'தானியக்க' கேமராக்களால் ஆன படைப்புகள்

'தானியக்க' கேமராக்களால் ஆன படைப்புகள்

2 mins read
61fa49c1-4456-4351-b20e-c91c9ca27212
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 'யுசிசி' எனும் பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் பயன்படுத்தப்படும் இத்தகைய கேமராக்களில் ஒன்று (நடுவே). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மேடைப் படைப்­பு­களில் இடம்­பெறுவோரை கேம­ராக்­க­ளைக் கொண்டு பல வித­மா­கப் பட­மெடுப்­பது வழக்­க­மாக நிக­ழும் ஒன்று. ஆனால் அதே கேம­ராக்­களை மனி­தர்­கள் நேர­டி­யாக இயக்­கா­மல் இருப்­பதைப் பலர் கேள்­விப்படாமல் இருக்கலாம்.

இத்­த­கைய 'தானி­யக்க' கேம­ராக்­க­ளைப் பொது­வாக மேடை நிகழ்ச்­சி­க­ளின் பின்­ன­ணி­யில் செயல்­படும் ஒரு­வர் இயக்­கு­வார்.

இத்தகைய கேமராக்களை உள்­ளூர் நிறு­வ­ன­மான 'ரோல்ட்­டன் புரோ­டக்­‌ஷன்ஸ்' பயன்­ப­டுத்­துகிறது. கொவிட்-19 சூழ­லால் நிகழ்ச்­சி­களைத் தயா­ரிக்­கும்­போது இந்­நிறு­வனத்­தால் போது­மான பணி­யாளர்­களைக் கள­மி­றக்­க­மு­டி­ய­வில்லை.

இந்த கேம­ராக்­கள் இப்பிரச்­சினை­யைத் தீர்க்­க உதவி­யதா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

'பேன்-டில்ட்-ஸூம்' என்­ற­ழைக்­கப்­படும் 'பிடிஸி' கேம­ராக்­க­ளால் 'ரோல்ட்­டன்' நிறு­வ­னத்­தால் மனித­வளப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்­க­மு­டிந்­தது.

ஐந்து 'சிஆர்-என்500' ரக 'பிடிஸி' கேம­ராக்­களை 'ரோல்ட்­டன்' வாங்­கி­யது. இவை ஒவ்­வொன்­றின் விலை­யும் 7,500 வெள்ளி. 'ரோல்ட்­டன்' சென்ற ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் இவற்றை வாங்­கி­யது.

இந்­நி­று­வ­னம் உள்­ள­ரங்­குப் படைப்­பு­க­ளைத் தயா­ரிக்க இந்த கேம­ராக்­க­ளைப் பயன்­ப­டுத்தி வரு­கிறது. இவை ஓரி­டத்­தி­லி­ருந்து வேறொன்­றுக்கு நக­ர­மாட்டா. ஆனால் இருந்த இடத்­தி­லி­ருந்து சுற்­றி­ய­படி ஒரு படைப்­பில் இடம்­பெ­றும் பல கலை­ஞர்­க­ளைப் பட­மெ­டுக்­க­மு­டி­யும்.

'பிடிஸி' கேம­ராக்­களை இயக்­கு­வ­தற்­கான செயல்­பாட்­டுக் கருவி­யின் விலை சுமார் 2,800 வெள்ளி. படைப்­பு­கள் நடை­பெ­றும் இடத்­தின் ஒரு பகு­தி­யில் இதை வைக்­க­லாம்.

இவ்­வாறு இந்த கேம­ராக்­களை ஒரு­வ­ரால் இயக்­க­மு­டி­யும். இந்த கேம­ராக்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் தன்­னு­டன் பணி­யாற்­றும் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளின் தேவைகளை 'ரோல்ட்­ட­னால்' பூர்த்தி­செய்­ய­மு­டிந்­துள்­ளது. சில நிறு­வனங்­க­ளுக்கு இப்­ப­டிப்­பட்ட 'தானி­யக்க' கேம­ராக்­கள், மனி­தர்­கள் நேர­டி­யாக இயக்­கும் கேம­ராக்­கள் ஆகிய இரண்டு வகை கேம­ராக்­களும் தேவைப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த ஏற்பாட்டால் 'ரோல்ட்டன்' நிறுவனத்தால் பல திட்டங்களை ஒரே நேரத்தில் கையாளமுடியும்.

கேம­ராக்­களை நேர­டி­யாக இயக்­கக்­கூ­டிய பட­மெ­டுக்­கும் நிபு­ணர்­களைக் கொண்டு ஒரு நாளில் தயா­ரா­கும் படைப்­பு­க­ளுக்­குக் குறைந்­தது 6,000 வெள்ளி செல­வா­கும் என்று 'ரோல்ட்­ட­னின்' நிறு­வ­ன­ரான டேவிட் வோங் கூறி­னார்.

எனி­னும், கேம­ராக்­களை இயக்­கும் நிபு­ணர்­க­ளுக்­குப் பதி­லாக இந்த கேம­ராக்­களை மட்­டுமே பயன்­ப­டுத்­து­வது தங்­கள் எண்­ண­மில்லை என்­றும் திரு வோங் குறிப்­பிட்­டார். அனு­ப­வம் வாய்ந்த கேமரா நிபு­ணர்­க­ளின் வேலைக்கு நிகர் வேறு ஏதும் கிடையாது என்­பதை அவர் சுட்­டி­னார்.

'பிடிஸி' கேம­ராக்­களை இயக்­கு­வது ஒரு திறன்.

மின்­னி­லக்க கேம­ராக்­களை இயக்­கக் கற்­றுக்­கொள்­வது போன்­ற­து­தான் இது­வும் என்று திரு வோங் சொன்­னார்.

"பிடிஸி கேம­ராக்­களை இயக்­கக் கூடு­த­லான தொழில்­நுட்­பப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­பது இதற்கு வழி­யல்ல. நாம் செய்­ய­வேண்­டி­யது இந்­தத் துறை­யில் கூடு­த­லான காணொளி இயக்­கு­நர்­களை ஊக்­கு­விப்­பதே," என்று அவர் கூறி­னார்.

இசை தொடர்­பி­லான தக­வல்­கள், தயா­ரிப்பு அனு­ப­வம், தொழில்­நுட்­பத் திறன்­களை ஆகி­ய­வற்­றைக் காணொளி இயக்­கு­நர்­கள் கொண்­டி­ருப்­பர். அவர்­க­ளால் 'பிடிஸி' கேம­ராக்­களை இயக்­கும் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­மு­டி­யும் என்­றும் திரு வோங் குறிப்­பிட்­டார்.

இதர சில தயா­ரிப்பு நிறு­வ­னங்­களும் இத்­த­கைய மாறு­பட்ட முயற்சி­க­ளைக் கையாள்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.