மூலநோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள்

மூலநோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள்

4 mins read
b6a5d21e-61fe-4ab6-a395-574701a3af67
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை பழங்களை உண்ண வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹெம­ராய்ட்ஸ் அல்­லது பைல்ஸ் என்று ஆங்­கி­லத்­தி­லும் மூலம் என்று தமி­ழி­லும் நாம் சொல்­லக்­கூ­டிய வார்த்தை, ஒரு நோயைக் குறிப்­பி­டு­வது அல்ல என்­பதே பல­ருக்­குத் தெரி­வ­தற்கு வாய்ப்­பில்லை.

பெருங்­கு­ட­லின் அடிப்­ப­குதி மற்­றும் மலப்­பு­ழை­யைச் சுற்­றி­யுள்ள சுவர்­க­ளின் மென்­மை­யான தசை­க­ளுக்­குள் பதிந்­துள்ள ரத்த நாளங்­களே மூலம் என்று மனித உடற்­கூறுயியலில் அழைக்­கப்­ப­டு­கிறது.

இந்த மூலங்­களில் நாட்­பட்ட உராய்வு, சிராய்ப்பு, அழற்சி ஏற்­படு­வ­தால் அவை வீக்­க­ம­டைந்து, ரத்­தக்­க­சி­வு­டன் பெரி­தா­கும்­போ­து­தான் மென்­மை­யான தசை­போன்ற ஒன்று மலத்­து­வா­ரத்­தின் உள்­ளும் வெளி­யி­லும் உரு­வாகி பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­கிறது.

மலக்­கு­ட­லில் இந்த அழுத்­தம் அதி­க­மா­னால், ரத்­தக்­க­சி­வு­டன் அழற்சி ஏற்­ப­டு­கிறது. இந்த நிலை வந்த பின்­பு­தான் அதை மூல­நோய் என்று நாம் அழைக்­கி­றோம்.

மூலநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெருங்­கு­ட­லில் ஏற்­படும் அதி­கப்­ப­டி­யான அழுத்­தத்­திற்­கும் அழற்­சிக்­கும் நாட்­பட்ட மலச்­சிக்­கல், நாட்­பட்ட வயிற்­றுப்­போக்கு, அதிக எடை தூக்கி வேலை செய்­தல், கர்ப்­ப­கா­லம், மிகுந்த சிர­மத்­து­ட­னும் அழுத்­தத்­து­ட­னும் மலத்தை வெளி­யேற்­றும் பழக்­கம் போன்­றவை மூல­நோய் ஏற்­ப­டக் கார­ணங்­க­ளாக உள்­ளன.

மூல­நோய் எந்த வய­தி­லும் ஏற்­ப­டக்­கூ­டி­யது என்­றா­லும், அது பெரும்­பா­லும் வய­தா­ன­வர்­க­ளையே அதி­கம் பாதிக்­கிறது. முது­மைப் பரு­வத்­தில் உள்­ள­வர்­க­ளின் ரத்த நாளங்­களில் ஏற்­படும் பல­வீ­னம், அதிக நேரம் உட்­கார்ந்தே இருப்­பது, மலம் கழிப்­ப­தைத் தள்­ளிப் போடு­வது, உடல் பரு­மன், நார்ச்­சத்து குறை­வான உணவு, அதிக கொழுப்­புள்ள உணவு, பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு, உட­லில் நீர் பற்­றாக்­குறை, குடல் சம்­பந்­த­மான இதர நோய்­கள், அதிக மன­அ­ழுத்­தம், பொது­வா­கவே குறைந்த நோய் எதிர்ப்­பாற்­ற­லு­டன் உடல் மெலிந்து இருத்­தல் போன்­ற­வை­யும் மூல­நோய் ஏற்­ப­டக் கார­ணங்­க­ளாக அமை­கின்­றன.

மூலநோயின் அறிகுறிகள்

மலப்­பு­ழை­யைச் சுற்­றி­லும் சிவந்­தி­ருத்­தல், மலப்­பு­ழை­யில் லேசான மற்­றும் அதி­க­மான வலி, மலம் வெளி­யே­றும்­போது வலி மற்­றும் ரத்­தக்­க­சிவு, குதத்­தைச் சுற்றி வீக்­கம், எரிச்­சல், அரிப்பு, தொட்டு உண­ரக்­கூ­டிய அள­வில் வலி­யு­டன்­கூ­டிய சதை போன்ற சிறிய கட்­டி­கள், மலம் வெளி­யே­றி­ய­பின் சளி­போன்ற திர­வம் வடி­தல் ஆகி­யவை மூல­நோய்க்­கான அறி­கு­றி­க­ளா­கும்.

மூலநோயையும் மலச்சிக்கலையும் தடுக்கும் நார்ச்சத்து

ஆரோக்­கி­ய­மாக இருக்­கும் நடுத்­தர வய­தி­ன­ருக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட நார்ச்­சத்­தின் அளவு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்­லது அவ­ரது 1,000 கிலோ கலோ­ரிக்கு 12 கிராம் என்­ப­தா­கும்.

இந்­திய சைவ உணவு ஒரு நாளைக்கு 225 கிராம் மலத்­தை­யும் மேற்­கத்­திய உண­வு­கள் 80 முதல் 170 கிராம் மலத்­தை­யும் உரு­வாக்­கும் தன்­மை­யைப் பெற்­றுள்­ளன.

மலத்­தின் அளவு 100 கிரா­முக்­குக் கீழே குறை­யும்­போது, குட­லில் கழி­வு­கள் தேங்கி, மலத்­தின் அளவு, அது வெளி­யே­றும் இடை­வெளி மற்­றும் நேரம் குறைந்து, இறுக்­கம் அடைந்து, மிகுந்த சிர­மத்­து­டன் வெளி­யேற்­றப்­ப­டு­கிறது.

