தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இமைத் தொய்வு அழகுப் பிரச்சினை மட்டுமல்ல

3 mins read
42c04947-97c7-46a0-93a2-6ce830bd01a2
கண் இமைத் தொய்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன். படம்: இணையம் -

ஆங்­கி­லத்­தில் "Ptosis" எனப்­படும் கண் இமைத் தொய்வு, ஒரு மருத்­து­வக் கோளாறு. கண்­ணின் மேல் இமை தொங்­கிப்­போய் அழ­கிய வடி­வத்தை மாற்­றி­வி­டும் இந்­தச் சிக்­க­லுக்கு மருத்­து­வ­ரீ­தி­யா­கத் தீர்­வு­கா­ணா­மல் அலட்­சி­யப்­ப­டுத்­தி­னால் ஒரு­வ­ரது வாழ்க்­கைத் தரம் வெகு­வாக பாதிக்­கப்­படும் வாய்ப்பு அதி­கம்.

கண் இமை­க­ளின் அசை­வுகளைக் கட்­டுப்­ப­டுத்­தும் தசை வலு­வி­ழந்­தால் இத்­த­கைய நிலை ஏற்­படும். சில­ருக்கு லேசான மாற்­றம் தெரிந்­தா­லும் வேறு சில­ருக்கு கண்­வி­ழியை மறைக்­கு­ம­ளவு இமை தொங்­கிப்­போய்­வி­டு­வ­து உண்டு. இத­னால் பார்வை சிறி­த­ளவோ முழு­து­மா­கவோ மறைக்­கப்­படும்.

யாருக்கு பாதிப்பு?

இந்­தக் குறை­பாடு சிறி­ய­வர்­கள் பெரி­ய­வர்­கள் என யாருக்கு வேண்­டு­மா­னா­லும் வரக்­கூ­டும். இதில் இரண்டு வகை­கள் உள்­ளன.

முத­லா­வது, மர­ப­ணுக் கோளாறு கார­ண­மாக பிறந்த சிசுக்­க­ளுக்­கும் சிறு குழந்­தை­க­ளுக்­கும் கண் இமை தொங்­கு­வ­துண்டு. இந்­தக் குழந்­தை­கள் கண்ணைச் சுருக்கிக்­கொண்டு சரி­யா­கப் பார்க்க முயல்வர். சில பிள்­ளை­கள் கழுத்தை அல்­லது தலையைச் சாய்த்து தெளி­வா­கத் தெரி­கி­றதா என்று பார்ப்­பர்.

இவர்­க­ளுக்கு அரிய வாய்ப்பாக கண் இமைத் தொய்­வைச் சரி­செய்­யும் மருத்­துவ முறை அமை­கிறது.

12 வயது நிறை­வ­டைந்த பிறகே பிள்­ளை­க­ளுக்கு இதைச் செய்ய முடி­யும் என்று 'அல்­லூய்ர் பிளாஸ்­டிக் சர்­ஜரி'யில் அழகு சிகிச்சை நிபு­ண­ரான டாக்­டர் சேமு­வெல் ஹோ கூறி­னார். சிங்­கப்­பூ­ரில் கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஏறக்­கு­றைய 700 பேருக்கு கண் இமைத் தொய்­வைச் சரி­செய்­யும் சிகிச்­சையை இவர் செய்­தி­ருக்­கி­றார்.

"ஒரு­வேளை குழந்­தை­யின் கண்­பார்­வைத் திற­னில் மாற்­றம் ஏற்படுமே­யா­னால் முன்­கூட்­டியே அறுவைச் சிகிச்­சையை செய்­து­கொள்­வது நல்­லது," என்­றார் டாக்டர் ஹோ.

