தமிழும் கலையும் - பாரம்பரிய நடனங்களின் கொண்டாட்டம்

தமிழும் கலையும் - பாரம்பரிய நடனங்களின் கொண்டாட்டம்

1 mins read
920a35cd-ad8e-467f-990a-a88a52f5b52c
படம்: மகூலம் கலைக்கூடம் -

ஆ. விஷ்ணு வர்­தினி

'சின்­னஞ்­சிறு கிளியே கண்­ணம்மா', 'தெள்ளு தமிழ்' போன்ற பாரதியார், பாரதி­தா­சன் தமிழ்க் கவி­தை­களை நட­ன­மா­கப் படைத்­தனர் 'மகூ­லம்' கலைக்­கூ­டத்­தின் மாணவ நட­ன­ம­ணி­கள். கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அரங்­கே­றிய 'தமி­ழும் கலை­யும்' நிகழ்ச்­சி­யில் இந்த ஒப்­பற்ற கவி­ஞர்­க­ளின் கவி­தை­க­ளுக்கு ஒயி­லாட்­டம், குற­வஞ்சி, பர­த­நாட்­டி­யம் ஆகிய பாரம்­ப­ரிய நட­னங்­களை அவர்­கள் படைத்­த­னர். 10 முதல் 20 வய­திற்­குட்­பட்ட மாண­வர்­கள் ஏறக்­குறைய ஒன்­றரை மணி நேரம் ஆறு நட­னங்­க­ளைப் படைத்­த­னர்.

புகழ்­பெற்ற கவி­தை­க­ளுக்­கும் திரைப்­பட பாடல்­க­ளுக்­கும் நட­னம் ஆடி­ய­தோடு, கவி­தை­க­ளின் பொரு­ளை­யும் நட­ன­ம­ணி­கள் விளக்­கி­னர்.

நிகழ்ச்­சி­யின் முத்­தாய்ப்­பாக அமைந்­தது நாட்­டுப்­புறக் கலை­க­ளைக் கொண்­டா­டிய திருக்­குற்­றா­லக்­கு­ற­வஞ்­சி­யும் ஒயி­லாட்­ட­மும். திருக்­குறளை பர­த­நாட்­டி­ய­மா­கப் படைக்­க­வும் நட­ன­ம­ணி­கள் முயன்­ற­னர்.

"நாட்­டுப்­புறக் கலை­க­ளைத் தமிழ் மக்­களும் பிற இனத்­த­வ­ரும் போற்­றிப் பாது­காக்க வேண்­டும் என்­பது எங்­க­ளது ஆசை. விருப்­ப­முள்ள மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க நாங்­கள் தொடர்ந்து முயற்சி செய்­வோம்," என்­றார் 'மகூ­லம்' கலைக்­கூ­டத்­தின் நிறு­வ­னர் குமாரி மீன­லோ­சனி ஆனந்தன். கடந்த மூன்று ஆண்­டு­கா­ல­மாக இக்­க­லைக்­கூ­டம் இயங்கி வரு­கின்­றது.

"தமிழ்­மொ­ழி­யோடு கலை­யும் பிறந்­தது. தமிழ் இலக்­கி­யங்­களில் நடனக்­கலை­கள் சிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன," என்று தமிழ்க் கலை­க­ளின் தொன்மை குறித்­துப் பேசி­னார் நிகழ்ச்சியில் கலந்­து­கொண்டு சிறப்­பித்த முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கி­ருஷ்­ணன்.

நிகழ்ச்சியில் பங்­கேற்­றோ­ருக்கு 'மகூ­லம்' கலைக்­கூ­டத்­தில் பயில கட்­டணச் சலுகை வழங்­கப்­பட்­டது. இந்த நடன நிகழ்ச்­சியை https://www.youtube.com/watch?v=8cXWErGCRQs எனும் இணைப்­பில் காண­லாம்.