மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஓடியே நிதி திரட்டும் ‘தாறுமாறு ரன்னர்ஸ்’

ஏறக்­கு­றைய இரு­பது ஆண்­டு­களுக்­கு­முன் தமது பட்­டப் படிப்­பிற்­காக நிதி­யு­தவி பெற்ற திரு செல்­வ­காந்­தன் முத்­து­ரா­மன், 44, இப்­போது திடல்­தட விளை­யாட்­டில் தம்­மைப்­போல உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்காக நிதி திரட்­டு­கி­றார்.

‘மணிக்கு ஒரு மைல்’ என்ற கணக்­கில் 26 மணி நேரத்­தில் 42 கிலோ­மீட்­டர் தொலைவு ஓடி, சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளைக்காக (எஸ்­ஐ­இடி) நிதி திரட்­டும் ‘தாறு­மாறு ரன்­னர்ஸ்’ ஓட்­டக் குழு­வி­ன­ரில் திரு செல்­வா­வும் ஒரு­வர். 2017ல் தொடங்­கப்­பட்ட இக்­குழு, ஆண்­டு­தோ­றும் வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்காக நிதி திரட்­டும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­கிறது. வரும் 30ஆம் தேதி நள்­ளி­ரவு நிறை­வ­டை­யும் ஓட்­டத்­தின் மூல­ம் குறைந்­தது $30,000 திரட்டு­வது கு­ழு­வின் நோக்­கம்.

அப்போது தம் தந்­தை­யால் தம்மை முழு­மை­யாக ஆத­ரிக்க இய­லாத நிலை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தம்­மால் நிம்­ம­தி­யா­க­வும் முழுக் கவ­னத்­து­ட­னும் படிக்க முடிந்­த­தற்கு சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளை­யின் உதவியே கார­ணம் என்றும் இப்­போது அதற்­குக் கைம்­மாறு செய்ய முடிவது நெகிழ்ச்சி தருகிறது என்றும் திரு செல்வா கூறினார்.

‘தாறு­மாறு ரன்­னர்ஸ்’ குழு­வின் நிதித்­தி­ரட்­டுக்­குப் பங்­க­ளிப்­ப­து­டன் குழு­வில் சேர்ந்து ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கொண்­டா­டும்­படி அதன் நிறு­வ­ன­ரான வழக்­கறி­ஞர் ரமேஷ் செல்­வ­ராஜ், 43, கேட்­டுக்­கொண்டார். “இது எல்­லோ­ரை­யும் அர­வ­ணைக்­கும் குழு. ஓட்­டத்­தில் ஈடு­பட ஆசைப்­படும் அனைவரையும் குடும்பமாக வர­வேற்­கி­றோம்,” என்­றார் அவர்.

செய்தி: கி. ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!