வெற்றிலை! பச்சை இதயம் போன்ற வடிவத்தில் இருக்கும் வெற்றிலை (படம்) சமயச் சடங்குகளில் பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளது. உணவுக்குப் பின் செரிமான சக்தியைத் தூண்டும் என்பதற்காக இதை பாக்கு, சுண்ணாம்புடன் மெல்லும் பழக்கமும் பலகாலமாக இருந்துவருகிறது. இருப்பினும் இதன் மருத்துவ குணங்களை கருத்தில்கொண்டு கோடைக் காலத்துக்கு ஏற்ற பானமாகச் செய்து பருகினால் மிகுந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தேவையான பொருள்கள்:
வெற்றிலை - 4
குல்கந்து - 4 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1 தேக்கரண்டி
கல்கண்டு - 1 மேசைக்கரண்டி
1/4 கப் தண்ணீர்
செய்முறை:
வெற்றிலை உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் 'மிக்ஸி'யில் இட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் நீரைச் சேர்த்து விழுதாகும் வரை அரைத்து வடிகட்டிப் பருகலாம்.
வெற்றிலையுடன் சேர்க்கப்பட்டுள்ள இதர பொருள்கள் குளிர்ச்சி தரக்கூடியவை. வெற்றிலை செரிமானத்துக்கும் உதவும். நோயெதிர்ப்பு சக்தியும் கொண்டது. உடலுக்கு மிகவும் உகந்தது.

