சிங்கப்பூரில் உருவெடுக்கும் சமூக நூலகங்கள்

சிங்கப்பூரில் உருவெடுக்கும் சமூக நூலகங்கள்

2 mins read
b565270d-faa0-4011-b1f6-1e6e7ceb55f6
ஈஷூனில் அமைந்துள்ள சமூக நூலகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈஷூன் அவென்யூ 11 வீவக புளோக் 436 அடித்­த­ளத்­தில் புத்­த­கக் கடை­யைப் போன்று காட்­சி­யளிக்­கிறது ஒரு பகுதி (படம்).

பலர் நன்­கொ­டை­யாக வழங்கிய புத்­த­கங்­கள் இங்கு வைக்­கப்­பட்டுள்­ளன. குழந்­தை­க­ளுக்­கான புத்­தகங்­கள், சிறு­வர் புத்­த­கங்­கள், மொழி­பெ­யர்க்­கப்­பட்ட பிர­பல ஆங்­கில கதைப்­புத்­த­கங்­கள் உள்­ளிட்­டவை இவற்­றில் அடங்­கும்.

'டேக் ஒன், ரீட் ஒன், ரிட்டர்ன் ஒன்'... அதாவது 'ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு புத்தகத்தைப் படியுங்கள், ஒரு புத்தகத்தை வழங்குங்கள்' என்று இங்குள்ள சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக மற்றொன்றை வைக்குமாறு வருகை தருபவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த சமூக நூல­கத்­திற்கு 'ஈஷூன் சூப்­பர்­ஹீரோ லைப்­ரரி' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இது 24 மணி­நே­ரத்­திற்­குத் திறந்­தி­ருக்­கும்.

"இங்கு வந்­து­போ­வ­தற்­குத் தடை இல்லை. சிறு­வர்­க­ளி­டையே வாசிப்­புப் பழக்­கத்தை ஊக்­கு­விப்­பதே எனது குறிக்­கோள்," என்று இந்த சமூக நூல­கத்தை உரு­வாக்­கிய மூவ­ரில் ஒரு­வ­ரான 67 வயது சியா காம் போய் கூறி­னார். இவ­ரு­டன் ஈஷூனில் வசிக்­கும் 73 வயது வோங் போ கிம், 58 வயது அஷார் முகம்­மது சோ ஆகி­யோர் நூல­கத்தை உரு­வாக்­கி­னர்.

இந்த சமூக நூல­கத்­தில் உள்ள அனைத்து அறை­க­லன்­களும் நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டவை அல்­லது சேத­ம­டைந்து சரி­யாக்­கப்­பட்­டவை.

சில, பழைய அறை­க­லன்­க­ளி­லி­ருந்து மேம்­ப­டுத்­தப்­பட்­டவை.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் உரு­வெடுத்­துள்ள 20க்கும் அதி­க­மான சமூக நூல­கங்­களில் இது ஒன்று. வீவக புளோக்­கு­க­ளின் அடித்­த­ளங்­கள், வீவக வீட்டு வாசல்­கள் உள்­ளிட்ட பல பொது இடங்­களில் இவை அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கிள­மெண்டி, கிம் மோ உள்­ளிட்ட வட்­டா­ரங்­களில் இத்­த­கைய சமூக நூல­கங்­கள் இருக்­கின்­றன. இத்­தகைய சிறு சமூக நூல­கங்­க­ளுக்­கான 'லிட்­டில் லைப்­ர­ரீஸ் சிங்­கப்­பூர்' எனும் ஃபேஸ்புக் பக்­க­மும் சென்ற ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. அதில் கிட்டத்தட்ட 1,300 உறுப்­பினர்­கள் இருக்­கின்­ற­னர்.