தமிழவேள் கோ. சா. நினைவுச் சொற்பொழிவு

தமிழவேள் கோ. சா. நினைவுச் சொற்பொழிவு

1 mins read
5c4a1a57-e237-4293-b21a-ce7ec1e47112
தமிழ் முரசின் நிறுவனர், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற பெரும் தலைவர், தமிழவேள் கோ.சாரங்கபாணி. -

தமிழ்­மொழி விழா 2022ஐ முன்­னிட்டு, சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி நினை­வுச் சொற்­பொ­ழி­விற்கு ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறது.

வரும் வெள்­ளிக்­கி­ழமை ஏப்­ரல் 1ஆம் தேதி, பிற்­ப­கல் இரண்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை இந்­நி­கழ்ச்சி மெய்ந்­நி­கர் முறை­யில் இடம்­பெ­றும்.

இதில் 'படைப்­பி­லக்­கி­ய­மும் மொழி­பெ­யர்ப்­பும்' என்ற தலைப்­பில் புகழ்­பெற்ற பேச்­சா­ள­ரான பேரா­சி­ரி­யர் முனை­வர் ஜெயந்­த­ஸ்ரீ பால­கி­ருஷ்­ணன் சிறப்­புரை ஆற்­ற­வி­ருக்­கி­றார்.

'ஸூம்' செய­லி­வழி இடம்­பெ­றும் நிகழ்ச்­சி­யில் அனை­வ­ரும் பங்­கேற்­க­லாம்.

கலந்­து­கொள்­வ­தற்­கான விவ­ரங்­கள்:

சந்­திப்பு எண்: 884 8600 0943

கடவு எண்: STTU

'தமிழை நேசிப்­போம் தமி­ழில் பேசு­வோம்' எனும் தாரக மந்­தி­ரத்­து­டன் வளர்­த­மிழ் இயக்­கம் முன்­னின்று நடத்­தும் வரு­டாந்­தர நிகழ்­வான தமிழ்­மொழி விழா, இந்த ஆண்டு ஏப்­ரல் முதல் தேதி­யில் இருந்து மே முதல் தேதி வரை நடை­பெ­ற­வி­ருக்­கிறது. சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு தமிழ் அமைப்­பு­களும் இதில் பங்­கு­கொள்ள இருக்­கின்­றன.