இரண்­டா­வது வகை­யில், முப்­பது முதல் நாற்­பது வய­தி­ன­ருக்கு கண் இமைத் தொய்வு ஏற்­ப­டு­வ­து உண்டு. வயது கூடு­தல், கண்­களில் காயம் ஏற்­ப­டு­தல் அல்­லது சில­வகை கண் சிகிச்­சை­கள் போன்­ற­வற்­றால் கண் இமை­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

"வயதாகும்போது நம் தோல் மெலிவடைவதால் கண் இமைகள் தொங்கிப்போகும். முதியவர்கள் என்றில்லை, என்னிடம் இந்தப் பிரச்சினைக்காக வரும் நோயாளிகளில் 40 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்," என்று டாக்டர் ஹோ கூறினார்.

அடிக்­கடி இரட்டை கண் இமைக்­கான ஒட்­டு­வில்லை அல்­லது பசை­யைப் பயன்­ப­டுத்­து­தல், செயற்கை கண் இமை முடி­களை ஒட்­டிக்­கொள்­ளு­தல், விழி ஒட்­டு­வில்­லை­களை அணி­தல் ஆகி­ய­வற்­றால் இளம் வய­தில் இமைத் தொய்வு ஏற்­படும் வாய்ப்பு அதி­கம் என்­பதை அவர் விளக்­கி­னார். கண்­களை அடிக்­கடி தேய்ப்­ப­தா­லும் இவ்­வாறு கண் இமைத் தொய்வு நேரக்­கூ­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

எப்­ப­டிக் கண்­டு­பி­டிப்­பது?

புகைப்­ப­டங்­களில் நீங்­கள் தூங்­கு­வ­து­போல் காணப்­பட்­டாலோ புரு­வங்­களும் கண் இமை­களும் சமச்­சீ­ராக இல்­லா­விட்­டாலோ கண் இமைத் தொய்வு உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருப்­பதை நீங்­கள் அறி­ய­லாம்.

"தலை­வலி, இமை­களில் அழுத்­தம், சோர்வு போன்­ற­வை­யும் ஏற்­படும். பல­ருக்கு இது ஒரு மருத்­து­வச் சிக்­கல் என்று தெரி­வ­தில்லை.

"முது­மை­ய­டை­த­லின் ஓர் அங்­கம் என்றோ பிறந்­த­தில் இருந்தே இருப்­ப­து­தானே என்றோ அலட்­சி­யப்­ப­டுத்­து­கின்­ற­னர்," என்­றார் டாக்­டர் ஹோ.

கண் இமைத் தொய்வை தொடக்­கத்­தி­லேயே சரி­செய்­யா­விட்­டால் பின்­னர் இது ஒற்­றைத் தலை­வ­லிக்கு இட்­டுச்­செல்­லக்­கூ­டும்.

நெற்­றி­யில் சுருக்­கங்­களும் ஏற்­படும் சாத்­தி­யங்­களும் அதி­கம் என்று கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் நாள­டை­வில் பார்­வைக் குறை­பாடு, சோர்வு, கண் எரிச்­சல் போன்­ற­வை­யால் துன்­பப்­பட நேரும்.

நற்­செய்தி:

இந்­தக் குறை­பாடு உள்­ள­வர்­கள் கலங்­கத் தேவை­யில்லை. நிபு­ணத்­துவ மருத்­து­வர் மூலம் கண் இமைத் தொய்வை நாற்­பத்­தைந்தே நிமி­டங்­களில் சரி­செய்ய முடி­யும்.

"அண்­டர்த்ரூ" எனும் நவீன தொழில்­நுட்ப முறை­யில் கண் இமைத் தொய்­வுக்கு தீர்வு கிடைக்­கிறது. இந்த முறை­யில் நோயாளி விரை­வாக குண­ம­டை­வ­து­டன் தேவைப்­பட்­டால் அடுத்­த­டுத்து சில முறை திருத்­தங்­களும் செய்­ய­லாம்.

சிகிச்சை எடுத்­தால் மீண்­டும் கண் இமைத் தொய்வு ஏற்­படும் வாய்ப்­பும் மிகக் குறைவு என்­றார் டாக்­டர் ஹோ.