அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர்களின் பசுமை முயற்சி

சிங்­கப்­பூர் சுற்­றுப்­பு­றத்­தின் நீடித்த நிலைத்­தன்­மையை உறு­தி­செய்­யும் வித­மாக, சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030ஐ அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர் சங்­கம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, மார்ச் 20-ம் தேதி மெய்ந்­நி­கர் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டத்­தின் வழி­காட்­டு­தல்­களை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்­கான செயல்­திட்­டத்தை தொடங்­கி­வைத்­துப் பேசி­னார் அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர் சங்­கத்­தின் தலை­வர் சௌந்­தர ராஜன். பரு­வ­நிலை மாற்­றங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கத்­தைக் குறைக்க, நம் வாழ்க்­கை­மு­றையை சரி­செய்­து­கொள்­வ­தும் மற்­ற­வர்­க­ளி­டம் அது­பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தும் நீடித்த நிலைத்­தன்­மைக்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தும் இன்­றி­ய­மை­யா­தது என்­பதை அவர் எடுத்­து­ரைத்­தார்.

சமூ­கப் பொறுப்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் செயல்­படும் அதே வேளை­யில், இந்­தக் குறிக்­கோளை நிறை­வேற்­றும் நோக்­கில் அரசு சார்ந்த அமைப்­பு­க­ளு­ட­னும் ஒரு­மித்த கருத்­து­டைய ஏனைய சமூக அமைப்­பு­க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்­ற­வி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தொடக்க நிகழ்ச்­சி­யின் முக்­கிய அங்­க­மாக, சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணைத்­த­லை­வர் (வளா­கக் கட்­ட­மைப்­புப் பிரிவு) சுந்­தர் செல்­வத்­தின் நிபு­ணத்­துவ சிறப்­புரை இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் உள்ள அனைத்­துக் கட்­ட­டங்­க­ளை­யும் நூறு விழுக்­காட்­டுப் பசு­மைக் கட்­ட­டங்­க­ளாக மாற்றி, கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தி­ட­மி­ருந்து சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் பசுமை முத்­தி­ரைக்­கான விரு­து­க­ளைப் பெற்­ற­தில் முக்­கி­யப் பங்கு வகித்­த­வர் சுந்­தர் செல்­வம்.

பொது­வான சுற்­றுச்­சூ­ழல், பரு­வ­நிலை மாற்­றங்­கள் மற்­றும் சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் போன்­ற­வற்­றைக் குறிப்­பிட்­டுப் பேசிய அவர், பசு­மைக் கட்­ட­டங்­க­ளின் மதிப்­பைப் பற்­றி­யும் அவை எந்த அள­வுக்கு நம் சுற்­றுச்­சூ­ழல்­மீது ஆக்­க­க­ர­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பது பற்­றி­யும் எடுத்­து­ரைத்­தார்.

அறி­வார்ந்த தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­தல், கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைத்­தல், கட்­ட­டங்­க­ளின் மின்­சக்தி சேமிப்பு ஆற்­றலை மேம்­ப­டுத்­து­தல், மர­பு­சாரா சூரிய மின் உற்­பத்­தி­யைப் பெருக்­கு­தல், புதிய தொழில் நுட்­பத்­து­டன் குளி­ரூட்­டும் சாத­னங்­க­ளின் செயல்­தி­றனை உரு­மாற்­று­தல், கட்­ட­டத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு ஆரோக்­கி­ய­மான சூழலை உரு­வாக்­கு­தல் உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்து அவர் விவ­ரித்­தார்.

பின்­னர் கலந்­து­ரை­யா­டல் மூலம் நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் நீடித்த நிலைத்­தன்­மைக்­காக எவ்­வாறு பங்­க­ளிக்­க­லாம் என்­ப­தற்­கான பய­னுள்ள தக­வல்­க­ளை­யும் அளித்­தார்.

வேறு சில நாடு­க­ளி­லி­ருந்­தும் சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­கள் இந்த மெய்ந்­நி­கர் நிகழ்­வில் கலந்­து­கொண்டு கேள்வி பதில் அங்­கத்­தில் பங்­கெ­டுத்­த­னர்.

வருங்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு நாம் ஒரு பசு­மை­யான சிங்­கப்­பூரை உறு­தி­செய்ய வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் இந்த நிகழ்ச்­சிக்­கான ஏற்­பா­டு­களை ஏற்­பாட்­டுக்­கு­ழுத் தலை­வர் அன்­ப­ழ­கன் வழி­ந­டத்­திச் சென்­றார். திரு கரு­ணா­நிதி நிபு­ணத்­துவ சிறப்­புப் பேச்­சா­ளரை அறி­மு­கப்படுத்தி வைத்தார். திரு தயா­நிதி நன்­றி­யுரை கூறினார். செந்­தில் சம்­பந்­தம் விழா­வின் நெறி­யா­ள­ராக ஒருங்­கி­ணைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!