கலைத்துறைக்கு ஏற்றம் தரக்கூடியது

கலைத்துறைக்கு ஏற்றம் தரக்கூடியது

2 mins read
717dc3f7-f430-4400-8b13-42764486ed91
-

'என்­எ­ஃப்டி' முறை பயன்­ப­டுத்­தப்­படு­வ­தில் இங்­குள்ள கலைக்­கூ­டங்­கள் முக்­கிய பங்­காற்­று­கின்­றன.

கலை­ஞர்­க­ளின் படைப்­பு­களை விற்­ப­தற்கு இம்­முறை பயன்­ப­டுத்­தப்­பட்­டால், அது வாடிக்­கை­யா­ளர்­களுக்கு மட்­டு­மின்றி கலைத்­துறைக்­கும் ஏற்­றம் என்று 'ஆர்ஸ்ட் மீட் ஹார்ட்ஸ்' கலைக்­கூ­டத்­தின் இணை நிறு­வ­னர் தர்ம ராஜ் நாகலிங்­கம் (படம்) கூறி­னார்.

'என்­எ­ஃப்டி' உரிய முறை­யில் கலைப்­ப­டைப்­பு­க­ளு­டன் சேர்க்­கப்­படும்­போது அந்­தப் படைப்­பு­க­ளின் மதிப்­பும் உய­ரும் என்­றார் அவர்.

"ஒரு சிலர் தங்­க­ளின் படைப்பு­களைச் சந்­தை­யில் அதிக விலை­யில் விற்­று­விட்டு, அவற்­றையே மீண்­டும் வாங்­கிக்­கொள்­கின்­ற­னர். பணம் ஏதும் கைமா­ற­வில்லை. ஆனால், அதிக விலைக்­குப் படைப்பு விற்­கப்­பட்­டது என்று அறிந்­தி­டும் வாடிக்­கை­யா­ளர்­கள், அதே படைப்பை வாங்க முற்­பட்டு பின்­னர் லாபத்­திற்கு விற்க ஆசைப்­படு­வர்.

"இத்­த­கைய மோச­டி­கள் 'என்எஃப்டி' தளங்­களில் நிக­ழ­லாம்," என்று எண்­ணெய், எரி­பொ­ருள் நிறு­வ­னம் ஒன்­றில் வட்­டார நிர்­வாகி­யா­க­வும் பணி­யாற்­றும் திரு தர்­ம­ராஜ் குறிப்­பிட்­டார்.

மிகப் பிர­ப­ல­மான படைப்­பு­க­ளின் நகல்­க­ளைத் தயா­ரித்து அவற்­றின் மூலம் சிலர் லாபம் ஈட்­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், முறை­யான புலோக்­செய்ன் பதி­வு­க­ளைத் தமது கலைக்­கூ­டம் செய்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"பதிவு செய்­யப்­பட்­ட­தற்­கான சான்­றி­தழ்­க­ளை­யும் வழங்­கு­கி­றோம். வாடிக்­கை­யா­ளர்­கள் வாங்­கும்­போது சான்­றி­தழ் பெற்ற கலைப்­ப­டைப்பு­களையே தெரி­வு­செய்து அவை உண்­மை­யா­னவை என்­பதை உறுதி­செய்­ய­லாம்," என்று அவர் கூறி­னார்.

தங்­க­ளின் படைப்­பு­க­ளுக்­குச் சான்­றி­தழ் அளிக்க விரும்­பும் கலை­ஞர்­கள், அந்­தந்­தக் கலைக்­கூ­டங்­களுக்கு அனு­மதி வழங்­க­லாம் என்று அவர் கூறி­னார். படைப்­பு­டன் அது உண்­மை­யா­னது என்று மெய்ப்­பிக்­கும் 'என்­எ­ஃப்டி' தகு­தி­யை­யும் சேர்த்து வாங்க முடி­யும் என்று திரு தர்ம ராஜ் தெரி­வித்­தார்.

வாங்­கிய படைப்பை 'என்­எ­ஃப்டி' வழி விற்­ப­வர், அதன் மூலம் லாபம் ஈட்­டி­னால் ஒரு­ப­குதி ஓவி­ய­ரைச் சென்று சேரும் எனக் குறிப்­பிட்­டார்.

'என்­எ­ஃப்டி' தொடர்­பில் தர­நிலை­கள் தொடர்ந்து உயர்த்­தப்­பட்­டால் மக்­கள் விழிப்­பு­ணர்வு பெறு­வர் என்­றும் தரக்­கு­றை­வான படைப்பு­களை வாங்­கு­வ­தற்­குப் பதி­லாக கலை­ஞர்­க­ளின் உண்­மைப் படைப்­பு­களை வாங்க முற்­ப­டு­வர் என்­றும் குறிப்­பிட்­டார்.