அன்னாசிப் பழத்தின் நற்குணங்கள்

அன்னாசிப் பழத்தின் நற்குணங்கள்

1 mins read
3795d25c-8319-405d-8919-491239e685bd
பல்வேறு சத்துக்கள் நிறைந்த அன்னாசிப் பழம். படம்: பெர்ச்ட் -

உயர் ரத்த அழுத்­தத்­தைக் குறைக்க பொட்­டா­சி­யம் நிறைந்த உண­வு­கள் மிக முக்­கி­யம். அன்­னா­சிப் பழத்­தில் அதிக அள­வில் பொட்­டா­சி­யம் சத்து நிறைந்­துள்­ள­தால், ரத்த அழுத்­தத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யும்.

அன்­னா­சி­யில் வைட்­ட­மின்-சி சத்து அதிக அள­வில் உள்­ளது. அதே­ச­ம­யம் நோய் எதிர்ப்பு சக்­தி­யும் நிறைந்­துள்­ளது. இதனை தின­மும் உண்டு வந்­தால் நோய் எதிர்ப்பு மண்­ட­லம் வலு­வ­டை­யும்.

உடல் காயங்­களும் வெகு­விரை­வில் ஆறும். அன்­னா­சிப் பழத்­தில் அதிக அள­வில் உள்ள கால்­சி­யம் மற்­றும் மெக்­னீ­சி­யம் சத்து எலும்­பு­க­ளின் வலி­மையை அதி­க­ரிக்­கிறது.

இப்­ப­ழத்­தில் நார்ச்­சத்­தும் நிறைந்­துள்­ளது. அத­னால் ஜீரண மண்­ட­லத்தை அது வலுப்­படுத்­து­கிறது. அதே சம­யம் நார்ச்­சத்­து­கள் உட­லில் உள்ள தேவை­யற்ற கொழுப்­பு­களை கரைக்­கக் கூடி­யவை என்­ப­தால், உடல் எடை­யைக் குறைக்க முடி­யும்.

அன்­னா­சிப் பழத்­தில் அதிக அள­வில் வைட்­ட­மின்-ஏ சத்­தும் நிறைந்­துள்­ளது. வைட்­ட­மின்-ஏ சத்து, பார்வைக் குறை­பாடு ஏற்­ப­டா­மல் தடுக்க உத­வு­கிறது. மேலும் பார்வைக் கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டா­ம­லும் தடுக்­கிறது.