கலைப்படைப்புகள் அதிகமானோரைச் சென்றடையச் செய்வது

என்­எ­ஃப்டி மூல­மாக ஓவி­யர்­க­ளின் படைப்­பு­கள் மேலும் அதி­க­மா­னோ­ரைச் சென்­ற­டை­யும். ஓவி­யக்­க­லை­யின் மதிப்பு மேன்­மே­லும் உய­ரும் என அண்­மை­யில் தமது படைப்­பு­களை என்­ஃ­எப்டி வடி­வில் விற்­கத் தொடங்­கிய முழு­நேர ஓவி­யர் பி ஞானா­திக்­கம் தெரி­வித்­தார்.

அவ­ரது கலைப்­ப­டைப்­பு­க­ளைத் தற்­போது 'ஆர்ஸ்ட் மீட் ஹார்ட்ஸ்' கலைக்­கூ­டம் என்­எ­ஃப்டி முறைக்கு மாற்றி வரு­கிறது.

"உதா­ர­ணத்­திற்கு, 10,000 வெள்ளி மதிப்­புள்ள எனது கலைப்­படைப்பு ஒன்றை வாங்­கு­வ­தில் சிர­மம் இருக்­க­லாம். ஆனால் என்­எ­ஃப்டி மூல­மாக பத்து பேர் தலா ஆயி­ரம் வெள்­ளிக்கு அதே படைப்பை வாங்கி, பின்­னர் அதனை அதிக விலைக்கு விற்­க­லாம்," என்று அவர் விளக்­கி­னார்.

தமது கலைப்­ப­டைப்­பு­களை மேலும் அதி­க­மா­னோ­ரி­டம் சென்று சேர்ப்­ப­தற்கு 'என்­எ­ஃப்டி' ஒரு சிறந்த தள­மாக இருப்­ப­தா­கக் கூறி­னார். அனைத்­து­லக அள­வில் தமது படைப்­பு­க­ளுக்­கான தேவையை 'என்­எ­ஃப்டி' முறை அதி­க­ரிக்­கும் என்­றும் நம்­பு­கி­றார்.

இவ­ரது ஓவி­யங்­களை விரும்பி வாங்­கி­ய­வர்­களில் முன்­னாள் அதி­பர் எஸ் ஆர் நாத­னும் ஒரு­வர்.

இஸ்­தா­னா­வி­லும் தேசிய கலைக்­கூ­டத்­தி­லும் இவ­ரது கலைப்­ப­டைப்பு­கள் தற்­போது இடம்­பெற்­றுள்­ளன.

வண்ண ஓவி­யங்­க­ளைத் தீட்டு­வது­டன் தூக்கி எறி­யப்­பட்ட இயந்­தி­ரப் பாகங்­க­ளைக்­கொண்ட சிற்­பங்­க­ளை­யும் இவர் தயா­ரித்து வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!