சிந்து சமவெளியில் காணப்படும் எழுத்துருக்கள், திராவிட மொழிக் குடும்பத்தின் தொல் மொழி என்று பல்லாண்டு காலமாக நிறுவி வருபவர் பேராசிரியர் அஸ்கோ பர்போலா.
உலகின் பழமையான மொழியாக பல அறிஞர்களால் கருதப்படும் தமிழ்மொழியின் வேர் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. சிந்து சமவெளி எழுத்துகள் 1921ல் கண்டுபிடிக்கப்பட்டன, 100 ஆண்டுகளுக்குப் பிறகும் எகிப்தியன், சுமேரியன், அக்காடியன் போன்ற மத்திய கிழக்கு எழுத்துகளைப் போலல்லாமல், அவை இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை.
1960கள் முதல் 1980கள் வரை கணினிப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி மூல ஆய்வை மேற்கொண்ட குழுவை அவர் வழிநடத்தினார். பல ஆண்டுகால ஆய்வின் அடிப்படையில் அவர் எழுதிய "சிந்து சமவெளி எழுத்துருவை அறிந்துகொள்வது" மிக முக்கிய நூலாகக் கருதப்படுகிறது.
இந்த உரையாடலில் அவர் தனது சில முக்கிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் குறித்துப் பேசுவார்.
பேராசிரியர் பர்போலா ஓர் இந்தியவியலாளர். தற்போது பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தெற்காசிய ஆய்வுகளின் ஓய்வுபெற்ற கௌரவ பேராசிரியராக உள்ளார். 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் அவருக்கு சமஸ்கிருதத்தில் இந்திய அதிபரின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை வழிநடத்துபவர் திரு சுப்பையா லக்ஷ்மணன்.
நாள்/நேரம்: நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 16) இரவு 8 மணி
இணைப்பு: https://www.facebook.com/sgtamilorg/