ஆனால், போது­மான அளவு நார்ச்­சத்து நிறைந்த உண­வு­களை உண்­ணும்­போது, கழி­வுப்­பொ­ருள்­கள் குடல் வழி­யாக நக­ரும் நேரம் குறைக்­கப்­ப­டு­வ­து­டன், மலத்­தின் அளவு அதி­க­ரித்து, உட­னுக்­கு­டன் கழி­வு­கள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றன.

மூலநோயைத் தடுக்கும், குணப்படுத்தும் உணவுகள்

ஓட்ஸ், பார்லி, உளுந்து, பிசின் போன்ற திர­வப்­பொ­ருள் அதி­க­மாக இருக்­கும் உண­வு­களில் ஒன்­றை­யா­வது தின­மும் உண்ண வேண்­டும்.

தாவ­ரங்­க­ளின் செல்­களை இணைக்­கும் பசை போன்ற பொரு­ளான பெக்­டின், கொய்யா, ஆரஞ்சு, எலு­மிச்சை, சாத்­துக்­குடி, ஆப்­பிள் ஆகி­ய­வற்­றில் உள்­ளது.

கரை­யக்­கூ­டிய தன்­மை­யுள்ள நார்ச்­சத்து, மலத்தை குழ­கு­ழப்­புத் தன்­மை­யு­டன் மென்­மை­யாக்கி, இறு­கிய மலத்­தைத் தவிர்த்து, பெருங்­கு­ட­லி­லும் மலக்­கு­ட­லி­லும் மல­மும் நச்­சும் தேங்­கா­மல் இருக்க உதவி புரி­கிறது.

கரை­யாத நார்ச்­சத்­தா­கிய செல்­லு­லோஸ் என்­னும் பொருள் தவிடு நீக்­காத கோதுமை, அரி­சித் தவிடு, காய்­க­ளின் மென்­மை­யான தோல், தோல் நீக்­கப்­ப­டாத முழு பருப்பு வகை­கள் ஆகி­ய­வற்­றில் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன.

இவை குட­லில் நீரை உறிஞ்சி, மலத்­தின் அளவை அதி­கப்­ப­டுத்தி, நச்­சுப்­பொ­ருள்­களை வடி­கட்டி எளி­தில் வெளி­யேற்­று­கின்­றன. இத­னால், குட­லின் சுவர்­கள் சிராய்ப்பு இல்­லா­மல், மலப்­புழை நரம்­பு­களும் ரத்­தக்­கு­ழாய்­களும் பாது­காக்­கப்­படு­கின்­றன.

வெண்­டைக்­காய், தக்­காளி, கேரட், முளைக்­கட்­டிய வெந்­த­யம், உளுந்து, கொண்­டைக்­க­டலை போன்­ற­வற்றை தினந்­தோ­றும் உண­வில் சேர்க்­க­வேண்­டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்­லது மூன்று வேளை பழங்­களை உண்ண வேண்­டும். பழச்­சா­றாக அருந்­தா­மல், பழ­மாக அப்­ப­டியே சாப்­பி­டு­வது சிறந்­தது.

வீட்­டில் சமைக்­கப்­படும் உண­வாக இருந்­தா­லும் காரம், புளிப்பு, உப்பு அதி­கம் சேர்ப்­ப­தை­யும் சூடான உண­வு­களை அவ­ச­ர­மாக சாப்­பிடுவதை­யும் தவிர்த்­தல் நலம் பயக்­கும்.

மூலநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மூல­நோய் உள்­ள­வர்­கள் அதி­க­மான எளிய சர்க்­க­ரை­யு­டன் பள­ப­ளப்­பூட்­டப்­பட்ட மாவுச்­சத்து நிறைந்த பொருள்­க­ளான மைதா, சோள­மாவு போன்­ற­வற்­றை­யும் அவற்­றில் செய்த உண­வுப்­பொ­ருள்­க­ளை­யும் முடிந்­த­வரை தவிர்க்­க­வேண்­டும்.

சோடா மாவு மற்­றும் ஈஸ்ட் சேர்த்து செய்­யப்­பட்ட பேக்­கரி பொருள்­க­ளான பிரட், பிஸ்­கட், கேக் வகை­க­ளை­யும் பிற இனிப்பு வகை­க­ளை­யும் தவிர்த்­தால், பெருங்­கு­ட­லில் உள்ள நன்மை செய்­யும் நுண்­கி­ரு­மி­கள் காப்­பாற்­றப்­படும்.

அதிக உப்பு சேர்த்த ஊறு­காய் வகை­கள், வற்­றல் மற்­றும் இறைச்சி உண­வு­களை உண்­ப­தைக் குறைத்துக்­கொள்ள வேண்­டும். வினி­கர், சோடி­யம் பென்­சோ­யேட், அஜி­னோ­மோட்டோ, சிட்­ரிக் அமிலம் போன்ற வேதிப்­பொ­ருள்­கள் சேர்த்து பதப்­படுத்­தப்­பட்ட பழச்­சாறுகள், பாக்­கெட்­டில் அடைக்­கப்­பட்ட வற்­றல் வகை­கள், சாஸ் மற்­றும் ஊறு­காயை முடிந்­த­வரை தவிர்க்­க­வேண்­டும். இவை அனைத்­தும் மூல­நோய் அறுவை சிகிச்சை மேற்­கொண்டு பாது­காப்­பாக இருப்­பவர்­க­ளுக்கு மீண்­டும் சிராய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி, மலச்­சிக்­க­லு­டன் மூல­நோயை ஏற்­படுத்­தி­வி­டக்­கூ­டும்.