உலகளவில் மனநலப் பிரச்சினைகள்

உலகளவில் மனநலப் பிரச்சினைகள்

1 mins read
b8cc46be-7e04-45ce-a13e-a47eb3f70a64
கொவிட்-19 சூழலால் அதிகமானோர் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஈராண்­டு­க­ளாக உல­கில் பலர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­யி­னர், பாதிக்­கப்­பட்ட பலர் மர­ண­ம­டைந்­த­னர். கொள்­ளை­நோய்ப் பர­வல் உல­கைப் புரட்­டிப்­போட்­டது என்று சொன்­னால் அது மிகை­யா­காது.

அதே வேளை­யில் உல­கெங்­கும் பலர் மன­ந­லப் பிரச்­சி­னை­களுக்­கும் ஆளா­யி­னர். குறிப்­பாக கொவிட்-19 முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் இளை­யர்­களும் அதி­கம் பாதிக்­கப்­பட்டுள்­ள­னர்.

ெகாள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் மன­வு­ளைச்­சல், 'என்­ச­யட்டி' எனப்­படும் மனப்­ப­தற்­றம் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்­த­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் 2020ஆம் ஆண்டு மே மாதம் தெரி­வித்­தி­ருந்­த­தாக 'மெடிக்­கல்­நி­யூஸ்­டுடே' சுகா­தார இணை­யத்­த­ளம் குறிப்­பிட்­டுள்­ளது.

அதற்­குப் பிறகு பல கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அலை­க­ளைப் பல்­வேறு நாடு­கள் எதிர்­நோக்­கி­விட்­டன.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடைமுறைப்படுத்தப்படும் முடக்­க­நி­லை, பாது­காப்பு தூர இடை­வெளி, தனி­மை­யில் இருப்­பது உள்­ளிட்­ட­வற்­றால் மன­ந­லப் பிரச்­சி­னை­களுக்கு ஆளா­கும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக பல மன­நல ஆலோ­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

2019ஆம் ஆண்டு உலக மக்­கள்­தொ­கை­யில் 12.5 விழுக்­காட்­டி­னர் மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளா­யி­னர்.

2020ஆம் ஆண்­டில் இந்த விகி­தம் 25 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக உல­கச் சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­தது.

எனி­னும், நெருக்­க­டி­யான கால­கட்­டத்­தி­லும் மன­ந­ல­னைப் பாது­காக்க வழி­கள் உள்­ளன. இதன்­படி உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வது நல்­லது என்று மனநல ஆலோ­சகர்­கள் சொல்­கின்­ற­னர்.

நம்­ப­க­மான ஒரு­வ­ரு­டன் உணர்­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வது நல்­லது. மன­நல ரீதி­யாக உதவி நாட தயங்­க­வேண்­டாம் என்­றும் நிபுணர்­கள் அறி­வுரை வழங்­கு­கின்­ற­னர்.

இது­போன்ற விவ­கா­ரங்­க­ளுக்கு மருத்­துவ நிபு­ணர்­க­ளின் அறி­வு­ரை­யைக் கேட்­டுக்­கொண்டு செயல்­ப­டு­வது நல்­லது.