‘டெஸ்டோஸ்ட்ரோன்’ குறைபாட்டுக்கு தீர்வு

செய­லாற்­றல் குறைவு, எதி­லும் தீவிர ஈடு­பாடு இன்மை, சோர்வு இவை­யெல்­லாம் ஆண்­க­ளின் உட­லில் 'டெஸ்­டோஸ்ட்­ரோன்' எனும் ஹார்­மோன் குறை­வாக சுரப்­ப­தைக் காட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 26 விழுக்­காட்டு ஆண்­கள் 'டெஸ்­டோஸ்ட்­ரோன்' பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

அண்­மை­யில் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர், ஓராண்­டுக்கு முன்பு இருந்­த­தை­வி­டத் தாம் அதி­க­மான மாறு­பாட்டை உணர்­வ­தா­கக் கூறி­னார். எதி­லும் கவ­னம் செலுத்­தவே முடி­ய­வில்லை என்­றார் அவர். 40 வய­தா­கும் அந்த ஆட­வர், சிகிச்­சைக்­குப் பிறகு தன்னை மீட்­டெ­டுத்­த­து­போல் உணர்­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இந்த 'டெஸ்­டோஸ்ட்­ரோன்' குறை­பாட்­டு­டன் மன­அ­ழுத்­தம் அதி­க­முள்ள வேலை­களில் ஈடுபடு­வோ­ருக்கு மாலை நேரத்­தி­லேயே தூக்­கம் கண்­ணைச் சுழற்­றும். பிரச்­சினை என்­ன­வென்­றால் இரவு நன்­றாக உறங்­கி­னா­லும் புத்­து­ணர்ச்சி கிடைக்­காது. உடன் வேலை­செய்­வோ­ருக்கு எளி­தா­கச் செல்­லும் வாழ்க்கை இவர்­க­ளுக்கு மிகுந்த உளைச்­ச­லைத் தரு­வ­தா­கத் தோன்­றும்," என்­கி­றார் ஆண்­கள் நல மருத்­து­வ­ரான டாக்­டர் பெஞ்­ச­மின் லோ.

சில­ருக்­குப் பாலி­யல் உற­வி­லும் சிக்­கல் ஏற்­ப­ட­லாம்; மனச்­சோர்வு, எளி­தில் உடல் எடை கூடு­தல் போன்­ற­வற்­றால் அவ­திப்­ப­டு­வர் என்­றார் அவர்.

'டெஸ்டோஸ்ட்ரோன்' ஹார்மோன் ஆண்கள், பெண்கள் இருதரப்பினரின் உடல்களிலும் சுரக்கும் என்றாலும் ஆண் உடலில் இது அதிகம் காணப்படும். ஆண்மை, ஆரோக்கியமான எலும்புகள், வலுவான தசைகளைப் பராமரித்தல், செயலாற்றல், இதய ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஆண்களுக்கு இது மிக முக்கியம்.

20 முதல் 30 வயதில் ஆண்களின் உடலில் மிக அதிகமாக சுரக்கும் இந்த ஹார்மோன் வயதாக ஆகக் குறையும்.

உடல் உழைப்பு குறைவான வாழ்க்கைமுறை, உடல் பருமன், குறைவான உறக்கம், சிலவகை மருந்துகள், நீண்டகால மனஅழுத்தம் ஆகியவற்றாலும் 'டெஸ்டோஸ்ட்ரோன்' அளவு குறையக்கூடும். இதனால் நீரிழிவு, இதய நோய், மறதி நோய், எலும்பு அடர்த்திக் குறைபாடு போன்றவை ஏற்படும் என்கிறார் டாக்டர் லோ.

முறையான உடற்பயிற்சி இதற்கு நல்ல தீர்வாக அமையும். எடை தூக்கும் பயிற்சிகளும் உதவக்கூடும்.

சிங்கப்பூரில் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அன்றாடம் உட்கொள்ளும் மாத்திரைகள், சில மாதங்களுக்கு ஒருமுறை போடப்படும் ஊசிகள் என பலவகை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தோலில் தடவக்கூடிய களிம்புகளும் கிடைக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!