ஓவியப் படைப்புகளில் முத்திரை பதிக்கும் தமிழர்

ஃபேரர் பார்க் மருத்­து­வ­ம­னை­யில் வீற்­றி­ருக்­கும் ஆளு­யர ஆப்­பிள்­களை­யும், 'தி இன்­டர்­லேஸ்' வளா­கத்­தில் நட­ன­மா­டும் சிவப்பு மிள­கா­யை­யும் சிங்­கப்­பூ­ரர்­கள் கண்­டி­ருக்­கக்கூடும். சிங்­கப்­பூர் தலங்­களுக்கு அழ­கு சேர்க்­கும் தனித்­து­வ­மான இச்­சி­லை­க­ளின் பின்­னணி­யில் உள்­ள­வர், தமி­ழ­ரா­ன திரு­வாட்டி குமாரி நாகப்­பன்.

ஓவிய, சிற்­பக் கலை­யில் 32 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அனு­பவம் பெற்­றி­ருக்­கி­றார் 69 வயது திரு­வாட்டி குமாரி. தனது 37வது வய­தில் உட்­புற வடி­வ­மைப்­புப் பணியை விட்டு, முழு­நேர ஓவி­யக் கலை­ஞ­ராக இவர் பரி­மாணம் கண்­டார்.

சாங்கி விமான நிலை­யத்­தில் சித­றிக் கிடந்த பெரிய ஆனைக் குண்­டு­ம­ணிச் சிலை­கள், 'ஐயோன் ஆர்ச்­சர்ட்' கடைத்தொகுதிக்கு வெளி­யில் இருந்த ஜாதிக்­காய் சிலை, தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தின் வெளி­யில் நின்ற குண்­டு­மி­ள­காய் சிலை ஆகி­ய பிர­ப­ல சிலை­களை திரு­வாட்டி குமாரி வடி­வமைத்­தி­ருந்­தார்.

வரலாற்றிலும் கலாசாரத்திலும் திருவாட்டி குமாரிக்கு அலாதி ஆர்வம் இருந்து வந்தது. கதைகளைச் சித்திரிப்பவராகத் தன்னைப் பற்றி எண்ணும் இவர், வரலாற்றுக் கதைகளையும் தனது படைப்புகளின் வாயிலாகக் காட்ட முனைந்தார். மிள­காய், ஜாதிக்­காய் முத­லி­ய பல வகை நறு­ம­ணப் பொருள்கள் பண்­டை­யக் காலத்தில் சிங்­கப்­பூ­ரின் வர்த்­த­கத்­தில் முக்­கி­யப் பங்கு வகித்­தன.

மேலும், இப்­பொ­ருள்களை சிங்­கப்­பூ­ரின் பல்­லி­னத்­தவரும் வெவ்­வேறு வகை­களில் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். இத்­த­கை­ய சிறப்­பு­டைய நறு­ம­ணப் பொருள்கள் பல்­லி­னச் சமு­தா­ய­மா­ன சிங்­கப்­பூ­ரின் தனித்­து­வத்­தைப் பறை­சாற்­றும் என்று எண்­ணி­ய­தால், அவற்­றைச் சிலை­க­ளாக வடி­வ­மைத்­த­தா­கக் கூறினார் திரு­வாட்டி குமாரி.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் 33 இடங்­களில் நிற்­கும் புலிச் சிலை­களில் ஒன்­றை­யும் வடி­வ­மைத்­துள்­ளார் திரு­வாட்டி குமாரி.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் புலி­களின் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறைந்து வரு­கிறது. 'டபிள்யூ­ட­பிள்­யூஎஃப்' எனும் அனைத்­து­லக இயற்கை நிதி­யின் சிங்­கப்­பூர் பிரிவு அதன் தொடர்பில் விழிப்­பு­ணர்வை வளர்க்க எடுக்­கும் முயற்­சி­யில் புலிச் சிலை­கள் அடங்­கும்.

திரு­வாட்டி குமாரி வடித்த உட­லில் நட்­சத்­தி­ரங்­கள் பொறிக்­கப்­பட்ட நீல நிறப் புலி கரை­யோர பூந்­தோட்­டங்­களில் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் உட்­பட இது­வரை 14 நாடு­களில் திரு­வாட்டி குமா­ரி­யின் ஓவிய, சிற்­பப் படைப்­பு­கள் கண்­காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இளம் ­வ­ய­தில் பச்­சைப் பசே­லென்­ற திடல்­கள், வனப்­ப­கு­தி­கள் போன்றவற்றின் மத்தியில் வளர்ந்­தார் திரு­வாட்டி குமாரி. இயற்­கையே தனது ஓவி­யக்­கண்­ணைத் திறந்த­தாக உணர்­கி­றார் திரு­வாட்டி குமாரி.

"எனது எல்லா படைப்­பு­க­ளி­லும் இயற்­கையை மைய­மா­கவோ தொடக்­கப்­புள்­ளி­யா­கவோ கொண்­டுள்­ளேன். இயற்­கையை வைத்தே நம்­மை­யும் நமது சுற்­றுச்­சூ­ழ­லை­யும் பற்றி அறிந்­து­கொள்­ள­மு­டி­யும்," என்­றார் திரு­வாட்டி குமாரி.

ஆ. விஷ்ணு வர்தினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!