பழம்பெரும் ஓவி­யங்­களுக்கு புது மதிப்பை அளிப்பது

பழம்பெரும் ஓவி­யங்­களுக்கு புது மதிப்பை அளிப்பது

1 mins read
939dd15b-a3ad-4b63-95e1-2c55eac898cb
ஓவியர் ரவி வர்மாவின் 'ரிக்லாய்னிங் நாயர் லேடி' படைப்பு. -

மறைந்த புகழ்­பெற்ற ஓவி­யர்­க­ளின் படைப்­பு­க­ளின் மதிப்­பும் 'என்­எ­ஃப்டி' பயன்பாடு மூலம் உயர்­கிறது.

இந்­தி­யக் கலை உல­கில் புகழ்­பெற்ற பழம்­பெ­ரும் ஓவி­யர் ராஜா ரவி வர்­மா­வின் படைப்­பு­கள், 'என்எஃப்டி' பொருள்­க­ளாக உருப்­பெற்­றன.

அவை கடந்த பிப்­ர­வ­ரி­யில் அனைத்­து­லக வாடிக்­கை­யா­ளர்­கள் பங்­கேற்ற ஏலம் ஒன்­றில் விற்­கப்­பட்­டன.

விற்­ப­னைக்கு விடப்­பட்ட எட்டு படங்­களில் ஐந்து, கிட்­டத்­தட்ட 2,000 வெள்­ளிக்கு விற்­கப்­பட்­டுள்­ளன.

'தி கொக்­கேட்', 'ரிக்­லாய்­னிங் நாயர் லேடி' உள்­ளிட்ட ஓவி­யங்­கள் உண்­மை­யா­னவை என்று கூறும் சான்­றி­தழை ராஜா ரவி வர்மா அற­நி­று­வ­னம் வழங்­கி­யது.

இந்த ஏலத்­தில் கலந்­து­கொண்­டோ­ரில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் என்று ஏலத்­திற்கு ஏற்­பாடு செய்த கலைக்­கூ­டம் தெரி­வித்­தது.

ரவி வர்மா ஓவி­யங்­கள், இந்­தி­யா­வுக்கு வெளி­யில் விற்­கப்­ப­டு­வ­தற்கு அனு­மதி இல்லை.

இத­னால், அவற்றை வாங்க இய­லாத ஓவிய சேக­ரிப்­பா­ளர்­களுக்கு, இந்த 'என்­எ­ஃப்டி' வாய்ப்­பளிப்­ப­தாக ஏலத்­திற்கு ஏற்­பாடு செய்த 'ஆர்­டிஸ்­டிக்' (Rtistiq) கலைக்­கூ­டத்­தின் இணை நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான ஜோதி கிருஷ்­ணன் மேனன், 43, தெரி­வித்­தார்.