எண்ணத்தில் தெளிவு, வாழ்க்கையில் பிடிமானம்

எண்ணத்தில் தெளிவு, வாழ்க்கையில் பிடிமானம்

3 mins read
812f5f0e-7d61-4c64-b491-1cc931fc8431
-

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் நாம் அனை­வ­ரும் இயல்பு வாழ்க்கை என்­றால் என்ன என்­பதை மறந்­து­விட்­டோம். புதிய இயல்பு நிலை இது­தான் என்று நாம் பழ­கிக்­கொள்ள விரும்­பி­னா­லும் மன அமைதி ஏனோ எட்­டாக் கனி­யா­கவே சில­ருக்கு உள்­ளது. நோய்த்­தொற்று, பொரு­ளா­தார நெருக்­கடி, பரு­வ­நிலை மாற்­றம், துக்­கம், இன­வா­தப் பிரச்­சி­னை­கள் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­ப­ட்டுள்­ளோம். புதி­தாக ஏற்­று­மதி இறக்­கு­மதி தடங்­க­லும் ரஷ்ய-உக்­ரேன் போரும் நம்மை வருத்­தத் தொடங்­கி­யுள்­ளன.

இவ்­வாறு நம் மனதை ஒரு­நி­லைப்­படுத்தி தெளி­வா­கச் செயல்­பட, தின­மும் நம் நேரத்தை நாம் எவ்­வாறு செல­வ­ழிக்­கி­றோம் என்­ப­தைத் தீர்­மானிக்க வேண்­டும். இம்­மு­டி­வு­கள் நம் விருப்­பங்­க­ளு­ட­னும் கொள்­கை­களு­ட­னும் ஒத்­துப்­போ­கும்­போது நமது வாழ்க்­கை­யின் மீது நமக்கு பொறுப்­பு­ணர்வு ஏற்­படும். இந்­நி­லை­யில், மன­தைச் சாந்­தப்­ப­டுத்த சில எளிய வழி­கள் இருக்­கின்­றன.

தியா­னம் செய்­தல்

அன்­றாட வாழ்க்­கை­யில் ஏற்­படும் மன­வு­ளைச்­சலை குறைக்­க­வல்­ல­தாக தியா­னம் செய்­வது கரு­தப்­ப­டு­கிறது.

நம் கவ­னம் சித­றும்­போது நம் மனதை ஒரு­நி­லைப்­ப­டுத்­தும் பயிற்­சி­யாக அமை­கின்­றது தியா­னம். முன்பு நடந்­த­தைப் பற்­றியோ, வருங்­கா­லத்­தில் நடக்க இருப்­ப­தைப் பற்­றியோ யோசிக்­கும்­போது நாம் கவ­லைப்­ப­டு­வோம். இதைப் போக்க, சுவா­சிப்­ப­தில் நாம் கவ­னம் செலுத்தி நிகழ்­கா­லத்­தைப் பற்றி சிந்­திக்­க­வேண்­டும்.

இதை ஆர்­வத்­து­டன் பொறு­மை­யா­கச் செய்­தால், நமக்கு மீண்­டும் தியா­னத்­தில் ஈடு­பட வேண்­டும் எனத் தோன்­றும். மேலும், காலை­யில் எழுந்­த­தும் அல்­லது சாப்­பிட்ட பிறகு அல்­லது சாப்­பி­டு­வ­தற்கு முன்பு தியா­னம் செய்­தால் அது நாள­டை­வில் நமக்­குப் பழ­கி­வி­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

'டைரி'யில் எழு­து­தல்

நாள்­கு­றிப்பு அதா­வது 'டைரி'யில் எழு­து­வ­தால் ஒரு­வ­ரது மன­ந­லன் மேம்­படும் என்று ஆய்­வு­கள் கண்­டறிந்­துள்­ளன.

அண்­மைய கால­மாக 'புல்­லட் ஜர்­ன­லிங்' எனப்­படும் டைரி­யில் எழு­து­வது பிர­ப­ல­ம­டைந்­துள்­ளது. இது ஒழுங்கு­படுத்­தும் முறை­யா­க­வும் மனதை அமை­திப்­ப­டுத்­தும் பயிற்­சி­யா­க­வும் விளங்­கு­கிறது.

