பணத்தைச் சேமிப்பதற்கான வழிமுறைகள்

பணத்தைச் சேமிப்பதற்கான வழிமுறைகள்

4 mins read
0a13d5ff-256d-4af4-acd7-2719acde0740
பெட்ரோல், மின்சாரம், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. உலகளவில் பணவீக்கம் உயர்வு, தளவாடம் தொடர்பான செலவினம், உக்ரேன்-ர‌ஷ்யா போர் உள்ளிட்ட அம்சங்கள் விலையுயர்வுக்கு காரணமாக உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகளவில் பணவீக்கம் உயர்வு, உக்ரேன்-ர‌ஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களால் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம்

பெட்­ரோல், மின்­சா­ரம், முட்டை போன்ற அத்­தி­யா­வ­சியப் பொருள்­களின் விலை உயர்ந்­து­கொண்டே செல்­கிறது. உல­க­ள­வில் பண­வீக்­கம், தள­வா­டம் தொடர்­பான செல­வி­னம், உக்­ரேன்-ர‌ஷ்ய போர் உள்­ளிட்ட அம்­சங்­கள் விலை­யு­யர்­வுக்கு கார­ண­மாக உள்­ளன.

என்­றா­லும், சிறு­சிறு உத்திகளைப் பின்பற்று­வ­தன் மூலம் வாழ்க்கை செல­வி­னம் உயர்­வ­தன் தாக்­கத்தை நீங்­கள் குறைக்­க­லாம்.

வெளியே சாப்­பி­டு­வ­தைக் குறைத்­துக்­கொள்­வது, மலிவு விற்­பனை­யில் பொருள் வாங்­கு­வது உள்­ளிட்­டவை சில அடிப்­படை உத்­தி­கள்.

1. மளிகைப் பொருள் செலவைக் குறைக்க உணவு சமைப்பதில் முன்கூட்டியே திட்டமிடுதல்

நான்கு பேர் கொண்ட குடும்­பத்­துக்­காக இரு வாரங்­க­ளுக்­கான சமை­ய­லுக்­குத் திட்­ட­மி­டு­வ­தால் ரடியா பிஸ்­மில்­லா­வால் செல­வி­னத்­தைக் குறைக்க முடி­கிறது.

"முன்­ன­தாக, எனது குடும்­பத்­துக்­குத் தேவை­யான அள­வைவிட அதி­க­மாக நான் சமைத்­தேன். அத­னால், உண­வுக் கழி­வும் அதி­க­ரித்­தது.

"உணவு சமைக்க திட்­ட­மி­டு­வதால், பணத்­தைச் சேமிப்­ப­துடன் நேரத்­தை­யும் மிச்­சப்­ப­டுத்த முடி­கிறது. என்ன சமைப்­பது என்­பதை நான் திட்­ட­மி­ட­வில்லை என்­றால், குளிர்­ப­த­னப் பெட்­டி­யைத் திறந்து சமை­ய­லுக்­குத் தேவை­யான பொருள்­க­ள் இருக்கிறதா எனப் பார்க்­கும்­போது, சமை­ய­லுக்கு மற்ற பொருள்­களை வாங்க வேண்­டும் என நினைப்­பேன்," என்­றார் திருமதி ரடியா, 30.

2. மலிவு விலை­யில் உணவை வாங்­க­வும்

இல்­லத்­த­ர­சி­யான மேக்­ட­லின் பேல­னுக்கு தோ பாயோ ஈரச்­சந்­தை­யில் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் மீன் கிடைக்­கிறது.

"கானாங்­கெ­ளுத்தி முழு மீனை நான் ஏறத்­தாழ $13க்கு வாங்க முடி­கிறது. பேரங்­கா­டி­களில் இதே மீன் துண்­டு­கள் இன்­னும் கூடு­தல் விலைக்கு விற்­கப்­ப­டு­கிறது," என்­றார் அவர்.

உணவு காலா­வ­தி­யா­கும்­தேதி நெருங்­கும்­போது அதன் விலை குறைக்­கப்­படும். அத்­த­கைய உணவை அவர் வாங்­கு­வார்.

விலை­யு­யர்ந்த சின்ன பொருள்­களுக்­குப் பதி­லாக ஃபேர்பி­ரைஸ் சின்ன பொருள்­களை வாங்­கு­வது மற்­றொரு உத்தி.

3. மின்னியல் சாலைக் கட்டணத்தைத் தவிர்க்கவும்

கூகல் மேப்ஸ் செயலி, தனது கார் பய­ணத்­துக்­குத் திட்­ட­மிட உத­வு­வ­து­டன், மின்­னி­யல் சாலைக் கட்­டண வாயில்­க­ளைத் தவிர்க்­க­வும் அச்­செ­யலி உத­வி­யாக இருப்­ப­தாக திரு கீத் ஓங் கூறு­கி­றார்.

மின்­னி­யல் சாலைக் கட்­ட­ணத்­தைத் தவிர்ப்­ப­தற்­கான தெரிவு அச்­செ­ய­லி­யில் உள்­ளது. மேலும், போக்­கு­வ­ரத்து நெரி­சல் குறைந்த பாதை­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­க­வும் கூகல் மேப்ஸ் உத­வும் என்­கி­றார் திரு ஓங். இத­னால், போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிக்­கிக்­கொள்­வ­தைத் தவிர்க்க முடி­வ­தால் நேரத்­தை­யும் பெட்­ரோ­லை­யும் மிச்­சப்­ப­டுத்­த­லாம் என்­கி­றார் திரு ஓங்.

