாசல்­கள் மூடப்­பட்­டன. பின்­னர் திறக்­கப்­பட்­டா­லும் முன்­ப­திவு, தூர இடை­வெளி, தனித்­தனி குழுக்­க­ளாக 'ஸோன்' களில் தொழு­வது என பல கட்­டுப்­பா­டு­க­ளைச் சந்­தித்து, சமா­ளித்து வந்­தோ­ருக்கு நேற்று முன்­தி­னம் பெரும் நிம்­ம­தி­யும் மன நிறை­வும் கிடைத்­த­தாக அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர் முஹம்­மது சித்­திக் தெரி­வித்­தார்.

மக்­ரிப் தொழுகை தொடங்கி, இ‌‌‌ஷா வரை டன்­லப் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள இப்­பள்­ளி­வா­ச­லில் நடந்த இந்­தச் சிறப்புத் தொழுகை மற்­றும் நிகழ்ச்­சி­களில் கிட்­டத்­தட்ட 450 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மறு­மேம்­பாட்­டுப் பணி­கள் நடந்து­வ­ரும் பென்­கூ­லன் பள்­ளி­வா­சல், இந்த சிறப்பு நாளை முன்­னிட்டு பயான் பேரு­ரை­யை­யும் துஆ­வை­யும் இணை­யம்­வழி நடத்தி, வீட்­டி­லி­ருந்­த­ப­டியே மக்­கள் பார்க்­கக்கூடிய வாய்ப்பை ஏற்­ப­டுத்தித் தந்­தது.

"இந்­தக் காட்­சி­யைப் பார்த்­த­தில் கண்­கள் கலங்­கி­விட்­டன. அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து தொழுகை நடத்­தும் வாய்ப்பு மீண்­டும் கிடைத்­துள்­ள­தற்கு இறை

­வ­னுக்கு நன்றி கூற­வேண்­டும்," என்­றார் துணைத் தலை­வர் திரு முகம்­மது இத்­ரீஸ்.

அதே நேரத்­தில் அனை­வ­ரும் முகக்கவ­சங்­களை அணிந்து, தனிப்­பட்ட தொழுகை பாய்­களை எடுத்­து­வந்து பொறுப்­பு­டன் இருக்­கும்­ப­டி­யும் அவர் நினை­வு­றுத்­தி­னார்.

அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளி­லும் சிறப்­பாக நடை­பெற்ற இந்­தக் கொண்­டாட்­டங்­களை அடுத்து எதிர்­வ­ரும் ரம­லான் மாத 'தரா­விஹ்' தொழு­கை­களும் இதர வழி­பா­டு­களும் சிறப்­பாக, அதிகம் பேருடன் நடை­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யில் மக்­கள் உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.