நாம் எவ்­வாறு நமது நேரத்­தை­யும் உழைப்­பை­யும் பயன்­ப­டுத்­து­கி­றோம் என்று ஆராய்­வ­தற்கு இந்த 'புல்­லட் ஜர்­ன­லிங்' உத­வி­யாக உள்­ளது. மேலும், நமது செயல்­கள் எவ்­வாறு நம் மன­நி­லையை பாதிக்­கிறது என்­றும் இதன்­வழி நாம் அறியலாம்.

அதி­கமான தக­வல்­களைத்

தவிர்த்­தல்

மின்­னஞ்­சல், சமூக ஊட­கப் பதி­வு­கள், சுடச்­சுட கிடைக்­கும் செய்­தி­கள் என அடுத்­த­டுத்து அதி­க­ அளவிலான தக­வல்­கள் நம்மை வந்து அடை­யும்­போது கவலை, கோபம் அல்­லது இய­லாமை உணர்­வு­கூட நமக்கு ஏற்­ப­ட­லாம். இதைக் கட்­டுப்­ப­டுத்த, நம்­ப­க­மான ஓரிரு ஊட­கங்­க­ளி­லி­ருந்து மட்­டும் நாம் தேவை­யான தக­வல்­களைப் பெற்­று­கொண்டு குறிப்­பிட்ட நேரங்­களில் மட்­டும் அத்­த­க­வல்­க­ளைப் படிக்­க­லாம்.

மேலும், அவ­சி­ய­மில்­லாத தொழில்­நுட்­பச் சாத­னங்­களை 30 நாள்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தா­மல் இருக்க முயற்சி செய்ய வேண்­டும். அந்த 30 நாள்களில் நாவல் படிப்­பது, இசை கேட்டு ஓய்­வெ­டுப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களுக்கு நாம் நேரத்தை ஒதுக்­க­லாம்.

வீட்­டில் பொருள்­களை

அதி­க­மா­கச் சேக­ரிக்­கா­திருத்தல்

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­தின்­போது பல­ரும் தங்­கள் வீடு­களில் இருந்த தேவை­யில்­லாத பொருள்­களை அகற்­றி­னார்­கள்.

பொது­வா­கவே பொருள்­கள் நிரம்பி வழி­யும் இடங்­கள், தெளி­வாக யோசிப்­ப­தற்­குத் தடை­யாக விளங்­கு­கின்­றன. இவை அவ்­வி­டங்­களில் இருப்­ப­வர்­க­ளை­யும் அவர்­க­ளைச் சுற்றி இருப்­ப­வர்­க­ளை­யும் பாதித்து அவர்­களின் உணர்ச்­சி­க­ளை­யும் பாதிக்­கின்றன.

இருப்­பி­னும் இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்­போது, தனி­யாக இதைச் செய்­யத் தேவை­யில்லை. தங்­கள் வீட்­டை­யும் ஒழுங்­கு­ப­டுத்­தும் ஒரு­வ­ரு­டன் இப்­ப­ணி­யைச் சேர்ந்து செய்­ய­லாம். இத­னால், இரு­வ­ரும் ஒரு­வ­ருக்­கொரு­வர் ஆத­ர­வா­க­வும் ஆலோ­ச­க­ரா­க­வும் இருக்­க­லாம்.

அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன்

நேரம் செல­வி­டு­தல்

தனி­மை­யில் இருப்­பது மிக­வும் சிர­ம­மான ஒன்­றா­கும்; அது நம் மன­நலனை பாதிக்­கும்.

இந்த நேரத்­தில் நம் மன­ந­லனை மேம்­ப­டுத்­தக்­கூடி­ய­வர்­க­ளின் ஆத­ரவு நமக்­குத் தேவை.

ஆகை­யால், கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­தின்­போது தொடர்பு விட்­டுப்­போன உறவு­களை நாம் மீண்­டும் அழைக்­கத் தயங்­கக்­கூ­டாது.

அந்த முதல் அழைப்பு சற்று அசௌ­க­ரி­யத்­தைத் தந்­தா­லும் நம் உண்­மை­யான உணர்­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­தில் தவ­றே­தும் இல்லை.

செய்தி, படம்: இணையம்