சாமைப் பொங்கலே சத்தான காலை உணவு

சாமைப் பொங்கலே சத்தான காலை உணவு

1 mins read

சிறு தானி­யங்­கள் உடல்­ந­லத்­துக்கு மிக­வும் உகந்­தவை. வித­வி­த­மாக சிறு தானி­யங்­க­ளைச் சமைத்­துத் தந்­தால் சிறு­வர்­களும் விரும்பி உண்­பர்.

தேவை­யான பொருள்­கள்:

நெய் - தேவைக்கு ஏற்ப, நறுக்கிய இஞ்சி - ஒரு மேசைக் கரண்டி, சீர­கம் - ஒரு தேக்­க­ரண்டி, பெருங்­கா­யத்தூள் , பாசிப்பருப்பு - 100 கிராம், சாமை அரிசி - 250 கிராம், முந்­திரி 10, உப்பு - தேவை­யான அளவு.

செய்­முறை:

பாசிப்­ப­ருப்பு, சாமை அரி­சி­யைக் களைந்து, இஞ்­சி­ சேர்த்து, ஒரு பங்கு சாமைக்கு நான்கு பங்கு தண்­ணீர் விட்­டு வேக­வைக்­க­வும்.

நெய்யில் மிளகு, சீர­கம், முந்­தி­ரியை வறுத்­து, பெருங்­கா­யத்­தூள், வேகவைத்த பொருள்களை சேர்த்துக் கலக்கவும்.

சுவையான சாமைப் பொங்கல் தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து உண்ணலாம்.