பாடும் பறவைகளால் வாழ்வில் சிறகடிக்கும் கெபுன் பாரு ஆர்வலர்கள்

ஆ. விஷ்ணு வர்­தினி

 

சிங்­கப்­பூ­ரில் ஆயி­ரம் பற­வை­க­ளைச் சேர்த்து ஒரே இடத்­தில் பார்க்க முடி­யும் என்­றால் அது கெபுன் பாரு­வில் மட்­டும்­தான். கெபுன் பாருவில் உள்ள சிங்­கப்­பூ­ரின் ஆகப்பெரிய, பழமை­யா­ன பற­வை­க் காட்­சி­ய­க­மா­னது பற­வை­க­ளுக்கு மட்­டு­மின்றி அங்கு வளர்ந்து விளை­யா­டிய சமூ­கத்­தி­ன­ருக்­கும் சர­ணா­ல­ய­மா­கத் திகழ்­கிறது.

வான­வில்­லின் ஏழு வண்­ணங்­க­ளி­லும் பாடும் பற­வை­களை உய­ர­மான மரச்­சட்­டங்­க­ளிலோ, ஒதுக்­கப்­பட்ட நிழ­லி­டங்­க­ளிலோ நாம் கெபுன் பாரு பற­வைக் காட்­சி­ய­கத்­தில் பார்த்து அவற்­றின் இசை­யைக் கேட்டு இன்புறலாம்.

திறந்தவெளி­யில் அமைந்­துள்ள இந்த மரச்­சட்­டங்­களில் காலை 7 மணி­யி­லி­ருந்தே பற­வை­களை ஏற்­றத் தொடங்­கி­வி­டு­வர் ஆர்­வ­லர்­கள்.

கூண்­டு­களில் இருந்­த­படி பாடி மகி­ழும் பற­வை­க­ளைப் போலவே, ஒன்­று­கூ­டும் அவற்­றின் உரி­மை­யா­ளர்­களும் நிழ­லில் அமர்ந்து வாழ்க்­கைக் கதை­க­ளைப் பேசி மகிழ்­கின்­ற­னர்.

இயற்­கை­யில் பற­வை­கள் திளைக்­க­வேண்­டும் என்­ப­தற்­கா­கப் பறவை ஆர்­வ­லர்­கள் தங்­க­ளது பற­வை­க­ளைக் கொடிக் கம்­பங்­களில் ஏற்­று­வர். மரத்­தின் உய­ரமோ வெயிலோ அதி­கம் தேவைப்­ப­டாத மற்­ற பற­வை­களை மாட்­டு­வ­தற்­கும் தனி இடங்­கள் உள்­ளன.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன்­னர் மாதந்­தோ­றும் பற­வைப் பாட்­டுப் போட்­டி­கள் நடை­பெ­றும். அதற்­காக பல மாதங்­க­ளுக்கு முன்­னரே தங்­க­ளது பற­வை­கள் பயிற்சி செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை பறவை வளர்ப்­ப­வர்­கள் மேற்­கொள்­வர்.

கெபுன் பாரு பறவை

ஆர்­வ­லர்­கள்

ஜாலான் காயூ­வில் பிறந்து வளர்ந்த திரு உமா காந்­த­னுக்கு சிறு வய­தி­லேயே பற­வை­க­ளின் மீது அலாதி பிரி­யம் ஏற்­பட்­டது. கெபுன் பாரு பற­வை­க் காட்­சி­ய­கம் அவ­ருக்கு வாழ்­நாள் நட்­பு­க­ளை­யும் உற­வு­க­ளை­யும் அளித்­தது. தமது வாழ்க்­கையை இந்தப் பொழுது­போக்கு மாற்­றி­ய­மைத்­துள்­ள­தாக அவர் கூறி­னார்

"கெபுன் பாருவில் கூடும் பறவை ஆர்­வ­லர்­கள் ஒரு குடும்­பத்­தார் போல வயது, இனம், மொழி அனைத்­தை­யும் கடந்து நட்­போடு பழ­கு­வர். படிப்­பில் ஈடு­பா­டின்­றித் திரிந்த எனக்கு வாழ்­வில் பிடி­மா­னத்தை இந்­தப் பற­வை­கள் ஏற்­ப­டுத்­தின. பறவை வளர்த்­தல் தீய பழக்­கங்­களை விலக்கி, மனி­தர்­க­ளுக்கு ஒழுக்­கத்­தை­யும் பொறுப்­பு­ணர்­வை­யும் அளிக்­க­வல்­லது என்பதைப் புரிந்துகொண்டேன்," என்­றார் தொழில்­மு­னை­வ­ரான 41 வயது திரு உமா காந்­தன்.

பற­வை­க­ளின்­மேல் உள்ள அளவு­க­டந்த அன்­பி­னால் தங்­கள் வாழ்­வின் பெரும்­ப­கு­தி­யைப் பற­வை­க­ளுக்­கா­கச் செல­வி­டு­கின்­ற­னர் கெபுன் பாரு பறவை ஆர்­வ­லர்­க­ளான திரு உமா காந்­த­னும், திரு சு. கிஷோர் கும­ர­னும். பற­வை­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்கு உகந்த இல்­லம் வாங்­கு­வ­தி­லி­ருந்து, இப்­பொ­ழு­து­போக்கை ஆத­ரிக்­கும் மற்­ற­வர்­க­ளு­டன் நட்­புப் பாராட்­டு­வது வரை, பற­வை­க­ளுக்கே முன்­னு­ரிமை தந்­துள்­ள­னர் இரு­வ­ரும்.

