கோபப்படும் குழந்தையைக் கட்டுப்படுத்த சில வழிகள்

கோபப்படும் குழந்தையைக் கட்டுப்படுத்த சில வழிகள்

2 mins read

ஒரு குழந்தை கோபமாக நடந்து கொள்ளும்பொழுது ஒரு பெற்றோர் நீண்ட நேரம் பொறுமை காப்பது கடினமே. எனினும், அதுதான் ஒரே வழி. குழந்தைகள் கோபத்துடன் இருக்கும்போது அவர்களிடம் இருந்து விலகி இருப்பதைவிடவும் அவர்களின் அருகில் இருந்து கோபத்தை நீக்குவது நல்ல தீர்வாக அமையும்.

பெற்றோர் பின்பற்றவேண்டிய ஒருசில குறிப்புகள்:

 கோப­மான குழந்­தை­யைச் சமா­ளிப்­ப­தற்­கான ஒரே வழி பொறு­மை­யாக இருப்­ப­து­தான். இந்தச் சூழலை நாம் நிதான­மா­கக் கையாள வேண்­டும். இச்சூழ­ லில் ஆவே­சப்படு­வ­தும் அவ­ச­ர­மாகச் செயல்­ப­டு­வ­தும் விஷ­யங்­களை மேலும் சிக்­க­லாக்­கும்.

 சிறு­வ­ய­தி­லி­ருந்தே உங்­கள் குழந்­தைக்கு கரு­ணை­யைப் பற்றி கற்­பித்து, கருணை மனப்­பாங்கு உள்­ள­வர்­க­ளாக வளர்க்­க­வும். இந்த அணு­கு­முறை அவர்­க­ளைப் பொறு­மை­யு­ட­னும் மற்­ற­வர்­க­ளைப் புரிந்து செயல்­ப­ட­வும் உத­வும்.

 ஒரு பெற்­றோ­ராக உங்­கள் குழந்­தை­கள் சொல்­வதை நீங்­கள் அதி­கம் காது கொடுத்து கேட்­க­வேண்­டும். அதே­போல் அவர்கள் மனதில் உள்ளதை பேசவும் அனு­ம­திக்கவும்.

 கோபத்­திற்கு பல கார­ணங்­களும் தூண்­டு­தல்­களும் உள்­ளன. உங்­கள் பிள்ளை கோப­மாக இருந்­தால், அவ­ரது கோபத்தை தூண்­டும் விஷ­யங்­க­ளைக் கண்­டு­பிடித்து தீர்வு காண முயற்சி செய்வது முக்­கி­யம்.

 உங்­கள் பிள்ளை தனது கோபத்தை சரி­யான முறை­யில் கையாள வேண்­டு­மென நீங்­கள் விரும்­பி­னால், அவர்­கள் சொல்வதற்கு எதி­ராக நட­ந்து கொள்­ளா­மல் அவர்­க­ளுக்கு உகந்த பதி­ல­ளிப்­ப­தில் அதிக கவ­னம் செலுத்­துங்­கள்.

 உங்­கள் குழந்­தை­யின் பிடிவாதத்திற்கு ஒரு­போ­தும் அடி­ப­ணி­யா­தீர்­கள். அப்­படி விட்டுக் கொடுத்துப் போனால், உங்­கள் குழந்ை­த­கள் எதிர்­கா­லத்­தி­லும் சாமான்­க­ளைத் தூக்கி வீசு­வது, முரட்­டுத்­த­ன­மாக கத்­து­வது போன்ற செயல்­களில் ஈடுபடலாம்.

 உங்­கள் பிள்ளை பொறு­மை­யா­க­வும் அமை­தி­யா­க­வும் இருக்க, பெற்­றோர்­கள் முத­லில் ஒரு முன்­மா­தி­ரி­யாக நடந்­து­கொள்ள வேண்­டும். நீங்­கள் மற்­ற­வர்­க­ளி­டம் அர­வ­ணைப்­பை­யும் மரி­யா­தை­யை­யும் காட்­டி­னால் மட்­டுமே, உங்­கள் குழந்­தை­யும் அவ்­வாறே செய்­யும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

ஆழ்ந்து மூச்சை இழுத்­து­வி­டு­வது, கோப­மாக இருக்­கும்­போது ஒரு குவளை தண்­ணீர் குடிப்­பது, பாட­லைப் பாடு­வது அல்­லது நட­ன­மா­டு­வது போன்ற மனதை தளர்­வாக்­கும் நட­வ­டிக்­கைகளில் ஈடு­ப­ட­லாம். இது­போன்ற அமை­திப்­ப­டுத்தும் உத்­தி­களைக் குழந்­தை­களுக்கும் பெற்­றோர்­ கற்­பிக்க வேண்­டும்.

தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா