மாணவப் பேச்சாளர்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம்

மாணவப் பேச்சாளர்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம்

1 mins read

தமிழ்­மொழி விழா 2022ஐ ஒட்டி முற்­றி­லும் மாண­வப் பேச்­சா­ளர்­கள் பங்­கு­கொள்­ளும் பட்­டி­மன்­றம் நடை­பெ­ற­வுள்­ளது. நீண்ட இடை­வெ­ளிக்­குப் பின் நேர­டி­யாக நிகழ்ச்சி நடை­பெ­று­கிறது. நாளை மறு­நாள் 16ஆம் தேதி சனிக்­ கிழமை மாலை 5 மணிக்கு சுவா சூ காங் எம்­ஆர்டி நிலை­யத்­துக்கு எதிரே அமைந்­தி­ருக்­கும் கியட்­ஹோங் சமூ­க­மன்­றத்­தின் பன்­னோக்கு மண்­ட­பத்­தில் (தளம் 5) நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

தமிழ்­மொ­ழிக் கற்­ற­லில் வாழ்­வா­தா­ரம் உள்­ளது என்ற நம்­பிக்கை மாண­வர்­க­ளுக்கு இருக்­கி­றதா? இல்­லையா? என்ற தலைப்­பில் நடை­பெ­ற­வி­ருக்­கும் இந்த நிகழ்­வில் 'இருக்­கிறது' என்ற அணி­யில் கோபிகா, மகிஷா, ரோகித் குமார் ஆகி­யோ­ரும், 'இல்லை' என்ற அணி­யில் விஷ்­ணு­வர்­தினி, கவின் நிலா, இனியா ஆகி­யோ­ரும் வாதி­டு­கி­றார்­கள். திரு முகம்மது அலி நடுமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்