4. தள்­ளு­படி விலை­யில் பெட்­ரோல் வாங்­க­வும்

கடன் பற்று அட்­டை­கள், லாயல்டி அட்­டை­கள், செய­லி­கள், வெகு­மதி புள்­ளி­கள் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்தி பெட்­ரோல் விலை­யில் தள்­ளு­ப­டி­யைப் பெற­லாம்.

அத்­த­கைய அட்­டை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் பெட்­ரோல் கட்­ட­ணத்­தில் கிட்­டத்­தட்ட 21 விழுக்­காடு தள்­ளு­படி பெற முடி­வ­தாக திரு கிளேர் டோ கூறி­னார்.

5. பயனீட்டுச் சேவை வழங்குநர்களை மாற்றவும்

ஓராண்­டிற்கு முன்பு வேறொரு பய­னீட்­டுச் சேவை வழங்­கு­ந­ருக்கு மாறி­னார் திரு­மதி டோ. அதைத் தொடர்ந்து, மாதக் கட்­ட­ணம் 5 விழுக்­காடு குறைந்­ததை அவர் உணர்ந்­தார்.

அதோடு, கடன் பற்று அட்­டை­க­ளைக் கொண்டு பய­னீட்­டுக் கட்­ட­ணம் செலுத்­தும்­போது விலைத் தள்­ளு­படி கிடைக்­கி­றதா என்­ப­தை­யும் பார்க்­கு­மாறு பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு அவர் ஆலோ­சனை வழங்­கு­கி­றார்.

"ஒவ்­வொரு முறை­யும் நாம் சேமிக்­கும் பணம் குறை­வாக இருக்­க­லாம். ஆனால், சிறு­துளி பெரு­வெள்­ளம்," என்­கி­றார் அவர்.

6. 'சிம்' மட்டுமான கைபேசித் திட்டத்துக்கு மாறலாம்

சொத்­துச் சந்தை ஆலோ­ச­க­ரான திரு நிக்­க­லஸ் ஹுவாங், 37, ஈராண்­டு­க­ளுக்கு முன்பு வழக்­க­மான கை­பே­சித் திட்­டத்­தைக் கைவிட்டு சிம் மட்­டுமான திட்­டத்­துக்கு மாறி­னார்.

உங்­க­ளது திறன்­பே­சி­யில் உள்ள சிம் அட்­டை­யில் நீங்­கள் பயன்­படுத்தும் நிமி­டங்­கள், குறுஞ்­செய்­தி­கள், தர­வுக்கு மட்­டும் கட்­ட­ணம் செலுத்த இத்­திட்­டம் வகை செய்­கிறது.

தமது பணி­யில் திரு ஹுவாங்­கின் கைபேசி பயன்­பாடு அதி­க­மாக இருந்­தா­லும், கைபே­சிக் கட்­ட­ணம் $200லிருந்து $35ஆக குறைந்­தது.

7. இணையத்தில் பொருள் வாங்கும்போது பற்றுச்சீட்டுகளைப் பெறவும்

இணை­யத்­தில் பொருள் வாங்­கும்­போது விலைக்­குத் தகுந்த மதிப்­பைப் பெற '‌‌‌ஷாப்­பேக்' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளு­மாறு திரு­மதி செர் பரிந்­து­ரைக்­கி­றார். ‌‌‌ஷாப்பி, ஃபுட்பாண்டா, லஸாடா, ஸலோரா உள்­ளிட்ட பிரபல மின் வணிகத் தளங்­களில் 'கே‌ஷ்­பேக்' பற்­றுச்­சீட்­டு­களை அச்­செ­யலி வழங்­கு­கிறது.

8. முன்னதாக பயன்படுத்தப்பட்ட பொருள்களை வாங்கலாம்

'கேரோ­செல்' மின் வணி­கத் தளத்­தில் ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்­தப்­பட்ட துணி­ம­ணி­களை திரு­மதி செர் வாங்கி விற்­கி­றார். நல்ல நிலை­யில் உள்ள துணி­களை பாதி அல்­லது அதற்­கும் குறை­வான விலை­யில் அவர் வாங்­குகிறார்.

விளை­யாட்­டுப் பொருள்­கள், நூல்­கள், குழந்தைகள் பயன்­ப­டுத்­தும் பொருள்­கள் என பல்­வேறு பொருள்­களை அவர் வாங்­கி­யி­ருக்­கி­றார்.

9. செலவினத்தைக் கண்காணிக்கவும்

ஒரு­வ­ரது செல­வி­னத்­தைக் கட்டுப்­ப­டுத்த வர­வு­செ­லவு, நிதித் திட்­ட­மி­டு­தல் செய­லி­க­ளைப் பயன்­படுத்­து­மாறு வங்கி ஊழி­யர் நவின் ஸ்ரீகந்­தன், 31, அறி­வு­றுத்­து­கி­றார்.

வெவ்­வேறு கடன்பற்று அட்­டை­களின் அனு­கூ­லங்­க­ளைப் பற்றி ஆராய்­வது முக்­கியம் என அவர் வலி­யு­றுத்­து­கி­றார்.

"ஒவ்­வொரு பிரி­வி­லும் நீங்­கள் ஏறக்­கு­றைய எவ்­வ­ளவு செலவு செய்­கி­றீர்­கள் என்­பதை நீங்­கள் கண்­ட­றி­யும்­போது உங்­க­ளது செல­வி­னத்தை நீங்­கள் கண்­கா­ணிக்க முடி­யும்," என்­கி­றார் அவர்.

"உங்­க­ளது செல­வி­னத்­தைப் பற்றி நீங்­கள் தெரிந்­து­கொள்­ளும்­போ­து­தான் அதைக் கட்­டுப்­ப­டுத்த முயற்சி எடுக்க முடி­யும்," என்­றும் அவர் கூறி­னார்.