இணையவழி பாலியல் தொல்லை: உதவி நாடத் தயக்கம் வேண்டாம்

இணையவழி பாலியல் தொல்லை: உதவி நாடத் தயக்கம் வேண்டாம்

2 mins read

தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும் பாலி­யல் துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­கள் அதி­கரித்து வரு­கின்­றன. இத்­த­கைய தொல்­லைக்கு ஆளா­வோர், செய்­வ­த­றி­யாது தவிக்­க­லாம். இவர்­க­ளுக்கு எவ்­வாறு ஆத­ரவு வழங்­க­லாம் என்­பது குறித்து மக்­கள் செயல் கட்­சி­யின் மகளிர் பிரிவு, கலந்­து­ரை­யா­டல் தொடர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அவற்­றில் கூறப்­பட்ட முக்­கி­யக் குறிப்­பு­கள்:

இணை­யத் துன்­பு­றுத்­த­லில்

சிக்­கி­ய­வ­ருக்கு ஆத­ரவு...

தனக்கு நேர்ந்த இணை­யத் துன்­புறுத்­தல் சம்­ப­வம் குறித்து ஒரு­வர் வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தயங்­க­லாம், வெட்­கப்­ப­ட­லாம். அவ­ருக்கு நடந்­தி­ருப்­பது இணை­யத் துன்­பு­றுத்­தல்­தான் என்­ப­தற்­கான ஆதா­ரங்­க­ளைப் பதி­வு­செய்­து­கொள்­வது முக்­கி­யம்.

சட்ட ஆலோ­சனை, காவல் அதி­காரி­க­ளி­டம் புகார், அவ­ம­திக்­கும் தக­வல் என்று சமூக ஊடக நிர்­வா­கத்­தி­டம் தெரி­விப்பு போன்ற வழி­களில் ஒரு­வர் நட­வ­டிக்கை எடுக்­க­லாம்.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரி­டம் அதிர்ச்சி, துய­ரம் ஏற்­பட்­ட­தற்­கான அறி­கு­றி­கள் தெரிந்­தால், சமூ­கச் சேவை அமைப்­பு­க­ளின் உத­வியை நாட­லாம். பள்ளி ஆலோ­ச­க­ரும் இதற்கு உத­வு­வார்.

காவ­லர்­க­ளி­டம் புகார் அளித்­தல்...

அக்­கம்­பக்­கக் காவல் நிலை­யத்­திற்­குச் செல்ல விரும்­பா­தோர், இணை­யத்­தின் வழி தங்­க­ளுக்கு நேர்ந்த துன்­புறுத்­தல் பற்றி புகார் அளிக்­க­லாம். முடிந்­த­வரை அதி­க­மான விவ­ரங்­க­ளைப் பாதிக்­கப்­பட்­ட­வர் அளிப்­ப­தற்­குத் தயா­ராக இருக்­க­வேண்­டும். புகார் அளிக்­கும்­போது நம்­பிக்­கை­யான நண்­பர் அல்­லது குடும்ப உறுப்­பி­ன­ர் துணை­யா­கச் செல்­ல­லாம். தொலை­பே­சி­வழி தொடர்­பு­கொண்டு பேச இய­லாத நிலை­யில், 71999 என்ற எண்­ணில் குறுந்­த­க­வல் அனுப்­பும் வசதி­யும் உண்டு.

அனு­ம­தி­யின்றி சமூக ஊட­கங்­களில் அந்­த­ரங்­கப் படங்­கள் இருந்­தால்...

ஃபேஸ்புக், யூடி­யூப் போன்ற சமூக ஊட­கத் தளங்­களில் புகார் அளிக்­கும் தெரிவு உள்­ளது. நிலைமை கட்­டுக்­கடங்­கா­மல் போவ­தா­கத் தெரிந்­தால் காவ­லர்­க­ளை­யும் அணு­க­லாம்.

சட்ட நட­வ­டிக்கை...

வழக்­க­றி­ஞர் சேவையை முன்­பின் நாடா­த­வர்­க­ளுக்­காக சிங்­கப்­பூ­ரில் பல சட்ட நிறு­வ­னங்­கள் உள்­ளன. இவற்­றில் 20 நிமிட ஆலோ­சனை பெற முடி­யும்.

செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்