அழகு தமிழ் பழகும் இளையர்களுக்கான பட்டிமன்றம்

அழகு தமிழ் பழகும் இளையர்களுக்கான பட்டிமன்றம்

2 mins read
5d2916b8-6944-4abd-9621-ae289763e43c
இளையர்கள் பங்கேற்ற பட்டிமன்றத்தின் நடுவராக இருந்து வழிநடத்தினார் திரு முஹம்மது பிலால். படம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம் -

ஹர்­ஷிதா பாலாஜி

சிங்­கப்­பூர் தமி­ழர் இயக்­கம் நடத்­திய பட்­டி­மன்­றம், இக்­கால இளை­யர்­கள் தமிழ்­மொ­ழி­மீது கொண்­டு உள்ள ஆர்­வத்­தை­யும் அவர்­க­ளின் பேச்­சாற்­ற­லை­யும் வெளிப்­ப­டுத்­தும்­வண்­ணம் அமைந்­தது. சென்ற சனிக்­கி­ழமை மாலை மெய்­நி­க­ராக நடந்த 'அழகு தமிழ் பழகு' நிகழ்ச்சி­யின் சிறப்பு அங்­க­மாக இளை­யர் பட்­டி­மன்­றம் நேர­லை­யாக இடம்­பெற்­றது.

'இன்­றைய தமிழ்­மொ­ழிப் புழக்­கத்­திற்கு பெரி­தும் துணை­பு­ரி­வோர் இளை­யர்­களா? முதி­யோரா?' என்ற தலைப்­பில் நடந்த பட்­டி­மன்­றத்­தில் இளை­யர்­கள் அறு­வர் பங்­கேற்­ற­னர். திரு முஹம்­மது பிலால் பட்டி­மன்ற நடு­வ­ரா­கச் செயல்­பட்­டார்.

'மூத்­தோரே' என்று வாதா­டிய சுதர் செந்­தில், தனு­ஸ்ரீ பால­சுப்­ர­மணி­யம், முத்து சுவேதா ஆகி­யோர், இது­வரை தமிழ் வளர்ச்­சிக்­கான பாதையை வழி­வ­குத்­த­வர்­கள் மூத்­தோர்­தான் என்­றும் இக்­கால இளை­யர்­கள் வளர்ப்­பின் கார­ண­மா­க­வும் சுற்­றுச்­சூ­ழல் கார­ண­மா­க­வும் ஆங்­கில மோகத்­து­டன் தாய்­மொ­ழியை மறந்து வாழ்­கி­றார்­கள் என்­றும் கூறி­னர்.

இவர்­க­ளின் வாதங்­களை மறுத்­துப் பேசிய சுந்­தர வடி­வேலு பிர­பவ், தீபிகா பால­மு­ரு­கன், சேவாள் ஆகி­யோர், இக்­கால இளை­யர்­கள் தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யோடு எவ்­வாறு தமி­ழைப் பரப்­புகின்றனர் என்­றும் பல தமிழ்­மொழி நிகழ்ச்சி­களி­லும் அமைப்­பு­க­ளி­லும் ஆர்­வத்­து­டன் கலந்­து­கொள்­கி­றார்­கள் என்­றும் கூறி தங்­க­ளின் கருத்து­களை முன்­வைத்­த­னர்.

பின்­னர் இரு­த­ரப்­பி­ன­ரின் கருத்­து­க­ளை­யும் ஒப்­பிட்டு, அவற்­றின் மையக்­க­ருத்­தைச் சுருக்­க­மாக பார்­வை­யா­ளர்­க­ளுக்கு எடுத்­து­ரைத்த நடு­வர், இறு­தி­யில், இன்­றைய தமிழ்­மொழி புழக்­கத்­திற்­குப் பெரி­தும் துணை­பு­ரி­வோர் இளை­யோரே என்று தீர்ப்பு வழங்­கி­னார்.

பாலர் பள்ளி, தொடக்­கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட பல்­வேறு போட்­டி­க­ளுக்­கான முடி­வு­களும் நிகழ்ச்­சி­யில் அறி­விக்­கப்­பட்­டன.

பாலர் பள்ளி மாண­வர்­க­ளுக்கு போட்­டி­யின்­போது இரண்டு தமிழ் எழுத்­து­கள் கொடுக்­கப்­பட்­டன. அவ்­விரு எழுத்­துக்­களில் தொடங்­கும் சொற்­களை மாண­வர்­கள் கூற­வேண்­டும். பாலர் பள்ளி ஒன்று, இரண்டு பிரி­வு­களில் ஆக அதி­க­மான சொற்­க­ளைக் கூறிய கவி­யா­ழி­னி­யும் தீப­னேஷ் ராம்­கு­மார் பூஜா­வும் முதல் பரி­சைத் தட்­டிச் சென்­ற­னர்.

தொடக்­க­நிலை ஒன்று, இரண்டு வகுப்பு மாண­வர்­க­ளுக்கு பார­தி­யார், பாரதி­தா­சன் பாடல்­களைப் படைக்­கும் போட்டி நடத்­தப்­பட்­டது. ஆக சிறப்­பாகப் படைத்த ஸ்ரீ வினய் ராக­வேந்­தி­ர­னுக்­கும் ரித்­திக்­கா­வுக்­கும் முதல் பரிசு வழங்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, தொடக்­க­நிலை மூன்று, நான்கு வகுப்பு மாண­வர்­களுக்கு 'அழகு தமிழ் பழகு' என்ற தலைப்­பில் பேச்­சுப்­போட்டி நடத்­தப்­பட்­டது. இப்­போட்­டி­யில் தீக்‌ஷாவுக்­கும் எஸ்.ஜெ. அன்­ஷி­கா­வுக்­கும் முதல் பரிசு கிடைத்­தது.

தொடக்­க­நிலை ஐந்து, ஆறு வகுப்பு மாண­வர்­க­ளுக்­குக் கதை­சொல்­லும் போட்டி நடத்­தப்­பட்­டது. போட்­டி­யின்­போது காண்­பிக்­கப்­பட்ட படங்­களை வைத்து சிறப்­பா­கக் கதை சொல்­லிய கண்­ணன் வர்­ஷி­கா­வும் ஷண்­மு­கம் சாய்­ல­க்ஷ்மி­யும் முதல் பரி­சைப் பெற்­றார்­கள்.

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் தங்­கள் பெற்­றோ­ரு­டன் பொது அறிவு புதிர்ப் போட்­டி­யில் கலந்­து­கொண்­டார்­கள். தமிழ்­மொ­ழி­யைப் பற்­றிய கேள்­வி­க­ளுக்கு மிகச் சிறப்­பா­கப் பதி­ல­ளித்த புவ­னேஷ் சேக­ர­னுக்கும் அவ­ரின் தாயார் திரு­மதி செல்­விக்­கும் முதல் பரிசு வழங்­கப்­பட்­டது.