விமா­னி­யா­கப் பணி­யாற்­றிய திரு உமா காந்­த­னும், கப்­பல் மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய திரு கிஷோ­ரும், தங்­க­ளது மனஉளைச்­சல் மிகுந்த பணி­களில் தின­மும் பற­வை­க­ளைப் பரா­ம­ரிக்­கச் சிர­மப்­பட்­ட­னர். இத­னால், பணி­க­ளைக் கைவிட்டு, பற­வை­க­ளுக்­கென தங்­க­ளது வாழ்க்­கை­முறையை அமைத்­துக்­கொண்­ட­னர். வாழ்க்­கை­யில் சுதந்­தி­ரம் அளிக்­க­வல்ல வர்த்­த­கத்தை அவர்­கள் தேர்ந்­தெ­டுத்­த­னர்.

"அப்­பா­வின் தாக்­கத்­தால் எனக்­குப் பற­வை­கள்­மீ­தும், பிரா­ணி­க­ளின்­மீ­தும் அதிக ஈர்ப்பு ஏற்­பட்­டது. இப்­பொ­ழு­து­போக்கு, முத­லீ­டு­கள் அதி­கம் தேவைப்­படும் ஒன்­றா­கும். எனது நேரத்­தை­யும் ஆர்­வத்­தை­யும் முத­லீ­டு­க­ளா­கக்­கொண்டு இன்று வளர்ப்­புப்­பி­ராணி வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளேன்," என்­றார் தொழில்­மு­னை­வ­ரான 30 வயது திரு கிஷோர் கும­ரன். வரு­வாயைக் காட்டிலும் பற­வை­க­ளைப் பேணு­வதே முக்­கி­ய­ம் என்றார் அவர்.

திரு கிஷோ­ரின் தந்தை, மறைந்த திரு சுந்­த­ர­மூர்த்தி, கெபுன் பாரு ஆர்­வ­லர்­களில் ஒரு முன்­னோடி. பற­வைப் பாட்­டுப் போட்­டி­களில் அவ­ரது குரு­வி­கள் பரிசு வென்று சிங்­கப்­பூர் பறவை ஆர்­வ­லர்­க­ளி­டம் அவ­ரைப் பிர­ப­ல­மாக்­கின.

பத்து வய­தாக இருந்­த­போது திரு கிஷோரை இப்­பொ­ழு­து­போக்­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் திரு சுந்­த­ர­மூர்த்தி. அவ­ரது தம்பி திரு பார்த்­தி­ப­னும், ஒரு பறவை ஆர்­வ­லர்.

"நாங்­கள் சிறு­வர்­க­ளாக இருந்­த­போது பெற்­றோ­ரின் திட்­டு­க­ளை­யும் மீறி குரு­வி­கள் வாங்­க­வும், குரு­வி­க­ளைப் பரா­ம­ரிக்­க­வும் சேமிப்­பைச் செல­வ­ழிப்­போம்.

தற்­போ­தைய தலை­மு­றை­யி­னர் கணி­னி­யும் கையு­மாக உள்­ள­னர். இயற்­கை­யை­யும் நேரடி சந்­திப்­பு­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அவர்­கள் மறந்­து­விட்­டது வேதனை அளிக்­கிறது," என்­றார் 57 வயது திரு பார்த்­தி­பன் திண்­ணப்­பன்.

ஜப்­பா­னிய ஆட்­சிக்­கா­லத்­துக்­குப் பின்­னர் சிங்­கப்­பூ­ரில் பற­வை­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தும் பாடும் பற­வை­க­ளைப் போட்­டிக்­காக வளர்ப்­ப­தும் பிர­பல பொழு­து­போக்­கா­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"அக்­கா­லத்­தில் பற­வை­க­ளுக்கு மரத்­தின்­மேல் இருப்­பது போன்ற உணர்வை அளிக்க வேண்டி, கயிறு­கொண்டு பற­வைக் கூண்­டு­களை மரத்­தின் மேல் ஏற்­றி­னர். பிறகு 1980களில், இவ்­வி­டத்­தில் கொடி­யேற்­றக் கம்­பங்­க­ளைக் கட்டி அவற்­றில் தங்­க­ளது கூண்­டு­களை ஏற்­றி­னர். இது ஒரு சுற்­று­லாத் தலம் மட்­டு­மல்ல, இது சிங்­கப்­பூ­ரின் மர­பு­டை­மைச் சொத்து," என்­றார் கெபுன் பாரு பற­வைக் காட்­சி­ய­கத்­தின் துணைத் தலை­வ­ராக இருந்த 77 வயது ரோபின் சுவா.

சிங்­கப்­பூ­ரின் செழிப்­பு­மிகு வர­லாற்­றில் பறவை வளர்த்­தல் அரி­ய­தொரு பொக்­கி­ஷ­மாக விளங்­கு­கிறது. 2018ஆம் ஆண்­டில் பாடும் பற­வை­க­ளைப் பரா­ம­ரிக்­கும் பழக்­கம், தேசிய மர­பு­டைமை கழ­கத்­தால் பண்­பாட்டு மர­பு­டை­மை­யாக அறி­விக்­கப்­பட்­டது.

எனி­னும், இப்­பொ­ழு­து­போக்­கின் பொறுப்­பு­க­ளை­யும் நவீன வாழ்க்­கை­யின் நேர­மின்­மையையும் கருதி பல இளை­யர்­கள் இதில் பெரி­த­ள­வில் ஆர்­வம் காட்­டாத நிலை நில­வு­கிறது.

ஆர்­வம் இருந்­தா­லும், பெரும்­பா­லா­னோர் இப்­பொ­ழு­துபோக்­கில் நீண்ட நாள் நீடித்து இருப்­ப­தும் அரி­தா­கிவிட்­ட­தாக ஆர்­வ­லர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!