தன்னம்பிக்கை தரும் பாரம்பரிய தற்காப்புக் கலை

தன்னம்பிக்கை தரும் பாரம்பரிய தற்காப்புக் கலை

2 mins read
198ba326-334a-4096-ac27-5a723e7d28c2
கலாசாரப் பின்னணி கொண்டிருப்பதால் களரிப் பயிற்சி தன்னை ஈர்த்ததாகக் கூறுகிறார் பொன்மொழி செம்பியன். படம்: த களரி அகாடமி -

தற்­காப்­புக் கலை என்று கூறி­னால் நம்­மில் பல­ருக்­கும் முத­லில் நினை­வுக்கு வரு­வது டேக்­வாண்டோ, கராத்தே போன்ற பயிற்­சி­களே. ஆனால், தேசிய கல்­விக் கழ­கத்­தில் படிக்­கும் 24 வயது பொன்­மொழி செம்­பி­ய­னுக்கு தற்­காப்­புக் கலை என்­றால், அது 'களரி' என்று அழைக்­கப்­படும் கள­ரிப் பயிற்­சி­தான்.

பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை அதி­க­ரித்து வரு­வதை அறிந்த பிறகு, தற்­காப்­புக் கலை ஒன்­றைக் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்ற ஆர்­வம் பொன்­மொ­ழிக்கு ஏற்­பட்­டது. ஆனால், 'முவே தாய்', குத்­துச்­சண்டை பயிற்­சி­க­ளைக் கற்­றுக்­கொள்ள முயன்­ற­போது, அவ­ருக்கு அப்­ப­யிற்­சி­க­ளின் மீது அதிக அள­வில் ஈடு­பாடு ஏற்­ப­ட­வில்லை.

"முவே தாய், குத்­துச்­சண்டை இரண்­டை­யும் கற்­று­கொள்ள முயன்­றேன். ஆனால், அவ்­வ­குப்­பு­க­ளுக்கு பிறகு அதிக சோர்­வும் வலி­யும் ஏற்­பட்­ட­தால் வேறு தற்­காப்­புக் கலை­க­ளைக் கற்­று­கொள்ள முடி­வெ­டுத்­தேன். அப்­போது தான் என்­னு­டைய அண்­ணன் கள­ரிப் பயிற்­சியை எனக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்," என்­றார் பொன்­மொழி.

இந்­தி­யக் கலா­சா­ரத்­தின் மீது இவ­ருக்கு இருந்த ஈடு­பா­டும் கள­ரிப் பயிற்­சி­யைக் கற்­றுக்­கொள்ள இவரை ஊக்­கு­வித்­தது. தனது 21வது வய­தில் 'த களரி அகா­டமி' என்ற பயிற்­சிக்­கூ­டத்­தில் கள­ரிப்ப்­ப­யிற்­சிக் கலை­யைக் கற்­றுக்­கொள்ள ஆரம்­பித்­தார் பொன்­மொழி.

தென்­னிந்­தி­யா­வின் கேரள மாநி­லத்­தில் தோன்­றிய களரி, யோகா, சிலம்­பம் ஆகிய பயிற்­சி­க­ளின் நுணுக்­கங்­க­ளைக் கொண்ட பழ­மை­வாய்ந்த தற்­காப்­புக் கலை­யாக விளங்­கு­கின்­றது.

"கள­ரி­யைக் கற்­றுக்­கொள்­வ­தால் என் உடல் மேலும் வலு­வ­டைந்­தி­ருக்­கிறது. ஆரம்­பக்­கா­லத்­தில் ஏற்­பட்ட அளவு உடல் சோர்வு இப்­போது ஏற்­ப­டு­வது இல்லை. மேலும், வகுப்­பு­க­ளி­லும் மற்ற நிகழ்ச்­சி­க­ளி­லும் மற்­ற­வர்­க­ளுக்கு முன் நின்று கள­ரிப் பயிற்­சியை செய்­து­காட்­டு­வ­தால் எனது தன்­னம்­பிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது," என்­றார் பொன்­மொழி.

"நான் மூன்று ஆண்­டு­க­ளாக கள­ரிப் பயிற்­சி­யைக் கற்­றுக்­கொண்டு வரு­கி­றேன். இருப்­பி­னும், நான் கற்­றுக்­கொள்­வ­தற்கு இன்­னும் பற்­பல விஷ­யங்­கள் இருக்­கின்­றன. இக்­க­லையை தொடர்ந்து கற்­றுக்­கொண்டு அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கும் இதை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்­பதே எனது ஆசை," என்­றும் அவர் கூறி­னார்.

களரி பயிற்சிக் கழகம்

சிங்­கப்­பூ­ரில் கள­ரிப் பயிற்­சி­யைக் கற்­றுக்­கொ­டுக்­கும் ஒரே கல்­விக்­கூ­ட­மாக விளங்­கு­கின்­றது 'தி களரி அகா­டமி'. கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக இயங்கி வரும் இந்த கல்­விக்­கழகத்தில் இது­வரை 450 மாண­வர்­கள் கள­ரிப் பயிற்­சி­யைக் கற்­றுக்­கொண்­டுள்­ளார்­கள். தற்­போது அங்கு 200 மாண­வர்­கள் பயில்­கி­றார்­கள்.

களரியைக் கற்றுக்கொடுக்க பொன்மொழியையும் சேர்த்து இங்கு எட்டு பயிற்றுவிப்பாளர்கள் இருக்கி றார்கள். கொவிட்-19 காலக்கட்டத்திற்கு முன் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள் ஆகியவற்றில் களரிப் பயிற்சிப் பயிலரங்குகளை நடத்தியதுடன் எஸ்பிளனேட், இஸ்தானா, இந்திய மரபுடைமை நிலையம் போன்ற இடங்களில் இவர்கள் நிகழ்ச்சி படைத்துள்ளார்கள்.