திருமணங்கள் வானத்தில் பறந்தபடி, கடல் நீருக்கடியில் என அவ்வப்போது வித்தியாசமான முறையில் நடந்து வருகின்றன. இப்போது, இந்து, கிறிஸ்துவ, இஸ்லாம் திருமண முறைகளைப் பின்பற்றி ஒரு தம்பதியர் புதுமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இஸ்லாம் முறைப்படி நிக்காவும் கிறிஸ்துவ முறைப்படி பரிசுத்த விவாகமும் இந்து பாரம்பரிய முறைப்படி மாங்கல்யமும் கட்டி ஒரு ஜோடியின் திருமணம் நடந்து உள்ளது.
அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் புருஷோத்தமன் என்ற இளைஞருக்கும் புவனேஷ்வரி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்புவதாகப் பெற் றோரிடம் கூறி அனுமதி பெற்ற புருஷோத்தமன், மூன்று மதங்களின் முறைப்படியும் பத்திரிகைகள் அடித்து அனைவருக்கும் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, இம்மாதம் 26ஆம் தேதி இஸ்லாம், கிறிஸ்துவ முறைப்படியும் 27ஆம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை புருஷோத்தமன் கூறும்போது, "எனக்கு முஸ்லிம், கிறிஸ் துவ நண்பர்கள் அதிகம். சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தமிழகத்தில் அனைத்து சமயத்தைச் சேர்ந்ேதாரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தவும் இப்படி ஒரு திருமணத்தை நடத்தினேன்," என்று பெருைமயுடன் கூறுகிறார்.
சின்ன வயதிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் புருஷோத்தமன் நட்புடன் பழகி வந்துள்ளார். எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும் வாழ்க்கையும் இருந்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சி, தமிழகத்தில் எந்த சமயத்திலும் சமயம் சார்ந்த மோதல்கள் வராமல் இருக்க இதுபோன்ற திருமணங்கள் மேன்மேலும் அரணாக இருக்கும் என்று திருமணத்துக்கு வந்த அனைவரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.

