சிங்கப்பூரில் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'காயல்பட்டினம் நலனபிவிருத்தி சங்கம்' ஆற்றிவரும் சமூகப் பணிகளின் ஓர் அங்கமாக, கடந்த சனிக்கிழமையன்று சிங்கப்பூரிலுள்ள ஜாமியா சூலியா பள்ளிவாசலில் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை நன்கொடையாக வழங்கியது. சங்கத்தினருடன் பள்ளிவாசல் தொண்டூழியர்கள் இணைந்து இத்தொண்டூழியப் பணியில் ஈடுபட்டனர்.
செய்தி, படம்:
காயல்பட்டினம் நலனபிவிருத்தி
சங்கம் (சிங்கப்பூர்)

